குற்ற விசாரணைகள்

1/14 உங்களுக்குத் தெரிய வேண்டிய சட்டங்கள்.

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 

சட்டங்கள் கணக்கில்லாமல் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் வாழ்க்கையில் பிறரின் உதவியில்லாமல் வாழ வேண்டும் என்றால் எப்படி குறைந்தது எழுதப் படிக்கத் தெரிந்திருக்கணுமோ, அதே போல வாழ்க்கையை இனிமையானதாக அமைத்துக் கொள்ள மிகவும் முக்கியமான ஐந்து சட்டங்களை தெரிந்து கொண்டாலே போதும் என்றால் உங்களால் நம்ப இயலாது.

உண்மையில் நானும் உங்களுக்கு பரிந்துரை செய்கின்ற இந்த ஐந்து சட்டங்களைத்தான் ஒரளவுக்குத் தெரிந்து வைத்துள்ளேன். இது தவிர, அவ்வப்போது கேள்வி கேட்பவர்களின் சந்தேகங்களைப் போக்குவதற்காக அவ்வப்போது தொட்டுக்க தொடச்சிக்க என்று சில சட்டப் புத்தகங்களை புரட்டியுள்ளேன். அவ்வளவு தான்! அதே போல் நீங்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்ட சட்ட நூல்கள் இவைகள் தான்.

  • அ) இந்திய அரசமைப்பு (எ) இந்திய  சாசனம் 1950
  • ஆ) இந்திய சாட்சியச் சட்டம் (எ) நீதிமன்ற சாசனம் 1872
  • இ ) இந்திய தண்டனைச் சட்டம் 1860
  • ஈ ) குற்ற விசாரணை முறை சட்டம் (எ) குற்ற விசாரணை முறை விதிகள் 1973
  • உ )உரிமையியல் விசாரணை முறைச் சட்டம்(எ) உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908

இந்த சட்டங்களில் முதலில் உள்ள பெயர்கள் இந்திய அரசாங்கத்தால் வைக்கப்பட்ட பெயர்களாகும். பொதுவாக சட்டங்களுக்கு உள்ள பெயர்களே பொருத்தம் இல்லாது இருப்பதாகக் கருதுகிறேன். எனவே பொருத்தமான பெயராகத்தான் (எ) என்பதற்கு அடுத்ததாக உள்ள மிக சரியானதாக இருக்கும் என நான் கருதும் பெயர்களைக் கொடுத்துள்ளேன். இதற்கான காரணம் குறித்து சட்ட அகராதி என்னும் நூலில் விரிவாக விளக்க உள்ளதால் இங்கு தவிர்த்துள்ளேன். இந்த பெயர்களில் நீங்கள் சரி என கருதும் பெயரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய பெயர் பொருத்தமாக இருக்கிறது என நினைக்கும் அதே வேளையில், இப்புதிய பெயரைப் பயன்படுத்துவதால் தேவையில்லாத குழப்பம் ஏற்படும் என நினைத்தால்

புதுப்பெயரை முதலில் சுட்டிகாட்டி பின், இரண்டாவது, பெயரை குறிப்பிட்டால் குழப்பம் வராது. அதே நேரத்தில் நீங்கள் உங்களின் புதுக்கருத்தையும் தெரிவித்து விட்டதாகி விடும்.

எ-கா ; இந்திய சாசனமாம் இந்திய அரசமைப்பு 1950, நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சியச் சட்டம் 1872 

மேற்கண்ட ஐந்து புத்தகங்களும் தமிழில் அதிகபட்சமாக ரூ 350 தான் ஆகும். இது தவிர வேறுசட்டங்கள் என்னென்ன தேவை என்பதை எனது நான்காம் வெளியீடான சட்ட அகாராதியில் தெரிந்து கொள்ளலாம்.

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  சட்டங்கள் கணக்கில்லாமல் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் வாழ்க்கையில் பிறரின் உதவியில்லாமல் வாழ வேண்டும் என்றால் எப்படி குறைந்தது எழுதப் படிக்கத் தெரிந்திருக்கணுமோ, அதே போல வாழ்க்கையை இனிமையானதாக அமைத்துக் கொள்ள மிகவும் முக்கியமான ஐந்து சட்டங்களை தெரிந்து கொண்டாலே போதும் என்றால் உங்களால் நம்ப இயலாது. உண்மையில் நானும்…

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  சட்டங்கள் கணக்கில்லாமல் இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் நாம் கவலைப்பட வேண்டியதில்லை. நாம் வாழ்க்கையில் பிறரின் உதவியில்லாமல் வாழ வேண்டும் என்றால் எப்படி குறைந்தது எழுதப் படிக்கத் தெரிந்திருக்கணுமோ, அதே போல வாழ்க்கையை இனிமையானதாக அமைத்துக் கொள்ள மிகவும் முக்கியமான ஐந்து சட்டங்களை தெரிந்து கொண்டாலே போதும் என்றால் உங்களால் நம்ப இயலாது. உண்மையில் நானும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *