GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

3. சட்ட அறிவுக்களஞ்சியம்,நீதியைத்தேடி (வாரண்ட் பாலா) 3/22. நாம் சட்டப்படிதான் வாழ்கிறோம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

3/22. நாம் சட்டப்படிதான் வாழ்கிறோம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

22. நாம் சட்டப்படிதான் வாழ்கிறோம்.

சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

நாமெல்லாம் சட்டப்படிதான் வாழ்கிறோமா? என்று ஒரு கேள்வியை, ஆயிரம் பேர் கூடியுள்ள ஒரு பொதுக் கூட்டத்தில் கேட்டால், மௌனம்தான் பதிலாகக் கிடைக்கிறது.

அந்த அளவிற்கு சட்டத்துக்கு புறம்பாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என நம்புகிறார்கள். யாருமே சட்டப்படிதான் வாழ்கிறோம் என, உறுதியாக சொல்லத் தயாரில்லை.

ஆனால் உண்மை என்ன? அதிகபட்சமாக அனைவருமே சட்டத்துக்கு உட்பட்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி வாழ்வதால்தான் வெளியில இருக்கிறோம். அப்படி இல்லை என்றால் எங்கே இருப்போம்? ஜெயில்லதானே இருப்போம் என்பதை முன்னரே பார்த்தோம்.

சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழ்ந்து கொண்டிருக்கும் போது, அந்தச் சட்டத்தை தெரிந்து கொண்டு வாழ்வதில் என்ன கஷ்டம் இருக்க முடியும்!

அப்ப வெளியில் இருக்கிறவங்க எல்லாம் குற்றமே செய்யாதவர்களா? என நீங்கள் விவாதம் செய்யலாம். இதுபற்றி எல்லாம் ஆராய்ச்சி செய்யப் போனால் தீர்வு கிடைப்பது அவ்வளவு சுலபமல்ல.

எது எப்படி இருப்பினும், ”நூறு சதவிகிதம் சட்டப்படிதான் வாழ்கிறேன் என நான் உட்பட யாருமே மார்தட்டிக் கொள்ள முடியாது. அந்த அளவிற்கு எல்லோருமே குற்றங்களை அனுதினமும் செய்து கொண்டுதான் இருக்கிறோம்”.

ஆனால், “அந்த குற்றங்கள் எல்லாம் சிறு சிறு குற்றங்களே என்பதோடு, எல்லாம் மன்னிக்க கூடிய குற்றங்களாகவே இருப்பதால், யாருக்கு எதிராக அந்த சிறு குற்றத்தை புரிகிறோமோ, அவர்களால் சாதாரணமாகவே மன்னிக்கப் படுகிறோம்”.

உதாரணமாக, ஒருவர் உங்களின் அனுமதி இல்லாமல், உங்களுக்குச் சொந்தமான ஒரு இடத்திற்குள் வந்து விட்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு சட்டப்படியான பெயர் அத்துமீறல் என்பதாகும். இதற்காக குற்ற விசாரணை முறை விதிகளின்படி நீங்கள் காவல் நிலையம் அல்லது நீதிமன்றம் சென்று புகார் செய்து, குற்றத்தை அதற்கான ஆதாரங்களுடன் நிரூபித்து, இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவு 341-இன்படி, ஒரு மாதம் வரை வெறுங்காவல் மற்றும் ஐநூறு ரூபாய்க்கு அபராதம் ஆகியவற்றை தண்டனையாக வாங்கித்தர முடியும்.

ஆனால், “அப்படிச் செய்யாமல், மனிதத் தன்மை யோடு அன்பாக அவரின் வருகையை வாங்க, வாங்க. எப்ப வந்திங்க! என்று இயல்பாகவும், மகிழ்ச்சியாகவும் வரவேற்கிறோம் அல்லது வேறு வகையில் அவரின் செயலை குற்றச் செயலாக எடுத்துக் கொள்வதில்லை”.

இப்படித்தான் பல விதமான குற்றங்கள் காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்துக்கும் செல்லாமலேயே சமரசமாகப் போய்விடுகின்றன. இதில் சில சமயங்களில் காவல் நிலையம், அல்லது நீதிமன்றம் சென்றபின்னும் கூட, சமரசம் ஆவதும் உண்டு. இது பற்றிய விபரங்களை குற்ற விசாரணை நூலில் கொடுத்துள்ளதால் இங்கு தவிர்த்துக்கொள்கிறேன்.

ஒருவேளை, இப்படி மன்னிக்கப்படவில்லை என்றால், சிறைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைதான் உள்ளது.  ஆக, சிறையில் இருப்பவர்களைத் தவிர மற்றவர்கள் எல்லோருமே சட்டப்படிதான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

அப்படி என்றால், சிறையில் இருப்பவர்கள் எல்லாம் குற்றவாளிகளா? என விவாதம் செய்யலாம். குற்றவாளிகள் எப்படி மன்னிக்கப்பட்டு வெளியில் இருக்கிறார்களோ, அதே போல நிரபராதிகள் பலரும் தண்டிக்கப்பட்டுக் குற்றவாளிகளாக சிறையில் இருக்கின்றனர்.

எது எப்படி இருப்பினும், நீதிமன்றம் ஒரு நிரபராதியை குற்றவாளி என அறிவிப்பதால், அதை நாம் மட்டுமல்ல, குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிரபராதியே கூட, ஏற்கத்தான் வேண்டி இருக்கிறது.

சரி. இவ்வளவு தீர்வு சொல்லுறீங்களே! இது போன்ற சங்கதிகளுக்கும் ஒரு தீர்வு சொல்ல கூடாதா? என நீங்கள் நினைக்கலாம். இதற்கும் தீர்வு இருக்கிறது. கடுமையாக போராட.வேண்டும். அப்படிப் போராடினால் என்னைப்போல மூன்று வாரண்ட் உள்ள நிலையில்தான் நீங்களும் இருக்க வேண்டி இருக்கும்.

இப்போது “நான் நிரபராதியும் அல்ல, “குற்றவாளியும் அல்ல, மாறாக வாரண்ட் வாதி”. என்ன நான் சொல்றது சரிதானே?

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

குற்ற விசாரணைகள்

1/15. சட்டங்கள் தமிழிலும் கிடைக்கின்றன!1/15. சட்டங்கள் தமிழிலும் கிடைக்கின்றன!

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பொதுவாக இந்திய அரசால் சட்டங்கள்

3/15. சட்டம் தெரியாமல் செய்தாலும் குற்றமே! சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/15. சட்டம் தெரியாமல் செய்தாலும் குற்றமே! சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 55 15. சட்டம் தெரியாமல் செய்தாலும் குற்றமே! நாம் செய்யும் ஒரு செயல், சட்டப்படி குற்றம் என்னும் போது, ”அச்செயல் சட்டப்படி குற்றம்

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/45. நாட்டில் தனித்த அதிகாரம் பெற்றவர் யார்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/45. நாட்டில் தனித்த அதிகாரம் பெற்றவர் யார்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 38 3/45. நாட்டில் தனித்த அதிகாரம் பெற்றவர் யார்? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. தனித்த அதிகாரம் உள்ளவர்கள் யார் என்பதை, உங்களுக்கு மிகவும்

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.