
1/25. நீதிமன்றங்கள் இரண்டு வகை.
-
by admin.service-public.in
- 22
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
25. நீதிமன்றங்கள் இரண்டு வகை.
பொதுவாக நீதிமன்றங்கள் இரண்டு வகைதான். இதனை அடிப்படையாக கொண்டு பல நீதிமன்றங்களும், அதில் பல பிரிவுகளும் உள்ளன.
1) குற்றவியல் நீதிமன்றம் என்கிற கிரிமினல் கோர்ட்
2) உரிமையியல் நீதிமன்றம் என்கிற சிவில் கோர்ட்
நீதிமன்றங்கள் குற்றவியல் மற்றும் உரிமையியல் என்ற இரண்டு வகைதான் என்றாலும் அதை அடிப்படையாக கொண்ட நீதிமன்றப் பிரிவுகள் பல உள்ளன. குற்றவியலைப் பொறுத்த வரையில் மாவட்டம் மற்றும் மாநகரம் என பிரிக்கப்பட்டு அதிலும் தகுதியின் அடிப்படையில் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தை பொறுத்த வரை
அ) மாவட்டக் குற்றவியல் நீதிமன்றம்
ஆ) நீதித்துறை நடுவர் மன்றம்
இ) சிறப்பு நீதித்தறைக் குற்றவியல் நடுவர் மன்றம்
ஈ) முதன்மைக் குற்றவியல் நடுவர் மன்றம்
மாநகரத்தைப் பொருத்த வரை
அ) மாநகரக் குற்றவியல் நடுவர் மன்றம்
ஆ) மாநகர சிறப்புக் குற்றவியல் நடுவர் மன்றம்
இ) பெருநகர முதன்மைக் குற்றவியல் நடுவர் மன்றம்
மாவட்டம் அல்லது மாநகரத்தை பொறுத்த வரை அமர்வு நீதிமன்றம்
அ) மாவட்ட அமர்வு நீதிமன்றம்
ஆ) கூடுதல் அமர்வு நீதிமன்றம்
இ ) உதவி அமர்வு நீதிமன்றம்
மாவட்டம் மற்றும் மாநகரத்தில் சில சிறப்பான நீதிமன்றங்கள்
- அ) இளம் குற்றவாளிகளுக்கான நீதிமன்றம்
- ஆ) மகளிர் நீதிமன்றம்
- இ) போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம்
- ஈ) மத்தியக் குற்றப் புலனாய்வு நீதிமன்றம்
- உ) பொருளாதாரக் குற்ற புலனாய்வு நீதிமன்றம்
- ஊ) விரைவு நீதிமன்றம்
- எ) மனித உரிமை நீதிமன்றம்
- ஏ) தனி நீதிமன்றம்
என்பன. இவைகளை தவிர மேலும் இது போன்ற பல வகையான நீதிமன்றங்கள் அந்தந்த சிறப்பான சட்ட விதிகளின் கீழ் ஏற்படுத்தப்பட்டு இயங்கி வருகின்றன.

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 25. நீதிமன்றங்கள் இரண்டு வகை. பொதுவாக நீதிமன்றங்கள் இரண்டு வகைதான். இதனை அடிப்படையாக கொண்டு பல நீதிமன்றங்களும், அதில் பல பிரிவுகளும் உள்ளன. 1) குற்றவியல் நீதிமன்றம் என்கிற கிரிமினல் கோர்ட் 2) உரிமையியல் நீதிமன்றம் என்கிற சிவில் கோர்ட் நீதிமன்றங்கள் குற்றவியல் மற்றும் உரிமையியல் என்ற…