குற்ற விசாரணைகள்

1/22. நீதிமன்றம் எப்படி இருக்கும்? எப்படி இருக்க வேண்டும்?

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 23

நீதிமன்றம் எப்படி இருக்கும் எனத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சினிமாவில் நீதிமன்றத்தை பார்த்துப் பார்த்து பழக்கமாகிவிட்டது. இருந்தாலும் நிஜத்தில் நீதிமன்றம் என்றால் பலருக்கும் பயம்தான் காரணம் நீதிமன்றத்தில் இருக்கக் கூடிய  உண்மையான விசயங்களை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் சினிமாவை பார்த்து நீங்களாகவே வளர்த்துக் கொண்ட கற்பனைதான்.

சினிமாவில் ஒரு ஹீரோ பல பேரை அடித்து நொறுக்குகிறார் ஆனால் நிஜத்தில் முடியுமா? அதே போல்தான் சினிமாவில் நீதிமன்றத்தை எதிர்மறையாகச் சித்தரித்து விட்டார்கள். உண்மையில் நீதிமன்றத்துக்கு போகணும் என்றால், “அதிகமான நியாயமும், கொஞ்சம் தைரியமும் இருந்தால் போதும்” என்ன யோசிக்கிறீங்க?

பிரச்சினை இருந்தாதானே கோர்ட்டுக்கு போறதுக்கு அப்படீன்னா? கடை தெருவுக்குப் போறிங்க, ஏதாவது வாங்கணும் அப்படீங்கிற கட்டாயத்துலியா போறீங்க? இல்லியே! சும்மா ஜாலியா சுத்தி பாத்துட்டு வரலாம் அப்படீன்னு போறீங்க இல்லயா! அதே போல நீதிமன்றத்துக்கும் போகலாம்.

ஆம். நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையை எவர் வேண்டுமானாலும் பார்வையிடும் உரிமை உண்டு. கீழ் நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை உள்ள எல்லா நீதிமன்றங்களும் சட்டப்படி திறந்த நீதிமன்றங்கள்தான். அதாவது அம்மன்றத்தில் நடக்கக் கூடிய விசாரணையை யார் வேண்டுமானாலும் பார்வையிடலாம்.

அதனால நீங்களும் உங்க விருப்படி ஜாலியா டைம் பாஸ் பண்ணனும் என்று நினைக்கும்போது வெட்டியாக ஊரை சுற்றாமல், வீண் வம்பை விலைக்கு வாங்காமல் நீதிமன்றத்தை சுற்றிப் பார்த்துவிட்டு வந்திங்கண்ணா சட்ட விசயத்தோடு சேர்ந்து நிறைய பொது விசயங்களையும் தெரிந்து கொள்ளலாம். இவைகள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கைக்கு உதவும்.

சினிமாவுல நடக்கிறது, நிஜத்துல நடக்காது, அப்படீன்னு சொன்னேன் இல்லையா? இதுவும் அது போல தான். சினிமா மற்றும் சீரியல் நீதிமன்றத்து விசாரணையில் பார்வையாளர்கள் பல பேர் பெஞ்சில உர்கார்ந்திருப்பாங்க.

ஆனா நிஜ நீதி மன்றத்தில் அப்படி உட்காருவதற்கான வசதிகள் சட்டபடி இருக்க வேண்டும். ஆனால், பல நீதிமன்றங்களில் இந்த வசதி இல்லாமல்தான் இருக்கின்றன. நீதிமன்றத்தின் இது போன்ற செயல்களுக்கெல்லாம் காரணம் தமது குற்றம் மக்களுக்கு தெரிந்து விடும் அல்லது வெளிப்பட்டு விடும் என்பதால்தான் என்பது உறுதியாக தெரிகிறது.

எனவே அனைத்து நீதிமன்றங்களும் திறந்த நீதிமன்றங்கள் ஆக செயல்பட தேவையான நடவடிக்கைகள் என்னென்ன என்பதை நீங்களும் மேற்கொள்ளலாம் மேற்கொள்ள வேண்டும்.

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  பக்கம்- 23 நீதிமன்றம் எப்படி இருக்கும் எனத் தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு சினிமாவில் நீதிமன்றத்தை பார்த்துப் பார்த்து பழக்கமாகிவிட்டது. இருந்தாலும் நிஜத்தில் நீதிமன்றம் என்றால் பலருக்கும் பயம்தான் காரணம் நீதிமன்றத்தில் இருக்கக் கூடிய  உண்மையான விசயங்களை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் சினிமாவை பார்த்து நீங்களாகவே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *