23. அடிப்படை உரிமைகளை ஆராய்வோம்.
சம உரிமை
சட்டப்படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் பற்றி பார்த்தோம் அல்லவா? இப்போது, அப்படி வாழ்வதற்காக உள்ள கோட்பாடுகள் குறித்து விரிவாகப் பார்த்தால், நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையின் சட்ட அர்த்தம் புரிந்து விடும்.
இந்திய அரசமைப்பு கோட்பாடு 14 ஆனது, “சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலையை உறுதி செய்கிறது”.
அதாவது சட்டத்தின் முன்பாக, ஏழை,பணக்காரன், ஆண், பெண், அதிகாரம் இல்லாதவர்கள்,அதிகாரம் உள்ளவர்கள், என்பனபோன்ற பாகுபாடுகள் ஏதும் இருக்கக் கூடாது என வலியுறுத்துகிறது.
ஆனாலும், “அதிகாரம் கொண்டவர்கள், அந்த அதிகாரத்தை இழந்து விடக்கூடாது என்பதற்காக சில விதி விலக்குகளை இயற்றி, அதன் மூலம் தம்பித்து கொண்டுதான் இருக்கிறார்கள்”.
உண்மையில், விதிவிலக்குகள் என்றால், “அது இருளை விரட்டும், தீப விலக்கு போல்தான் இருக்க வேண்டுமே தவிர, தீபமில்லாத விலக்காக இருக்க கூடாது”.
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற இந்த உரிமைதான் நமது உரிமைகள் அனைத்திற்குமான மூலாதாரமாகும்.