3/42. போராடுவது எப்படி? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
இப்படியெல்லாம், அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டிருந்தும், நம்நாடு குடியரசு நாடாக இருந்தும் கூட, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக, போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. ஏன் இந்த நிலை?
போராட்டம் என்பது, முதலில் கடமைக்காகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய, உரிமைக்காக இருக்கக்கூடாது.
ஏனெனில், “யாருமே கடமையைச் செய்யாமல். எல்லோரும் உரிமைக்காகவே போராடிக்கொண்டு இருந்தால், எப்படி உரிமை கிடைக்கும்? யாராவது ஒருவர் கடமையைச் செய்தால்தானே, அவர் மூலமாக கிடைக்க வேண்டிய உரிமைகள் மற்றவர்களுக்கு கிடைக்கும்”.
ஆனால், தற்போது நம் நாட்டில், போராட்டங்களின் நிலை என்ன? உரிமைகளுக்காக மட்டும்தான் போராட்டங்கள் நடக்கிறன. அதனால்தான், 2007 ஆம் ஆண்டோடு, நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் கடந்த பின்னும் கூட, பெரும்பாலான போராட்டங்கள் தோல்வியடைவது மட்டுமல்லாமல்,, தொந்தரவு தரும் சங்கதியாகவும், தொடர்கதையாகவும் மாறிவிட்டன. இது எப்படி என்பதை பார்ப்போம்.
யாராவது இயற்கைக்கு முரண்பாடான வகையில், தமது உயிரை மாய்த்துக் கொள்ள நினைத்தால், அது குற்றம் எனவும், இதற்கு, ஒரு வருட காலத்திற்கு உட்பட்ட சிறை தண்டனை, மற்றும் அபராதம், அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் என, இந்திய தண்டனை சட்டம் 1860, பிரிவு 309 அறிவுறுத்துகிறது.
மேலும், சட்டத்துக்கு புறம்பாக, மத்திய, மாநில, அரசுகளின் செயல்பாடுகளை, எதிர்த்து, ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடி, எதை செய்தாலும், அது, இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு 143 படி, ஆறு மாதங்களுக்கு உட்பட்ட சிறைக்காவல், மற்றும் அபராதம், அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கத் தக்க குற்றமாகும்.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர், சட்ட விரோதமாக கூடியுள்ள ஒரு கூட்டத்தில், ஆயுதம் வைத்திருந்தால், அது இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு 144 படி, இரண்டு வருடங்களுக்கு உட்பட்ட சிறைக்காவல், மற்றும் அபராதம், அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கத்தக்க குற்றமாகும்.
இப்படிப்பட்ட தொருகூட்டத்தை கலைந்து செல்ல, அறிவுறுத்திய பின்னரும், கலைந்து செல்லவில்லை என்றால், அது இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு 145 ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.