
1/26. நீதிமன்றப் பொது அதிகார விளக்கம்.
-
by admin.service-public.in
- 22
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 26
26. நீதிமன்றப் பொது அதிகார விளக்கம்.
நீதிமன்றம் என்பதற்கு இந்திய தண்டனை சட்டம் 1860-இன் பிரிவு 14- ஆனது தனிப்பட்ட நீதிபதி அல்லது நீதிபதிகள் அடங்கிய குழு, “நீதிபூர்வமாக இயங்கும் போது அது நீதிமன்றம்” என விளக்கம் தருகிறது.
நீதிபதி என்பது பொதுவாக நீதிமன்றத்தில் வழக்கை விசாரணை செய்யும் நபரை குறிப்பதாகும் என்றாலும் விசாரிக்கும் வழக்கைப் பொறுத்தும், நீதிமன்றத்தைப் பொறுத்தும், அவரின் பெயர் அவ்வப்போது மாறுபடும்.
- குற்றவியல் வழக்கை விசாரிக்கும் போது “நடுவர்”எனவும்,
- சிவில் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது “நீதிபதி” எனவும்,
- தொழிலாளர் அல்லது திருமணம் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது “தலைமை தாங்கும் அலுவலர்” எனவும்,
- நுகர்வோர் தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது “தலைவர்” எனவும் அழைக்கப்படுவார்.
இந்த மாதிரியான பெயர்கள் அனைத்தும், கீழமை நீதிமன்றங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே பொருந்தும். கீழமை நீதிமன்றத்திற்கும் மேலான அமர்வு நீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் உள்ளவர்கள் “நீதிபதி” என்றே அழைக்கப்படுவார்.
குற்றவியல் நீதிமன்றங்களில் முதல் வகுப்புக் குற்றவியல் நடுவர் என்றும் இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நடுவர் என்றும் தகுதி தரப்பட்டிருக்கும். முதல் வகுப்புக் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் என்பது பெரும்பாலும் மாநகரத்தில் மட்டுமே அமைந்திருக்கும்.
அதே போல் இரண்டாம் வகுப்புக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் என்பது மாவட்டங்களில் அமைந்திருக்கும்.
மாநகரம் என்பது பத்து லட்சம் மக்கள் தொகைக்கும் அதிகமாக உள்ள பகுதியை மட்டுமே குறிக்கும் என கு.வி.மு.வி 8(1) விளக்கம் அளிக்கிறது.
தமிழ்நாட்டைப் பொருத்த அளவில் சென்னை, சேலம், திருச்சிராப்பள்ளி, மதுரை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி என மொத்தம் ஆறு மாநகரங்கள் உள்ளன.

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 26 26. நீதிமன்றப் பொது அதிகார விளக்கம். நீதிமன்றம் என்பதற்கு இந்திய தண்டனை சட்டம் 1860-இன் பிரிவு 14- ஆனது தனிப்பட்ட நீதிபதி அல்லது நீதிபதிகள் அடங்கிய குழு, “நீதிபூர்வமாக இயங்கும் போது அது நீதிமன்றம்” என விளக்கம் தருகிறது. நீதிபதி என்பது பொதுவாக நீதிமன்றத்தில்…