12. உலகிலேயே மிகப்பெரிய அரசமைப்பு
இந்திய அரசமைப்புதான் நமது நாட்டின் முதன்மையான அதிகாரம் கொண்டது.
இதனை மிஞ்சிய நபர்களோ, சட்டங்களோ, வேறு அதிகார அமைப்புகளோ எதுவும் கிடையாது.. எல்லாமே இதற்கு உட்பட்டவைகள்தான்.
இப்படிப்பட்ட இந்திய அரசமைப்பை உருவாக்க நியமிக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை, 09-12-1946 அன்று ஏற்படுத்தப்பட்டது. இந்த அரசியல் நிர்ணய சபை, இந்திய
அரசமைப்பை உருவாக்கத் தேவையான எழு பேர் கொண்ட சட்ட வரைவுக்குழுவை 29-08-1947 தோற்றுவித்தது.
அவ்வரைவுக் குழுவில் பங்கேற்ற, ஜவகர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல், அல்லாடி கிருஷ்ண மூர்த்தி அய்யர், டாக்டர்.ராஜேந்திரபிரசாத், டாக்டர் அம்பேத்கார், அபுல் கலாம் ஆசாத், முகர்ஜி ஆகிய ஏழு நபர்களை கொண்ட குழு தமது குழுவின் தலைவராக அம்பேத்காரையும், செயலராக அல்லாடி கிருஷ்ண மூர்த்தி அய்யரையும், தேர்ந்தெடுத்து அவர்களின் தலைமையில் வரைவுக்குழு தனது கடமையை செவ்வனே செய்து அரசமைப்புக்கான வரைவை 26-11-1949 அன்று நாடாளு மன்றத்தில் தாக்கல் செய்தது.
அதனை நாடாளுமன்றம் ஏற்றுக் கொண்டு 26-01-1950 முதல் நடைமுறைக்குக் கொண்டு வந்தது. அந்த நாள்தான் நமது முதல் குடியரசு தினமான 26-01-1950 ஆகும்.
மற்ற எந்த நாட்டு அரசமைப்பிலும் இல்லாத அளவிற்கு நமது அரசமைப்பில் மொத்தம் 395 கோட்பாடுகள் உள்ளன. எனவேதான் உலகத்திலேயே மிகப்பெரிய அரசமைப்பாகவும் நமது அரசமைப்பு திகழ்கிறது.
நமது இந்திய அரசமைப்புக்கான வரைவை 26-11-1949 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய அம்பேத்கார் மற்றும் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் கீழ்கண்ட வாறான எச்சரிக்கைகளை தொலை நோக்கு பார்வையுடன் விடுத்துள்ளனர். அது இன்றைய கால கட்டத்திற்கும் பொருந்து வதாக உள்ளது.
அம்பேத்கார் அவர்களின் எச்சரிக்கை:-
- ஒரு அரசமைப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்த போதிலும், அதை செயல்படுத்தும் மக்கள் மோசமான வர்களாக இருந்தால், அரசமைப்பும் மோசமானதாகி விடும்.
- ஒரு அரசமைப்பு எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், அதை செயல்படுத்துபவர்கள் நல்லவர்களாக இருந்தால் அந்த அரசமைப்பும் நல்லதாகிவிடும்.
- நாட்டிற்கும் மேலானதாக மதத்தை அரசியல் கட்சிகள் போற்றுமேயானால். நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக இன்னலுக்கு ஆட்பட நேரிடும். இதுவே கடைசியாகவும் இதிலிருந்து மீள முடியாத தாகவும் ஆகி விடும்.
ராஜேந்திர பிரசாத் அவர்களின் எச்சரிக்கை:-
- மக்கனால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் திறமை யானவர்களாகவும், நாணயமானவர்களாகவும் இருப்பார்கனேயானால், குறைபாடுள்ள அரசு அமைப்பிலும் கூட நன்மையை செய்ய முடியும்.