குற்ற விசாரணைகள்

1/20. எழுத்துப் பிழை என்ன செய்யும்?

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 20

நாம் எதாவது பேசும் போது தவறாகப் பேசி விட்டாலே பிரச்சினைதான். இதைக் கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் நாம் சொல்லியது எழுத்தில் இருந்தால் வேறு வினையே வேண்டாம்.

எனவே எதை எழுதினாலும் மிகவும் கவனத்துடன் எழுதி விட்டு பின்னர் ஒரு முறைக்கு இருமுறை நீங்கள் படிப்பதோடு உங்களுக்கு நம்பிக்கையானவரிடம் கொடுத்து சரியாக இருக்கிறதா? என கருத்துக் கேட்டுச் செய்வது நல்லது.

அப்படியானால் எழுத்துப் பிழையே இருக்க கூடாதா என்ற கேள்வி எழுகிறதல்லவா? கண்டிப்பாக இருக்கலாம். அப்படி இருந்தால் கூட கூட்டப்படி குற்றம் அல்ல. ஏனெனில்

எழுத்து பிழை என்பது இயல்பாக ஏற்படும் ஒன்றுதான் என்றாலும் எக்காரணம் கொண்டும் அந்த பிழை, கருத்தை மாற்றும் பிழையாக இருக்க கூடாது என்பது மிகவும் முக்கியம்.

நீங்க என்னதான் கண்ணுல விளக்கெண்ணையை ஊத்திகிட்டு எழுதினாலும், படித்து பார்த்தாலும் அவ்வப்போது சில கருத்துப் பிழைகள் இருக்க தான் செய்யும். இது உங்களுக்கு மட்டும்தான் அப்படீங்கிறதில்ல. பிழை திருத்துவதையே தொழிலாகக் கொண்டவர்கள் செய்த திருத்தத்தில் கூட சில பிழைகள் இருக்கத்தான் செய்கின்றன என்ற காரணத்தால் இந்நூலின் முதல் பதிப்பை கூட நானே பிழை திருத்தி இருந்தேன்.

அந்த நூல் குறித்து பத்திரிகைகள் சில தங்களின் மதிப்புரையில் எழுத்துப் பிழை மற்றும் ஒற்றுப் பிழை இருப்பதை சுட்டிக்காட்டியதோடு, விடுதலை நாளிதழில் இந்த பிழைகளை திருத்தம் செய்தும் கொடுத்ததுடன், விருது கிடைக்கவும் வாய்ப்பு உண்டு என்றார்கள், விருதுக்காக இல்லாவிட்டாலும், பிழை இருக்குன்னு தெரிந்த பிறகு, யாராக இருந்தாலும் அதை திருத்தி கொள்வது தானே

நியாயம். அதன் படி திருத்தங்கள் இப்பதிப்பில் என்னாலேயே செய்யப்பட்டு உள்ளன.

பிழை இருப்பதற்க்கு காரணம் கண்டிப்பாக உங்களின் கண் கோளாறு மட்டும் கிடையாது. உங்களின் எழுத்தில்

உள்ள செயல்பாடுகள் என்ன? என்று மிகச் சரியாக செயல்படுகிறவர்களின் ஞானம் தான். இதை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இதை திருத்திக்கொள்ள சட்டப்படி உங்களுக்கு வாய்ப்பு உண்டு.

உதாரணமாக “நீங்கள் ஒரு கருத்தில் மனு அல்லது பதில் அல்லது எதிர் உரை போடுகிறீர்கள்”. அதற்கு எதிர்த்தரப்பில் பதில் கொடுக்கும் போது தான், நீங்கள் சொன்ன வாக்கியத்திற்கு இப்படியும் ஒரு அர்த்தம் கொடுத்து பதில் கொடுக்க முடியுமா? அப்படீங்கிற நிலையில் அதை நிச்சயம் கருத்துப்பிழை உருவாகினால், கருத்துப்பிழை ஏற்படாதவாறு வேறு வார்த்தையால் மாற்றி அமைக்க முடியும். இந்த சூழ்நிலையில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் இவைகளைத் திருத்தலாம். இதற்கு குற்ற விசாரணை முறை விதிகள்1973-ன் விதி 2(7)-ன் கீழ் பரிசீலனை மனுவாக தாக்கல் செய்யலாம்.

எழுத்துப்பிழையால் வரும் கருத்து பிழைக்கு சில எடுத்துகாட்டு இதோ:-

அ) நாணயம் = சில்லரைக் காசு

ஆ) நானயம் = நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை

இ) நாநயம் = இனிமையான சொல்

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 20 நாம் எதாவது பேசும் போது தவறாகப் பேசி விட்டாலே பிரச்சினைதான். இதைக் கூட எப்படியாவது சமாளித்து விடலாம். ஆனால் நாம் சொல்லியது எழுத்தில் இருந்தால் வேறு வினையே வேண்டாம். எனவே எதை எழுதினாலும் மிகவும் கவனத்துடன் எழுதி விட்டு பின்னர் ஒரு முறைக்கு இருமுறை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *