
1/32. சட்டத்துக்கும் விதிக்கும் என்னவித்தியாசம்?
-
by admin.service-public.in
- 36
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
32. சட்டத்துக்கும் விதிக்கும் என்னவித்தியாசம்?
“சட்ட”த்திற்கும், “விதி”க்கும் என்ன வித்தியாசம் என்பது அவ்வளவு எளிதாக நீதிபதிகளுக்கு கூடப் புரிந்ததாக தெரியவில்லை. இது எனக்கு புரிய சுமார் மூன்று வருடங்கள் ஆயிற்று. சட்டம் தெரிந்தவன் சண்டைக்காரன் என்றும், விதி தெரிந்தவன் வில்லங்கமானவன் என்றும் சமுதாயம் பார்க்கின்ற நிலைக்கு சட்டத்தை பயன்படுத்தியவர்கள் தவறாக பயன்படுத்தி விட்டார்கள். உண்மையில் சண்டைப் போடவா சட்டம்?
‘நாட்டில் நடக்கும் செயல்கள் அனைத்தும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப் பட்ட தொகுப்புதான் சட்டம்’
இதன் நோக்கத்திற்காக, “சட்டம் என்பது எதை, எதை எல்லாம் செய்ய கூடாது. எதை, எதை எல்லாம் செய்யணும், இதை செய்வதால் அல்லது செய்யாமல் இருப்பதால் அது எந்த விதத்தில் குற்றமாகும்” என விளக்கம் தருவதுடன் அதற்கு என்ன தண்டனை என சொல்வதுமாகும். இப்படி செய்யப்பட்டதாக சொல்லப்படும் செயல் குற்றமா, தண்டனைக்கு உரியதா என்பதை விசாரணை செய்வதற்காக, அதாவது “புகாரைப் பதிவு செய்தல், சாட்சிகளை விசாரித்தல், குற்றம் சாட்டபட்டவரை பிணையில் விடுவித்தல், தண்டனை கொடுத்தல் அல்லது விடுதலை செய்தல் போன்ற பல வேறான செய்கைகளை செய்ய ஏற்படுத்தப்பட்டது தான் விதிகள்”
இன்னும் புரியிற மாதிரி சொல்லனும்னா சட்டம் என்பது நமது உடம்பு. இந்த உடம்பு வேலைகளை செய்ய வேண்டும். என்றால் ஐம்புலன்கள் உட்பட அனைத்து உறுப்புகளும் தேவை அல்லவா? இது தான் விதிகள். உடம்பு இயங்குவதற்கு எப்படி உறுப்புகள் தேவையோ அதே போல் சட்டத்திற்கு இயக்கம் கொடுப்பது விதிகள் தான். இப்ப புரியுதா?
எனவே “எப்படி ஒரு உறுப்பை உடம்பு என சொல்ல மாட்டோமோ அதே போல் தான் விதிகளை சட்டம் என சொல்ல கூடாது”. இதன் அடிப்படையில் தான் அதை சட்டப்படி சரியானதாக “குற்ற விசாரணை முறை விதிகள்” என பெயர் மாற்றம் செய்து உள்ளேன்.

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 32. சட்டத்துக்கும் விதிக்கும் என்னவித்தியாசம்? “சட்ட”த்திற்கும், “விதி”க்கும் என்ன வித்தியாசம் என்பது அவ்வளவு எளிதாக நீதிபதிகளுக்கு கூடப் புரிந்ததாக தெரியவில்லை. இது எனக்கு புரிய சுமார் மூன்று வருடங்கள் ஆயிற்று. சட்டம் தெரிந்தவன் சண்டைக்காரன் என்றும், விதி தெரிந்தவன் வில்லங்கமானவன் என்றும் சமுதாயம் பார்க்கின்ற நிலைக்கு சட்டத்தை…