ஒப்புதல் அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்.
அனுப்புநர் :
ச.இராசேசுக்கண்ணா.
த/பெ. சக்திவேல்.
5/337. சண்முகசிகாமணி நகர்.
கோவில்பட்டி 628501.
தூத்துக்குடி மாவட்டம்.
கைபேசி எண்: 9789715789
பெறுநர் :
பொது தகவல் அலுவலர்/மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம். கோரம்பள்ளம்
தூத்துக்குடி. 628101.
தூத்துக்குடிமாவட்டம்.
பொருள்:
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 பிரிவு 6(1) மற்றும் 6(3) இன் கீழ் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை தொடர்பான சில தகவல்களை சட்டப்பிரிவு 7 (1) காலக்கெடுவுக்குள் தகவலாக கோருதல் தொடர்பாக.
மதிப்பிற்குரிய அலுவலர் அவர்களுக்கு.
அரசு மற்றும் நீதித்துறை சார்ந்த நிர்வாக செயல் முறைகளில் கையாளப்படும் ஆவணங்களானது இந்திய அரசியலமைப்பு சாசனம் 1950இன் கேட்பாடு 19(1)(அ) மற்றும் பாரதிய சாக்ஷய அதிநியம் 2023 பிரிவு 74 & 75 இன் கீழ்
பொது ஆவணங்கள் ஆகும். அவற்றை பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் சான்றிட்ட நகல்களாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெற உரிமை உண்டு. எனவே, கீழ்க் கோரியுள்ள சான்றிட்ட ஆவண நகல்களை சட்டத்திற்கு உட்பட்டு வழங்க வேண்டுகிறேன்.
மேலும் நான் கோரிய தகவல்கள் அனைத்தும் தங்கள் அலுவலக நடைமுறை சார்ந்த இச்சட்டத்தின் பிரிவு 4(1)(b)இல் குறிப்பிட்டுள்ள தகவல்கள் என்பதால், இச்சட்டத்தின் பிரிவு 11, பிரிவு
8 (1)(J) மற்றும் பிரிவு 7(9) இல் உள்ள காரணங்களைக் காட்டியோ அல்லது தகவல்களை வழங்க மறுக்கவோ முடியாத நிலையில், நான் கோரிய தகவல்கள் அனைத்தையும் பொது தகவல் அலுவலர் அவர்கள் வழங்க மறுக்க இச்சட்டத்தில் இடமில்லை என்ற தகவலை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.
வேண்டப்படும் தகவல்கள்
1 )கடந்த 01.01.2020 ஜனவரி முதல் 31.02.2025 வரை கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனையில் கிடைத்துள்ள அனைத்து வகையான மருந்துகளின் பட்டியல் மற்றும் அவற்றின் அளவு பற்றிய விபரங்களை தகவலாக தருக.
2)இக்காலகட்டத்தில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்ட மருந்துகளின் விபரங்களை தகவலாக தருக.
3) தற்போது கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள மருந்துகளின் இருப்பு நிலை பற்றிய முழுமையான விபரங்களை தகவலாக தருக.
4.கோவில்பட்டி மாவட்ட அரசு மருத்துவமனையின் மருந்து விநியோக தரநிலைகள் மற்றும் முறைகள் பற்றிய ஆவணங்களை தகவலாக தருக.
5.மேற்கண்ட தகவல்களை வழங்க மறுப்பதற்கான சட்டப்பூர்வமான காரணங்கள் ஏதேனும் இருந்தாலோ அல்லது அமலில் உள்ள சட்டங்கள் இருந்தாலோ அதனை குறிப்பிட்டு தகவலாக தருக.
6) கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கடந்த 01.01.2020 ஜனவரி முதல் 2024 டிசம்பர் வரை
முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ்
பெறப்பட்ட நிதியின் தொகையினை ஆண்டு வாரியாக குறிப்பிட்டு தகவலாக தருக.
7)கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பெயர் மற்றும் அவர்களின் கல்வி தகுதி பற்றிய விபரங்களை தகவலாக தருக.
8)கோவில்பட்டி மாவட்ட அரசு
தலைமை மருத்துவமனையில் மூன்றாண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பெயர்கள் பற்றிய விபரங்களை தகவலாக தருக.
9)கோவில்பட்டி மாவட்ட அரசு
தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பணி நேரங்கள் பற்றிய விபரங்களை தகவலாக தருக.
10)கோவில்பட்டி மாவட்ட அரசு
தலைமை மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் ஒப்பந்த மருத்துவ காவலர்களின் பெயர்கள் பற்றிய விபரங்களை தகவலாக தருக.
நான் கோரும் அணைத்து ஆவணங்களிலும்உயர் நீதிமன்ற நீதிப்பேரானை எண் 19535 Of 2020 உத்தரவுப்படி தங்களின் ஆதார் எண் குறிப்பிட்டு அணைத்து பக்கங்களிலும் தங்களுடைய அலுவலக முத்திரை மற்றும் தங்களுடைய கையொப்பம் இடப்பட்ட ஆவணமாக வழங்கிடக்கோருகிறேன் மனுதாரராகிய நான் கோரும் தகவல்கள் ஆவணங்களை தர மறுத்தாலோ
தவறான தகவல்களை வழங்கினாலோ மேற்படி சட்டத்தின் கீழ் நான் மேல் முறையீடு செய்ய வேண்டிய அதிகாரியின் பெயர்.விலாசம்.
இ.மெயில்,பேக்ஸ்,முழு அஞ்சல் முகவரி அளிக்கவும்.
மாநிலத் தகவல் ஆணைய வழக்கு
No:SA 649/f/2015
நாள்: 02/03 2015-ன் படி எந்தத் தகவலும் நீதிமன்றத்திற்கோ அல்லது நாடாளுமன்றத்திற்கோ (அல்லது) சட்டமன்றத்திற்கோ மறுக்கப்படுதல் கூடாதோ அதே தகவல் எந்த நபர் ஒருவருக்கும் மறுக்கப்படுதல் கூடாது என்றுTNSIC வழக்கு:No: SA 74997/A/2015 நாள் 02/03/2016 ன் படி இம்மனுவினை பரிசீனை செய்ய வேண்டுகிறேன்.
இப்படிக்கு.
ச.இராசேசுகண்ணா.
03.03.2025.