கடமைக்கான உரிமைகள்!
நாமெல்லாம் இந்தியாவில் பிறந்ததற்காக பெருமைப்பட வேண்டும் என்று சொல்வதற்கு, மேலும் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
உரிமைகள் எல்லாம் அவரவர்களின் உரிமைகளே என்று பார்த்தோம். கடமை எப்படி என்பதை பார்க்கவில்லை அல்லவா? இதை ஏன் பார்க்க வேண்டும்? உரிமைகளை அப்படியே வழங்கி இருக்கும் போது கடமையை என்ன செய்திருக்க முடியும்? என்ன செய்திருக்க முடியும் என்பதை விட, செய்ய வேண்டியதன் அவசியம் என்ன? ஒன்றுமே இல்லை என்பதால் குடிமக்கள் அனைவருக்கும் ஒரே விதமான கடமைகளைத்தான் நமது இந்திய அரசமைப்பு வழங்கியுள்ளது. அந்த கடமைகள் என்னென்ன என்பதை பின்னர் தகுந்த சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.
உரிமை, கடமை பற்றி தற்போது சுருக்கமாக பார்த்தாகி விட்டது. அடிப்படையில், இரண்டிலும் கூட்டல் குறைத்தல் ஏதும் இல்லை என்பதும் ஓரளவிற்கு உறுதியாகி விட்டது, என்றாலும், மிக முக்கியமான ஒரு சங்கதியை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை எனக்கும், அதை தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை உங்களுக்கும் இருக்கிறது.