GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் – மதுரை ஐகோர்ட்

கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் – மதுரை ஐகோர்ட்

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் – மதுரை ஐகோர்ட்டு கருத்து

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த குருசாமி என்பவர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரம் மாவட்டம் செல்வநாயகபுரத்தில் தனிநபர்கள் கோவில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் உரிய இடத்தில் கோவில் கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் பெறவில்லை. இதற்காக திரட்டப்பட்ட நிதியை முறைகேடு செய்கின்றனர். இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரினோம். இதுவரை எந்த விசாரணையும் நடக்கவில்லை. எனவே தனிநபர்களின் நடவடிக்கைக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி விவேக்குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

இதுபோன்ற மனுக்களை காலவரையின்றி நிலுவையில் வைப்பதற்குப் பதிலாக, விரைவாக அந்த மனுவை விசாரித்து ஏதாவது ஒரு பொருத்தமான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டிய கடமை மாவட்ட கலெக்டருக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. இதுபோன்ற மனுதாரர்களின் மனுவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பரிசீலிக்காதது கடமையை மீறுவதாகும்.

எனவே இந்த கோர்ட்டு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, மனுதாரரின் மனுவை குறிப்பிட்ட காலத்துக்குள் பரிசீலிக்க உத்தரவிட முடிவு செய்கிறது.அதன்படி மனுதாரர் மனுவை ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் பரிசீலித்து அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிக்க வாய்ப்பு அளித்து முறையாக விசாரித்து 8 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Courtesy of:
தினத்தந்தி
12April’25

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

2 thoughts on “கோரிக்கை மனுக்களை அதிகாரிகள் கிடப்பில் போடுவது கடமையை மீறுவதாகும் – மதுரை ஐகோர்ட்”

  1. I have been browsing online more than three hours today yet I never found any interesting article like yours It is pretty worth enough for me In my view if all website owners and bloggers made good content as you did the internet will be a lot more useful than ever before

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

list of 100 important legal terms along with their meanings.list of 100 important legal terms along with their meanings.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 19 All India Advocates Welfare Associate (AIAWA), list of 100 important legal terms along with their meanings.

காவல்துறையை குற்றவியல் நடுவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.காவல்துறையை குற்றவியல் நடுவர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 5 நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் தனிநபர் புகாரில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 200 ன் கீழ் குற்றவியல் நடுவர் தாமாக முன்வந்து

RTI Question and Replies from Police

RTI Question and Replies from Police for Barricade | காவல் துறையிடமிருந்து இரும்பு தடுப்புக்காக த.பெ.உ. கேள்விகளும் பதில்களும்.RTI Question and Replies from Police for Barricade | காவல் துறையிடமிருந்து இரும்பு தடுப்புக்காக த.பெ.உ. கேள்விகளும் பதில்களும்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 6 இந்தியாவில் அதிக இடங்களில் ரோடுகளில் போடப்பட்டுள்ள BARRICADE எனப்படும் இரும்பு தடுப்பால், வாகன ஓட்டிகளுக்கு பலவகையான சிரமங்களும், பல வேளைகளில் விபத்துக்களும்,

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)