
1/24. இயல்பான அதிகாரம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும்.
-
by admin.service-public.in
- 24
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
24. இயல்பான அதிகாரம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும்.
பொதுவாக எல்லோருக்கும் இயல்பான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை எவர் ஒருவரும் நல்ல விசயங்களை செய்வதற்காகப் பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தும் சில சமயங்களில் குற்றம் கூட நிகழலாம். அப்படி நிகழ்ந்தாலும் அதைக் குற்றம் என கருத முடியாது.
இந்த இயல்பான அதிகாரம்மக்களுக்கு இந்திய சாசனக் கோட்பாடு 51 அ- இன் படியும், அனைத்து வகையான நீதிமன்றங்களுக்கும் நீதிமன்ற சாசன உறுபு 165-இன் படியும் வழங்கப்பட்டுள்ளது. குற்றவியல் நீதிமன்றங்களை பொருத்த வரை கு.வி.மு.வி 2(7)-இன் படி வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகளை பொருத்த அளவில் இந்திய தண்டனை சட்டம் பிரிவு 78-இன் படி வழங்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் எக்காரணத்தை கொண்டும் நியாயத்துக்கு புறம்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது. ஒரு வேளை அப்படி பிறப்பித்தால் அந்த உத்தரவை ஏற்றுக்கொள்ள வேண்டியவர் ஏற்று கொண்டால் மட்டுமே அது இந்திய தண்டனை சட்டம் 1860-ன் பிரிவு 78-இன் படி நல்லெண்ணத்தின் பேரில் பிறப்பிக்கபட்டது அல்லது ஏற்று கொள்ளபட்டது என எடுத்து கொள்ளலாம்.

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 24. இயல்பான அதிகாரம் நல்ல எண்ணமாக இருக்க வேண்டும். பொதுவாக எல்லோருக்கும் இயல்பான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை எவர் ஒருவரும் நல்ல விசயங்களை செய்வதற்காகப் பயன்படுத்தலாம். இப்படி பயன்படுத்தும் சில சமயங்களில் குற்றம் கூட நிகழலாம். அப்படி நிகழ்ந்தாலும் அதைக் குற்றம் என கருத முடியாது. இந்த…