Warning | by High court to Police to avoid submitting false documents | போலி ஆவணங்களை தாக்கல் செய்தால் கடும் நடவடிக்கை: போலீஸாருக்கு ஹை கோர்ட் எச்சரிக்கை.
-
by admin.service-public.in
- 74
வணக்கம் நண்பர்களே…!
போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்றங்களை ஏமாற்றுவதை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை: போலீஸாருக்கு எச்சரிக்கை.
வழக்கு -1 H.C.P.(MD)No.1579 of 2015 Mrs.S.Josephine : Petitioner Vs. The Commissioner of Police, DATED: 17.11.2015.
1.உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1tsUITDB5qYIGYlxp5XIWP2Y0qrw5mTXe/view?usp=drivesdk
வழக்கு -2 H.C.P.(MD)No.1599 of 2015 M.P.Ashok Kumar Vs. The Inspector of Police,2.Rajesh Dated: 19/11/2015.
உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1tom9zG5o1orUdIe7Wf2Ivg-USL8bzIkO/view?usp=drivesdk
‘போலீஸார் போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்றத்தை ஏமாற்றுகின்றனர். இதை போலீஸார் தொடர்ந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்’ என உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த பெண் ஒருவர், காணாமல்போன தனது 16 வயது மகனைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்தக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அந்த மனு நீதிபதிகள் பி.ஆர்.சிவகுமார், வி.எஸ்.ரவி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மாயமான இளைஞரை போலீஸார் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டதால், மனுவைத் திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் திருச்சி தில்லை நகர் போலீஸார் தாக்கல் செய்த ஆவணங்களில் வழக்குக்கு சம்பந்தம் இல்லாத கதை புனையப்பட்டிருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
நீதிபதிகள் மேலும் கூறியதாவது :-
மனுதாரர் அளித்த புகாரின்பேரில் போலீஸார் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. ஆனால், மாயமான இளைஞருடன் சென்ற பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ‘பெண் மாயம்’ என வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பின்னர் மாயமான ஆணும், பெண்ணும் அவர்களாகவே வீடு திரும்பியுள்ளனர். அவர்களைப் பெற்றோர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதன் பிறகு போலீஸார் இந்த ஆவணங்களைத் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
விருதுநகரில் இளைஞர் ஒருவரால் கடத்தப்பட்ட தனது 19 வயது மகளை மீட்கக் கோரி அப்பெண்ணின் தந்தை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
விருதுநகர் மேற்கு போலீஸார், முதல் தகவல் அறிக்கையில் குற்றத்தின் தன்மை தொடர்பான இடத்தில், ‘பெண் மாயம்’ என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர்.
குற்றவாளிகள் மீது சரியான குற்றப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாதது, போலியான ஆவணங்களைத் தயாரிப்பது, கண்ணுக்குப் புலப்படும் குற்றமாக இருந்தாலும் வழக்கு பதிவு செய்யாமல் புகார்தாரரருக்கு மனு ரசீது மட்டும் வழங்குவது ஆகிய போலீஸாரின் செயல்பாடுகள் அனைத்தும் நீதிமன்றத்தை ஏமாற்றுவதாகும்.
அவர்கள் நீதிமன்றத்தை மட்டும் அல்ல சமுதாயத்தையும் ஏமாற்றுகின்றனர். இதை நிறுத்த வேண்டும். இந்த நிலை எதிர்காலத்திலும் தொடர்ந்தால் நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
நன்றி…!

🔊 Listen to this வணக்கம் நண்பர்களே…! போலி ஆவணங்களை தாக்கல் செய்து நீதிமன்றங்களை ஏமாற்றுவதை நிறுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை: போலீஸாருக்கு எச்சரிக்கை. வழக்கு -1 H.C.P.(MD)No.1579 of 2015 Mrs.S.Josephine : Petitioner Vs. The Commissioner of Police, DATED: 17.11.2015. 1.உயர் நீதிமன்ற தீர்ப்பு நகலை பதிவிறக்கம் செய்ய லிங்க்: https://drive.google.com/file/d/1tsUITDB5qYIGYlxp5XIWP2Y0qrw5mTXe/view?usp=drivesdk வழக்கு -2 H.C.P.(MD)No.1599 of 2015 M.P.Ashok Kumar Vs. The Inspector…