குற்ற விசாரணைகள்

1/17. சட்டத் தமிழை எப்படி புரிந்து கொள்வது?

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 

மிழில் இலக்கணத் தமிழ், இலக்கியத் தமிழ், செய்யுள் தமிழ், உரை நடைத் தமிழ், பேச்சுத் தமிழ் என்பது போலத்தான் சட்டத் தமிழும், முதலில் இலக்கணத்தை படிக்கும் போது எப்படிப் புரியாதோ, அதேப்போல் தான் சட்டத்தை படித்தாலும் புரியாது. செய்யுள் அல்லது

திருக்குறளில் சொல்ல வேண்டியதை விரிவாக சொல்லாமல் சுருக்கி சொல்லி இருப்பார்கள். அதற்கு நேர் மாறாக, சட்டத்தில் சொல்ல வேண்டியதை நேராகச் சொல்லாமல் சுற்றி சுற்றி சொல்லியிருப்பார்கள்.

  செய்யுள் அல்லது திருக்குறளின் தன்மையே சுருங்க சொல்லுதல் தான். அதே போல் சட்டத்தில் சுற்றி சுற்றி சொல்ல காரணமென்னன்ெறால், “புரியாமைதான்” மொழிப் பெயர்பாளர்கள் என்ன நினைக்கிறார்கள் எனில் மொழி பெயர்ப்பது மட்டும்தான் நமது பணி, அது

படிக்கிறவங்களுக்கு புரியுமா அல்லது புரியாதா? என்பதைப் பற்றி எல்லாம் அவர்கள் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

  ஆனாலும் எதிலும் ஆர்வம் வந்து விட்டால் கடினமானது கூட மிகவும் எளிதாகி விடும். இது சட்டத்திற்கு மட்டும் விதி விலக்கா இருக்க முடியமா என்ன?

என்பதற்கு இந்த நூல் ஒரு நல்ல சான்றாக இருக்கும் என நம்புகிறேன். எனவே எது ஒன்றும் விளங்குவதும் விளங்காததும் உங்களின் எண்ணத்தில்தான் இருக்கிறது.

முக்கியமாக எதை எப்படிப் படிப்பது என்பது மிகவும் முக்கியம் சட்டத்தைப் பொறுத்த மட்டில் மேலோட்டமாக படித்துக் கொண்டே வர வேண்டும். நன்றாக புரியும் விசயத்தை மட்டும் அடிக்கோடிட்டுத் தனிமைப் படுத்த வேண்டும். நன்றாக புரிகிறது என்றால் என்ன அர்த்தம்? அது உங்களுக்கு முக்கிய தேவை என உணர்கிறீர்கள்.

இப்படி ஒவ்வொன்றாக அடிக்கோடிட்டுப் படிக்க ஆரம்பித்தால் ஒரு கால கட்டத்தில் அடிக்கோடிடும் எண்ணம் நின்று விடும் அப்படீன்னா என்ன அர்த்தம்?எல்லாமே தேவையானதுதான் என்ற நிலைக்கு வந்து விட்டீர்கள்! தேவைப்படும் போது எந்த பிரிவையும் எளிதாக கண்டு பிடித்து விட முடியும் என்ற நம்பிக்கைக்கும் வந்து விட்டீர்கள். மொத்தத்தில் சட்டம் நன்றாகவே உங்களுக்கு விளங்க ஆரம்பித்து விட்டது என்பதுதான் அர்த்தம்.

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  தமிழில் இலக்கணத் தமிழ், இலக்கியத் தமிழ், செய்யுள் தமிழ், உரை நடைத் தமிழ், பேச்சுத் தமிழ் என்பது போலத்தான் சட்டத் தமிழும், முதலில் இலக்கணத்தை படிக்கும் போது எப்படிப் புரியாதோ, அதேப்போல் தான் சட்டத்தை படித்தாலும் புரியாது. செய்யுள் அல்லது திருக்குறளில் சொல்ல வேண்டியதை விரிவாக சொல்லாமல் சுருக்கி சொல்லி இருப்பார்கள். அதற்கு நேர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *