1) பட்டியல் இன சாதியை சார்ந்த ஒருவர் தனது வீட்டில் இயேசுநாதர் படம், பைபிள் வசனங்கள் வைத்திருப்பதாலோ அல்லது அவர் ஞாயிறு தோறும் சர்ச்சிற்கு செல்வதாலோ அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாக சொல்ல முடியாது. கடவுள்களை வணங்குவதும் பின்பற்றுவதும் அவரவர் விருப்பம். மதம் மாறானாலும் சாதி என்பது மாறாது. அதனாலேயே அவர் தலித் சாதியிலிருந்து வெளியேறி பிற்பட்ட வகுப்பை சார்ந்தவராகிவிடுவார் என்று கருதி அவருக்குண்டான சலுகைகளை மறுக்கக்கூடாது என்று மாண்புமிகு Bombay High court, Nagpur Bench, நீதியரசர்கள் Rohit B.Deo, Y.G.Khobragade J.J ஆகியோர் அடங்கிய அமர்வு Ms.Priti vs State of Maharastra W.P.No.3724/2022 dated 24.01.2023 என்ற வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
2) ஒருவர் இந்து SC தலித் சாதியிலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினாலும் அவரை BC பிற்படுத்தப்பட்டவர் என்று கருத முடியாது. அவர் மதம் மாறினாலும் சாதி தன்மை மாறுவதில்லை. அதனாலேயே அவருக்குண்டான சலுகைகளை மறுக்கக்கூடாது என்று மாண்புமிகு High Court of Madras நீதியரசர் S.M.Subramaniam அவர்கள் S.Paulraj vs The Tahsildar, Mettur Taluk, and The District Collector, Salem, W.P.No.15193/2016 & WMP.No.13240 & 13241/2016 dated 17.11.2021 என்ற வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.