சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் அடிப்படையில் அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் அளிக்கப்படும் மனுக்களை விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வட்டம், கோட்டம் மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி அரசு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு கீழ்க்கண்டவாறு வட்ட, கோட்ட, மாவட்ட அளவிலான குழுக்கள் பின்வரும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும்.
பொதுவாக தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம், 1905 பிரிவு 7ன் கீழ், அரசு நிலங்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் முன்முத லில் மாவட்ட கலெக்டர் அல்லது வட்டாட்சியர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு, ஆக்கிரமிப்பை ஏன் அகற்றக்கூடாது? என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவர். தமிழ்நாடு ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் அறிவிப்பு எந்தவொரு நபரின் அங்கீகாரமற்ற, எந்த ஒரு நிலத்தின் ஆக்கிரமிப்புகளையும் மாவட்ட கலெக்டர், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் (அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு அலுவலரும்) மேற்படி ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் பொழுது தமிழ் நாடு வருவாய் வசூல் சட்டத் தின் படி சட்ட விதிமுறைகளை பின்பற்றி மேற்கண்ட அறிவிக்கைகளை சார்பு செய்து ஆக்கிரமிப்புகளை அசல் மனு வட்டாட்சியரிடம் அளிக்கப் பட வேண்டும்.
மேல்முறையீட்டுக் குழு
அரசு நிலங்களில் ஆக்கிரமிப்புகள் ஏதேனுமிருப்பின் மனு தாரர் வட்டாட்சியரிடம் மனு செய்து கொள்ள வேண்டும். வட்டாட்சியர் அல்லது துணை வட்டாட்சியர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று மனுவின் பேரில் ஆய்வு நடத்த வேண்டும். அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்பது ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டால் தமிழ்நாடு நிலஆக்கிரமிப்புச் சட்டத்தின்படி ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு ஆக்கிரமிப்பை ஏன் அகற்றக்கூடாது என்று விளக்கம் கோரும் அறிவிப்பு அனுப்பப்படும்.
அதனைத் தொடர்ந்து மேற்படி சட்டத்தின் கீழ் உள்ள வழிமுறைகளை வரையறுக்கப்பட்ட கால அளவிற்குள் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு நில ஆக்கிரமிப்புச் சட்டம் 1905ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்ட விவரம் குறித்து எழுத்து மூலமான பதில் மனுதாரருக்கு வழங்கப்பட வேண்டும். இப்பணி மனு பெறப்பட்ட 60 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
வட்டாட்சியர் 60 நாட்களுக்குள் மனுவிற்கு பதில் அளிக்காவிட்டால் அல்லது வட்டாட்சியர் ஆக்கிரமிப்பினை அகற்ற எடுத்த நடவடிக்கை அல்லது பதில் திருப்தி அளிக்காவிட்டால் கோட்ட அளவிலான மேல் முறையீட்டு குழுவில் மனு அளிக்கலாம்.இக்குழுவில் வருவாய் கோட்டாட்சியர், காவல் துணை கண்காணிப் பாளர், துணை ஆய்வாளர் (நில அளவை) ஆகியோர் இடம்பெறுவர். இக்குழு குறைந்தது மாதம் ஒருமுறை கூடி, மேல்முறையீட்டு குழுவிற்கு வந்த மனுக்களை பரிசீலிக்கும். தேவைப்பட்டால் வட்டாட்சியர், நில அளவர்களுடன் மனுதாரர் முன்னி லையில் நேரில் ஆய்வு மேற்கொள்வார். இதுகுறித்து முன்னதாக மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கப்படும். மேல்முறையீட்டு குழு எடுக்கும் முடிவை மனுதாரருக்கு 30 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்.
சீராய்வு குழு
மேல்முறையீட்டு குழுவிடம் இருந்து எந்த பதிலும் 30 நாட்களுக்குள் வராவிட்டால் அல்லது குழு முடிவு திருப்தி அளிக்காவிட்டால் மனுதாரர் மாவட்ட அளவிலான சீராய்வுக் குழுவில் மனு அளிக்கலாம். இக்குழுவில் மாவட்ட வரு வாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் நிலஅளவை உதவி இயக்குநர் ஆகியோர் இடம் பெற்றிருப்பர்.இக்குழு மேலே கோட்ட அளவிலான மேல் முறையீட்டுக்குழு கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்றி உரிய நடவடிக்கை மேற்கொண்டு குறைந்தது மாதம் ஒருமுறை கூடி ஆய்வுக்கு வந்த மனுக்களுக்கு 30 நாட்களுக்குள் தங்களது முடிவை அளிக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வட்டம், கோட்டம் மற்றும் மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
Categories:
ஒலி வடிவில் கேட்க >>
(ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)
குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.