குற்ற விசாரணைகள்

1/31. குற்றம்னா, குற்ற வழக்குன்னா என்ன?

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 36

31. குற்றம்னா, குற்ற வழக்குன்னா என்ன?

நீங்கள் ஒரு செயலை சட்டபடி செய்ய வேண்டும் அல்லது செய்யாமல் இருக்க வேண்டும். செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடாததை செய்வதும் குற்றமாகும் என இந்திய தண்டனை சட்டம் 1860-இன் பிரிவு 2 குறிப்பிடுகிறது. இது சரியல்ல. இது “குற்றத்துக்கான இலக்கணமும் அல்ல“.

நீங்க, “செய்ய கூடாததை செய்வதாலும், செய்ய வேண்டியதை செய்யாமல் இருப்பதாலும், அது அடுத்தவருக்கு எந்த வகையிலாவது உடல் ரீதியாக அல்லது  மனரீதியாக அல்லது உரிமை ரீதியாக துன்பத்தை ஏற்படுத்துகிறதா” என்பதை பார்க்க வேண்டும்.

இதை எனது முதல் நூலான “ஜாமின் எடுப்பது எப்படி?” நூலில் வலியுறுத்தி இருந்தேன். அதன் பிறகு தான் அறிந்தேன். நான் சொன்ன கருத்தே “துன்பம்” என்பதற்கு விளக்கமாகத் தரப்பட்டுள்ளது.

ஆம்! இந்திய தண்டனை சட்டம் 1860 – ன் பிரிவு 44 ஆனது துன்பம் என்பதற்கு, ‘சட்டத்திற்கு முரணாக ஒருவருடைய மனம், புகழ் அல்லது சொத்துக்கு இழைக்கப்படும் தீங்கை குறிக்கும்” என விளக்கம் தருகிறது.

   ஆனால், இவைகளை எல்லாம் சிறிதும் கவனத்தில் கொள்ளாமல் பல தண்டனை சட்டங்கள் தேவையில்லாமல் இயற்றப்பட்டுள்ளன. இவைகள் எல்லாம் அரசாங்கத்தின் “கைச் செலவை” சமாளிப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டங்கள் என்று சொன்னால் மிகையல்ல.

இதன் காரணத்தால் தான் இது போன்ற குற்றங்களை விசாரிக்கும் போது சிறை தண்டனை வழங்காமல் அபராதம் மட்டுமே விதிக்கின்றன. இது போன்ற சட்டங்கள் இந்திய சாசன கோட்பாடு 13-இன்படி செல்லதக்கதல்ல என வாதம் செய்து நீக்க முடியும் என்றாலும் இதனை செய்ய இது வரை யாரும் முன் வந்ததாக தெரியவில்லை.

ஏனெனில் அரசாங்கம் எப்படி கைச்செலவை சமாளிப்பதற்காக இந்த சட்டங்களை வைத்திருக்கிறதோ அதே போல் அபராதம் செலுத்துபவர்களும் கைசெலவு பண்ணுற தொகை தானே என கருதி செலுத்தி விடுகின்றனர்.

இது போன்ற தண்டனை வழங்கத்தக்க சட்டங்களின் கீழ் செய்த குற்றத்துக்காக உங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஒரு நபரோ அல்லது காவல் அலுவலரோ அல்லது நீதிமன்றமோ எடுக்கும் நடவடிக்கைதான் குற்ற வழக்கு என்பதாகும்.

குற்றத்தை வரையறை செய்வதற்கு என பல சட்டங்கள் உள்ளன. இவைகளில் “எந்த சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்ததாக கருதினாலும் அதற்காக நடவடிக்கை எடுக்க பயன்படுவதுதான் குற்ற விசாரனை முறை சட்டம் 1973 என்று தவறாக பெயரிடப்பட்டுள்ள குற்ற விசாரணை முறை விதிகள் 1973”. இதில் 1973 என்பது அது இயற்றப்பட்ட ஆண்டை குறிக்கும்.

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 36 31. குற்றம்னா, குற்ற வழக்குன்னா என்ன? நீங்கள் ஒரு செயலை சட்டபடி செய்ய வேண்டும் அல்லது செய்யாமல் இருக்க வேண்டும். செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருப்பதும், செய்யக் கூடாததை செய்வதும் குற்றமாகும் என இந்திய தண்டனை சட்டம் 1860-இன் பிரிவு 2 குறிப்பிடுகிறது. இது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *