
1/28. விசாரணை நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமும்.
-
by admin.service-public.in
- 26
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
28. விசாரணை நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமும்.
மேற்சொல்லப்பட்ட குற்றவியல் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றங்கள் என்று சொல்வார்கள். காரணம் இம்மன்றங்கள் நேரடியாக சாட்சிகளை விசாரித்து முடிவெடுக்கின்றன என்பது தான். இம்மன்றங்கள் கூட சில வழக்குகளில் விரிவான விசாரணை செய்வதில்லை. இதற்கு காரணமாக வழக்கை அற்ப வழக்காகதான் விசாரிப்போம் என சொல்வார்கள் அதே போல் உயர் நீதிமன்றம் விசாரணை நீதிமன்றம் அல்ல என்றும், அது மேல் முறையீட்டு நீதிமன்றம் என்றும் வழக்கத்தில் சொல்கிறார்கள் இது தவறு.
நீதிமன்றம் என்றாலே உண்மை என்ன என்பதை கண்டு பிடிக்க விரிவான விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கத்தானே? என்ற சிறு விசயத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், நீங்கள் புரியவையுங்கள் குற்றவியல் நடுவர் மன்றத்திற்கு அமர்வு நீதிமன்றம் மேல் முறையீடு நீதிமன்றமாகவும், அமர்வு நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் மேல் முறையீடு நீதிமன்றமும் ஆகும்.
மேல் முறையீடு நீதிமன்றம் என்பது கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சட்டபடி சரியானது தானா? என மேலோட்டமாக பரிசீலனை செய்வது தான் எனவும் கூறுகிறார்கள். இதுவும் சட்டபடி தவறான ஒன்றுதான்.
உண்மையில் தரப்பினர்களை விசாரிப்பதோடு, கீழமை ஏன் அவ்வாறு முடிவெடுத்தன? நீதிமன்றங்கள் என்பதற்கான சட்டபடியான தன்னிலை விளக்கத்தையும் கீழமை நீதிமன்ற நீதிபதியிடம் இருந்து மேல் நீதிமன்றம் பெற்று அதையும் கவனத்தில் கொண்டு தீர்ப்புரைக்க வேண்டும் என கு.வி.மு.வி 404-இன் படி, அமர்வு நீதிமன்றத்திற்க்கும், உயர்நீதிமன்றத்திற்க்கும் சட்ட கடமை விதிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவில் மேல் முறையீட்டு நீதிமன்றமாக கருதப்படும் உயர்நீதிமன்றம் ஒரு வழக்கை விசாரணை செய்யும் போது அமர்வு நீதிமன்றம் போலவே விசாரணை செய்ய வேண்டும் என “குற்ற விசாரணை முறை விதி 474 தெளிவு படுத்துகிறது”. இது தவிர மேலும் இப்படி விசாரணை செய்ய வேண்டிய சூழ்நிலை என்னவென்று பார்த்தால்,
- அ) ஒரு குற்றவியல் நீதிமன்றத்தில் நேர்மையோடும், நடுநிலையோடும் விசாரனையை அல்லது பரிசீலனையை நடத்த இயலாது,
- ஆ) மிகவும் சிக்கலான சட்ட பிரச்சனைகள் எழும் என்ற சாத்திய கூறுகள் இருக்கின்றன,
- இ) தரப்பினர்களுக்கும், சாட்சிகளுக்கும் பயனுள்ளதாய் இருக்கும் அல்லது அக்கரையான நீதி வழங்க வேண்டியது அவசியமானது,
என உயர்நீதிமன்றம் கருதினால் கு.வி.மு.வி 407-ன் படி அந்த வழக்கைத் தமக்கு மாற்ற உத்தரவிட்டு விசாரணை செய்யலாம். எனவே உயர்நீதிமன்றம் ஒரு மேல் முறையீட்டு நீதிமன்றம்தான் என்பதும் அங்கு விரிவான விசாரணை நடத்தப்படாது என கூறுவதும் சட்ட அறியாமையின் பாற்பட்டதாகும்.

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 28. விசாரணை நீதிமன்றமும், மேல் முறையீட்டு நீதிமன்றமும். மேற்சொல்லப்பட்ட குற்றவியல் மற்றும் அமர்வு நீதிமன்றங்கள் அனைத்தும் விசாரணை நீதிமன்றங்கள் என்று சொல்வார்கள். காரணம் இம்மன்றங்கள் நேரடியாக சாட்சிகளை விசாரித்து முடிவெடுக்கின்றன என்பது தான். இம்மன்றங்கள் கூட சில வழக்குகளில் விரிவான விசாரணை செய்வதில்லை. இதற்கு காரணமாக வழக்கை…