குற்ற விசாரணைகள்

1/11. சட்டம் தெரிந்து கொள்வது சாத்தியமா?

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 14

நீங்க பெரும்பாலும் சட்டப்படிதான் வாழ்ந்து வருகிறீர்கள். ஆனா சட்டம் தெரியாம வாழ்ந்து வர்றீங்க. அப்படீன்னு நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. ஆனால் இதுதான் உண்மை!

சட்டபடி நீங்க வாழ்கிறதால்தான் வெளியில இருக்கீங்க. அப்படி இல்லேன்னா எங்க இருப்பீங்க? ஜெயில்லதானே! இப்ப புரியுதுங்களா நான் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை அப்படீன்னு. சுவையான ஒன்றைச் சாப்பிடுகிறோம். அதில் சுவைக்காக என்ன சேர்க்கப்பட்டிருக்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விருப்பப்படுவீர்கள் இல்லியா? அது போல தான் சட்டமும். வாழ்க்கை சுவையுள்ளதாக இருக்க வேண்டும் என்று நினை னச்சிங்கன்னா… கண்டிப்பா உங்களோட சட்ட உரிமைகள் கடமைகளை பத்தி தெரிஞ்சிகிட்டு அதன் படி வாழக் கத்துக்குங்க…

அம்மா வீட்டில் வளர்ந்த பெண் மாமியார் வீட்டுக்கு செல்லும்போது எப்படி சமைக்கத் தெரியாமல் இருந்தால் கதையாகாது என நினைத்து சமையலை பெற்றோர்கள் கற்றுத் தருகிறார்களோ, அதேபோல் தான் சட்டத்தையும் ஒவ்வொருவரும் தாம் படிப்பது மட்டுமல்லாமல், தமது பிள்ளைகளுக்கும் குழந்தை பருவம் முதலே சொல்லித் தர வேண்டும். குழந்தைகளுக்கு எட்டு வயது ஆரம்பமாகும் போது, எப்படி ஒரளவு எழுதப், படிக்கத் தெரிந்து இருக்கிறார்களோ, அதே போல் சட்டங்களும் ஒரளவுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்பதுதான் மறைமுகமாக எழுதப்பட்டுள்ள சட்டம் என்று நான் சொன்னால் ஆச்சரியப்படுவீர்கள். 

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 14 நீங்க பெரும்பாலும் சட்டப்படிதான் வாழ்ந்து வருகிறீர்கள். ஆனா சட்டம் தெரியாம வாழ்ந்து வர்றீங்க. அப்படீன்னு நான் சொன்னா நீங்க நம்ப மாட்டீங்க. ஆனால் இதுதான் உண்மை! சட்டபடி நீங்க வாழ்கிறதால்தான் வெளியில இருக்கீங்க. அப்படி இல்லேன்னா எங்க இருப்பீங்க? ஜெயில்லதானே! இப்ப புரியுதுங்களா நான்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *