
1/18. பொருளடக்கம் மிக முக்கியம்.
-
by admin.service-public.in
- 26
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
எந்த ஒரு நூலுக்குமே பொருளடக்கம் என்பது முக்கியம். இதைப் பார்த்து தான் எந்த பக்கத்தில் எந்த தலைப்பு மிகவும் பார்ப்பதற்கு படிக்க வேண்டும் போல் தோன்றுகிறது அல்லது தங்களுக்கு உடனடியாக தேவைப்படும் விசயம் என்ன என்பதை பொறுத்து அந்த பக்கத்திற்கு நேரடியாகச் செல்ல முடியும்.
ஒரு நூலை வாங்கலாமா? அல்லது வேண்டாமா? என்ற முடிவுக்கு பொருளடக்கத்தைப் பார்த்தாலே வந்து விடலாம். இது போன்ற சிறப்புடைய பொருளடக்கம் சட்டத்திற்கு மிகவும் முக்கியம். சட்டம் எவ்வளவுதான் எளிதாக புரிய ஆரம்பித்து விட்டாலும் சில சமயங்களில் விடை என்னவாக இருக்கும் என்ன பிரிவாக அல்லது விதியாக இருக்கும் என்ற குழப்பம் வந்து விடும்.
அப்படிப்பட்ட சமயங்களில் பொருளடக்கம் சென்று நமக்கு தேவையான தகவலுடன் ஒத்து போகிற அளவில் எந்த சட்ட விதி அல்லது செய்தி உள்ளது என சரிபார்த்து அந்த பக்கத்திற்கு சென்றால் உடனே தீர்வு கிடைத்துவிடும்.
ஒரு பிரிவின் அல்லது விதியின்படியான மனுவிற்கு பதில் அளிக்க வேண்டியிருந்தால், அதற்கு என்ன பதிலாக இருக்கும் என முதலில் கண்டபடி தேடத் தோன்றும். அதைக் கைவிட்டு பொறுமையாக எந்த பிரிவுக்கு அல்லது விதிக்கு பதில் தேட விரும்புகிறீர்களோ, அந்த பிரிவுக்கு முன்பாக அல்லது பின்பாகவே தேடினால் அதிகபட்சம் விடை கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.
பள்ளி நூல்களில் பாடம் பாடமாக எப்படிப் பிரித்துத் தரப்பட்டிருக்குமோ அதே போல் சட்டத்திலும், விதியிலும் அத்தியாயம் என்ற பெயரில் ஒவ்வொரு செயலுக்கு தக்கவாறு பிரிவுகளும்,விதிகளும் தனித்தனித் தொகுப்பாகத் தரப்பட்டிருக்கும். அதை வைத்தும் உங்களுக்கு தேவையான பகுதி எது என்பதையும் கணிக்கலாம்.

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. எந்த ஒரு நூலுக்குமே பொருளடக்கம் என்பது முக்கியம். இதைப் பார்த்து தான் எந்த பக்கத்தில் எந்த தலைப்பு மிகவும் பார்ப்பதற்கு படிக்க வேண்டும் போல் தோன்றுகிறது அல்லது தங்களுக்கு உடனடியாக தேவைப்படும் விசயம் என்ன என்பதை பொறுத்து அந்த பக்கத்திற்கு நேரடியாகச் செல்ல முடியும். ஒரு நூலை…