ஆய்வு செய்தல் என்றாலே, பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் துறையை தேர்ந்தெடுத்து, ஆய்வு செய்வதுதான் எனப்பலரும் நம்பிக் கொண்டு இருக்கின்றனர். இது முழுக்க முழுக்க உண்மையல்ல. ஆய்வியல் துறையைத் தேர்ந்தெடுத்து ஆய்வு செய்பவர்கள் எல்லாம், ஏதோ ஒன்றை ஆய்வு செய்கிறார்கள் என்பது மட்டும்தான் உண்மை.
ஆனால், அவர்கள் எதை ஆய்வு செய்கிறார்கள் என்பதுதான் கேள்வியே?
அறிவு இரண்டு வகைப்படும். ஒன்று படிப்பறிவு. மற்றொன்று பட்டறிவு.
பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் துறையில் ஆய்வு செய்பவர்கள் எல்லாம் படிப்பறிவை கொண்டவர்களே! இவர்கள்nஆய்வியல் துறையில் எதை ஆய்வு செய்கிறார்கள்?
“யாரோ ஒருவர், எதைப்பற்றியோ கண்டு பிடித்த கண்டு பிடிப்பை எடுத்துக் கொண்டு, எப்படி அவர் அந்தக் கண்டு பிடிப்பைக் கண்டு பிடித்தார்? என்பதைத்தான் ஆய்வு செய்கிறார்களே ஒழிய, இவர்களாக எதையும் புதியதாக ஆய்வு செய்து கண்டு பிடிக்கவில்லை”
இது எப்படி ஆய்வு செய்வதாகும்? இதற்குப் பெயர் ஆய்வு செய்வது அல்ல. ஒருவரைப் பார்த்து காப்பி அடிக்காமல் பலரைப்பார்த்து காப்பி அடிப்பதே என்றுதான் கூற வேண்டும்.
இதுதான் இன்று சட்டத்துறையிலும், சட்டக் கல்லூரிகளிலும், வக்கீல்களிடமும், வக்கீலாய் இருந்து நீதிபதிகளான எல்லா
இவைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு சட்டத்தை பல்கலைக் கழகத்தில் படிக்காமல், சட்டத்தைப்பற்றி இதற்கு முன்பாக யார் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பதை எல்லாம் காப்பி அடிக்காமல், “உண்மையில் சட்டம் என்றால் என்ன? அதன் நோக்கம் என்னவாக இருக்கிறது? என்னவாக இருக்க முடியும்? என்பது முதல் சட்டம் தொடர்பான பல்வேறு சங்கதிகளை பட்டறிவோடு இக்களஞ்சியத்தில் விளக்கி உள்ளேன்.
படிப்பறிவைக் கொண்டு பட்டறிவை வெல்ல முயல்வது பேதமை. ஆனால், பட்டறிவைக் கொண்டிருந்தால், அதன் அடக்கமாகவே படிப்பறிவு அமைந்து விடும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்காது.
ஆம்! நான்கு மீட்டர் நீளம் கொண்ட ஒரு கம்பியை மிகச்சரியாக ஒரு மீட்டர் நீளம் கொண்ட கம்பிகளாக துண்டு செய்தால் எத்தனை துண்டுகள் கிடைக்கும் என படிப்பறிவு கொண்டவரையும், பட்டறிவு கொண்டவரையும் கேட்டால், படிப்பறிவு கொண்டவர் 4ஐ 1ஆல் வகுத்து கிடைக்கும் ஈவு ஆன 4-ஐ மனதில் கொண்டு நான்கு துண்டுகள் கிடைக்கும் என பதில் அளிப்பார். அதே, பட்டறிவு ...
இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.