
1/13.நாமெல்லாம் நிரபராதிகளே?
-
by admin.service-public.in
- 22
13.நாமெல்லாம் நிரபராதிகளே?
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
நீங்க சட்டப்படி வாழ்கிறதாலதான் வெளியில இருக்கிங்க அப்படீன்னு நான் சொல்றத ஆராய்ச்சி செய்தால் அது பொய் என்று வாதம் செய்யவும் உங்களுக்கு தோன்றலாம். உண்மை தான்! இதற்கு காரணம் நமக்குத் தெரிந்தே குற்றம் என்று சொல்ல கூடிய சில குற்றங்களை செய்கிறோம்.
இன்று நம் நாட்டில் எத்தனை சட்டங்கள் உள்ளன எனசட்ட அமைச்சகம் மற்றும் உச்ச நீதிமன்றம் உட்பட யாருக்கும் தெரியாது.ஆம்,“தமிழ்நாடு தலைமைச் சட்டத்துறை செயலகத்தில் இயங்கிவரும் தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள சட்டங்கள் மற்றும் விதிகள் எத்தனை என சான்று நகல் கோரியதற்கு”, அவர்களின் கடித எண். 22267/அநமு111/2005-1, நாள் 31.10.2005 என்ற கடிதத்தின் மூலம் தங்களது கடிதத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களும் ஆவணங்களும் இத்துறையில் பராமரிக்கப்படுவதில்லை என்பதை தங்களுக்கு தெரிவிக்க பணிக்கப்பட்டுள்ளேன் என பதில் கொடுத்து உள்ளார்கள்.
எப்படி இருக்கு பாருங்க இவங்க அடிக்கிற ஜோக். சட்டத்துறையில சட்டம் தொடர்பான ஆவணங்களை பராமரிப்பதில்லையாம். நீங்க இதை ஜோக்கா எடுத்துக்காம சீரிய சிந்தனையுடன் பாருங்க.
நாட்டில் இருக்கிற அனைத்து சட்டபடியும் பார்த்தால் நாம் யாரும் வெளியில் இருக்க முடியாது. எல்லோரும் ஜெயில்ல தான் இருக்கனும். ஏன் என்றால் எவ்வளவு சட்டங்கள் நியாயமாக உள்ளதோ, அதே போல் நியாயமில்லாத சட்டங்களும் உள்ளது என்பதுதான். ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் “ஏழு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளும், பைத்தியகாரர்களும் தான் வெளியில் இருக்க முடியும்!” ஏன்னா இவங்க செய்யிற எந்த குற்ற செயலும் இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவு 82 மற்றும் 84 – இன் படி குற்றமில்லை.
எனவே நியாயமில்லாத எந்த சட்டத்தைப் பற்றியும் நாம் கவலைப்படத் தேவையில்லை. ஏன்னா சாசன நியாயமில்லாத சட்டம் எதுவும் இந்திய கோட்பாடு 13(1),(2)-இன் படி செல்லாது. இதை நிலை நாட்ட வேண்டியது நமது கடமை.
அப்போ வெளியில் இருக்கிறவங்க எல்லாம் நிரபராதிகளா? இவர்களின் செயல்கள் நியாயமானதா? என்றால் கண்டிப்பாக சட்டப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதே சமயம் மன சாட்சிபடி அவர்களின் செயல்கள் நியாயமானதுதான் என நாம் எடுத்து
கொள்ள வேண்டும். ஏனெனில் குற்றம் செய்துவிட்டு வெளியில் திரிபவர்களை விட்டு வைத்திருப்பவர்கள் அவர்களின் மன சாட்சிபடி நியாயம் என கருதுகிறார்கள் என்று தானே அர்த்தம்? இது நானாக இருந்தாலும், நீங்களாக இருந்தாலும், நீதிமன்றமாக இருந்தாலும் ஒன்று தான்.
எப்படி? ஒரு அதிகாரி லஞ்சம் கேட்கிறார் நான் கொடுக்கிறேன் என்பதால் எனது வேலை முடிந்து விடுகிறது என்று வைத்து கொள்வோம். நீங்கள் கொடுக்க.மறுக்கிறீர்கள். வேலை முடிவதில் பிரச்சினை எழுகிறது. நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்கிறீர்கள்.
நீதிமன்றம் அவரைக் குற்றவாளி அல்ல என விடுவிக்கிறது என்றால் என்ன அர்த்தம்? நீதிமன்றம் தமது.மன சாட்சிபடி விடுவிக்கப்பட்டவரின் செயல் குற்றம் அல்ல என்கிறது என்பது தானே? இதை எதிர்த்து மேல் நீதிமன்றத்துக்கு செல்கிறோம். அங்கும் இது போல் ஏதாவது ஒன்று நடக்கிறது. ஆக தண்டனை கைதியா சிறையில் இருந்தால் குற்றவாளி. வெளியில் இருந்தால் நிரபராதி.
என் மீது எனக்கு தெரிய மூன்று வாரண்ட்டுகள் இருந்தாலும், வெளியில் இருப்பதற்கு காரணம் மேற்படி விளக்கங்கள் தானே? இப்ப என் கணக்கு சரியா போச்சா!

🔊 Listen to this 13.நாமெல்லாம் நிரபராதிகளே? ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. நீங்க சட்டப்படி வாழ்கிறதாலதான் வெளியில இருக்கிங்க அப்படீன்னு நான் சொல்றத ஆராய்ச்சி செய்தால் அது பொய் என்று வாதம் செய்யவும் உங்களுக்கு தோன்றலாம். உண்மை தான்! இதற்கு காரணம் நமக்குத் தெரிந்தே குற்றம் என்று சொல்ல கூடிய சில குற்றங்களை செய்கிறோம். இன்று நம்…