GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி?

நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி?

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

நுகர்வோர்
நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது எப்படி?

ஒரு நுகர்வோர் பணம் கொடுத்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் குறைபாடு ஏதேனுமிருப்பின் நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கலாம். அதன் மூலம் தவறு செய்தோருக்கு தண்டனையோ, அபராதமோ வாங்கித்தர முடியும்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். இதன்படி வங்கி, காப்பீடு, நிதி, போக்குவரத்து, பொழுதுபோக்கு, மருத்துவ சேவை, உணவு விடுதி, மின்சாரம் என எந்த விஷயங்களில் நுகர்வோரின் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் நுகர்வோர் மன்றத்தை அணுகலாம். நுகர்வோர் மன்றத்தில் புகாரளிப்பது எப்படி? என்னென்னெ ஆவணங்கள் தேவை ஆகிய விவரங்களை இங்கே பார்க்கலாம்.

#நுகர்வோர் #என்பவர் #யார்?

ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ பணம் கொடுத்துப் பெறும் யாவரும் நுகர்வோர்களே.
உதாரணமாக: மளிகைக் கடையில் பொருள் வாங்கினாலும், மருத்துவமனையில் காய்ச்சலுக்குப் பார்த்தாலும் நீங்கள் நுகர்வோரே.

#யார் / #யாரெல்லாம் புகாரளிக்கலாம்?

ஒரு சேவையைப் பெறுகிற, பொருளை வாங்குகிற எந்த ஒரு நுகர்வோரோ, பதிவு செய்த தன்னார்வ நுகர்வோர்அமைப்புகளோ புகார் அளிக்கலாம். தனி நபராகவோ, ஒரே நோக்கம் கொண்ட பல நுகர்வோர்களின் சார்பாக கூட்டாகவோ புகாரளிக்கலாம்.
ஒரு சேவையை அல்லது பொருளை மற்றவர்களுக்கு விற்பதற்காக வாங்குகிற அல்லது மதிப்புக் கூட்டி விற்கிறவர்கள் நுகர்வோர் அல்ல.

#ஏன் #நுகர்வோர் #மன்றத்தில் #புகாரளிக்க #வேண்டும்?

காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்த்து குறுகிய காலத்திலும், அதே சமயம் அதிக செலவில்லாமலும் நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்க எல்லா மாவட்டங்களிலும் நுகர்வோர் மன்றம் செயல்படுகின்றன.
நுகர்வோருக்கு சேவைக்குறைபாடு ஏற்பட்டு அதை கடிதம் வாயிலாக சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவித்தும் அதற்கு நடவடிக்கை ஏதும் எடுக்காத பட்சத்தில் நுகர்வோர் மன்றத்தை அணுக வேண்டும்.

#எங்கே #புகாரளிப்பது?

நுகர்வோர் எந்த நுகர்வோர் குறைதீர் மன்றத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட எல்லைக்குள் இருக்கிறாரோ அங்கே புகாரளிக்கலாம் அல்லது எந்த இடத்தில் பொருள் வாங்கப்பட்டதோ அல்லது எந்த இடத்தில் நுகர்வோர் உரிமை மீறப்பட்டதோ அந்த இடத்திற்குட்பட்ட மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் புகாரளிக்கலாம்.

#எப்படி #விண்ணப்பிப்பது?

ஒரு வெள்ளைத்தாளில் (நான்கு நகல்கள்) முழு விவரங்களையும் பதிவு செய்து, இதற்கான அனைத்து ஆவண நகல்களையும் இணைத்து பொருள் மதிப்பிற்குத் தகுந்தவாறு நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் நேரடியாகவோ, பதிவுத் தபால் மூலமாகவோ, தொலைநகல் மூலமாகவோ, விரைவுத் தபால் மூலமாகவோ வழக்குகளைப் பதிவு செய்து, இந்த வழக்கின் நகலை எதிர்த்தரப்பாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். இதற்கு முத்திரைத்தாள் கட்டணம் ஏதும் செலுத்தத் தேவையில்லை.

நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்கத் தேவையான தகுதிகள்:

புகாரளிப்பவர் நுகர்வோராக இருக்க வேண்டும் அல்லது அவர் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.
• சேவைக் குறைபாடு அல்லது பிரச்சினை ஏற்பட்டு இரண்டு வருடங்களுக்குள் புகாரளிக்க வேண்டும்.
• எந்த ஒரு புகாருக்கும் ஆதாரங்கள் இருக்க வேண்டும்.

#என்னென்ன #ஆவணங்கள் #சமர்ப்பிக்க #வேண்டும்?

நுகர்வோர் மன்றத்தில் புகாரளிக்க ஆதாரங்கள் அவசியம். எனவே எந்த சேவைக் குறைபாடு ஏற்படுகிறதோ அவர்களிடம் முதலில் புகார் செய்ததற்கான ஒளி நகல், பொருள் / சேவை பெற்ற ரசீதுகள், கடிதப் போக்குவரத்துகள் என அனைத்து ரசீதுகளின் நகல்களையும் சமர்ப்பிக்க வேண்டும். சேவைக் குறைபாட்டைப் பொறுத்து ஆதாரங்களின் தன்மையும் வேறுபடும்.

#யார் #மீதெல்லாம் #புகாரளிக்க #முடியும்?

நுகர்வோருக்குப் பொருட்களை விற்பனை செய்யும், பணம் பெற்றுக் கொண்டு சேவையை வழங்கும் எந்த நிறுவனத்தின் மீதும் புகாரளிக்க முடியும். அரசுத் துறை, தனியார் துறை என்ற பாகுபாடு கிடையாது.

#ஆன்லைனில் #புகாரளிக்க

நுகர்வோர் மன்றத்தை அணுகும் முன் பேச்சுவார்த்தைக்கு அல்லது உடனடி நிவாரணம் கிடைக்க மாநில நுகர்வோர் உதவி மையத்தை அணுகலாம். நுகர்வோர் தனக்கு ஏற்பட்ட சேவைக் குறைபாட்டைக் கூறி அதற்கு ஆலோசனை பெறலாம். பின்னர் இவர்களது வழிகாட்டுதலின் படி நுகர்வோர் மன்றத்தை அணுகலாம்.

 

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

HIT AND RUN டிரைவ் செய்து மரணம் பயம் உண்டாக்குபவர் மீது வழக்கு போடலாம்! 10 ஆண்டுகள் தண்டனைHIT AND RUN டிரைவ் செய்து மரணம் பயம் உண்டாக்குபவர் மீது வழக்கு போடலாம்! 10 ஆண்டுகள் தண்டனை

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 13 Post Content குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு

Youtube image-

Do not file a complaint at the police station about fraudulent documents, and impersonation, fake documents! மோசடி பத்திரம், ஆள்மாறாட்டம், பற்றி போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்காதீங்க!Do not file a complaint at the police station about fraudulent documents, and impersonation, fake documents! மோசடி பத்திரம், ஆள்மாறாட்டம், பற்றி போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுக்காதீங்க!

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 11 அனைவருக்கும் வணக்கம். நான் உங்கள் செல்வம் பழனிசாமி. நம்ம தமிழ்நாட்டுல, போலி ஆவணங்கள் மூலமா, என்னுடைய நிலத்தை அபகரிச்சி, மோசடி செஞ்சி

காவல் நிலையத்தில் கொடுத்த புகாருக்கு FIR போடாமல் காலம் தாழ்த்தி வந்தால் என்ன செய்யவேண்டிம்.காவல் நிலையத்தில் கொடுத்த புகாருக்கு FIR போடாமல் காலம் தாழ்த்தி வந்தால் என்ன செய்யவேண்டிம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 18 காவல் நிலையத்தில் புகார் வழங்கி காவல் துறையினர் 7 தினங்களாக FIR பதிவு செய்யாமல் எதிரியிடம் புகார் மனு பெற்று கொண்டு

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)