”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்ற தலைப்பில் ஒவ்வொரு சட்டங்கள் குறித்தும் பாகங்கள் தொடர்ச்சியாக வெளி வர உள்ளன. ஏனென்றால் என்னதான் சட்டம் தமிழில் கிடைத்தாலும் சட்டத்தை முதலில் படிப்பவர்கள் மட்டுமல்ல தொடர்ந்து படிப்பவர்களும் சட்டத்தில் அ, ஆ, இ, ஈ யன்னா எழுத படிக்க கற்றுக் கொள்ளும் குழந்தை போல் தான்.
இந்த ஒரு காரணத்தால் நான் சட்டத்தில் தெளிவானவன் என்ற முடிவுக்கு வந்திடாதிங்க. உங்களுக்கு ஆனா, ஆவன்னா சொல்லிக் கொடுக்க ஆசிரியர்கள் இருந்தார்கள். படித்து இன்று ஆசிரியர் பணியை விட சிறப்பான பணியையும் கூட நீங்கள் பார்த்து கொண்டிருப்பீர்கள்.
இது போல் இன்று எனக்கு தெரிந்த அனுபவ ரீதியிலான சட்டங்களை உங்களுக்கு நேரில் அல்லது இது போன்ற நூல்களின் மூலம் சொல்லிக் கொடுத்தால், நாளை நீங்கள் சட்டத்தில் சாதனையாளராக உருவாவீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன். இதன் காரணத்தால் எனக்கு தெரிந்தவைகளை இங்கு உங்களுக்காகச் சொல்லி உள்ளேன்.