
1/23. நீதிமன்ற இடத்தை மாற்று!
-
by admin.service-public.in
- 21
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
23. நீதிமன்ற இடத்தை மாற்று!
இந்த நீதிமன்றத்துல தப்பு நிறைய நடக்குது. அதனால என்னோட வழக்க வேறு நீதிமன்றத்துக்கு மாத்துங்க அப்படீன்னு மனுப் போட்டு அவரவர்கள் கோர்ட்டை மாற்றி கொண்டு போன கதையெல்லாம் செய்திதாள்களில் படிச்சிருப்பிங்க. ஆனா இங்கு நீதிமன்றத்தையே வேறு இடத்துக்கு மாற்றுங்கள் என மனு கொடுக்கப்பட்டுள்ளது குறித்து படிக்கப் போகிறீர்கள். ஆச்சரியத்தின் உச்சிக்கே போக போகிறீர்கள்… ஆம்!
குற்ற விசாரணை முறை விதி 327- ன் படி குற்ற வழக்களை விசாரிக்க கூடிய அனைத்து நீதிமன்றங்களும் திறந்த நீதிமன்றங்கள் தான்.
ஆனாலும் இரயில்வே தொடர்பான குற்ற வழக்குகளை விசாரித்து வரும் கு.வி.மு.வி 18-இன் படியான சிறப்புப் பெருநகர குற்றவியல் நடுவர் மன்றம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் உள்ளே கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருப்பது சட்டபடி தவறு என்பதைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தின் இடத்தை மாற்ற கோரி மனு உயர்நீதிமன்றத்திலும், அதன் நகல் சம்பந்த பட்ட அந்த நீதிமன்றத்திலும் கொடுக்கப்பட்டு அம்மனு மத்திய அரசின் இரயில்வே துறைவரை சென்று ஒரு வருடத்திற்கு மேலாகியும் சட்டத்திற்கு புறம்பான நீதிமன்றம் மாற்றப்படாமல் சட்டத்திற்குப் புறம்பாகவே இன்று வரைசெயல்பட்டுக் கொண்டு உள்ளது.
சட்டத்திற்க்கு புறம்பானது என நீதிபதிகளுக்கு தெரியாததையே மன்னிக்க இயலாது என்ற நிலையில், தெரிந்த பின்னும் மாற்றாமல் அல்லது நீதிமன்றத்தை மூடாமல் இருப்பதை எப்படி மன்னிக்க முடியும்?
இந்த நீதிமன்றம் சட்டத்துக்குப் புறம்பாக ஐம்பதாண்டு காலத்திற்கும் மேலாக செயல்பட்டு உள்ளது என்றால், அதில் பணியாற்றிய நீதிபதிகள் எந்த அளவிற்கு சட்ட அறிவில்லாதவர்களாக இருந்து இருக்கிறார்கள் என்று புரிஞ்சிதா… அதனால் சட்டத்தில் என்னை விட, “ஏன் நீங்கள் சிறந்து விளங்க முடியாது!”

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 23. நீதிமன்ற இடத்தை மாற்று! இந்த நீதிமன்றத்துல தப்பு நிறைய நடக்குது. அதனால என்னோட வழக்க வேறு நீதிமன்றத்துக்கு மாத்துங்க அப்படீன்னு மனுப் போட்டு அவரவர்கள் கோர்ட்டை மாற்றி கொண்டு போன கதையெல்லாம் செய்திதாள்களில் படிச்சிருப்பிங்க. ஆனா இங்கு நீதிமன்றத்தையே வேறு இடத்துக்கு மாற்றுங்கள் என மனு…