குற்ற விசாரணைகள்

1/21. நீதிமன்றம் செல்ல ஆங்கில அறிவுதேவையா?

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.

பொதுவாக ஆங்கிலம் பேசுபவர்களை பார்த்தால் அவரை அறிவாளி என நினைக்கிறோம். இது தவறு.

   “ஆங்கிலம் என்பது தமிழை போன்றே ஒரு மொழி தானே தவிர, அறிவு அல்ல”

என்பதை நீங்கள் முதலில் நன்றாக விளங்கி கொள்ள வேண்டும். இந்த ஆங்கிலத்தை அரை குறையாக தெரிந்துவைத்துக் கொண்டுதான் வக்கீல்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து கூடவே நீதிபதிகளும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைத் தடுக்க ஒரே வழி உங்களின் தாய் மொழி என்னவோ அதையே நீங்கள் நீதிமன்றங்களில் பயன்படுத்துவதுதான். நான் பயன்படுத்தலாம், அதே போல் குறிப்பாக அரசு மத்தவங்க பயன்படுத்தணுமே!

அதிகாரிகளும், நீதிபதிகளும் பயன்படுத்தனும் என்று நினைக்க முடியமா? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். சந்தேகமே வேண்டாம். உங்களின் தாய் மொழி என்னவோ

அந்த மொழி அரசு ஊழியருக்கும், நீதிபதிக்கும் தெரிந்திருந்தால் அந்த மொழியைத் தான் கட்டாயம் பயன்படுத்தியாக வேண்டும்.

ஆனால் அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள் ஏன் என்றால், அவங்க என்ன தப்பு செய்யிறாங்க அப்படீங்கிறத புரிஞ்சிகிட்டு நீங்க முழிச்சிகிடுவீங்களே! தப்பைத் தட்டிக் கேட்டு விடுவீர்களே! அதனாலதான்.

அதனால் சட்ட விழிப்பணர்வு அடைஞ்சிட்ட நீங்க இனிமே சும்மா இருக்க முடியுமா என்ன? தாய்மொழியைத்தான் பயன்படுத்தவேண்டும் என வற்புறுத்தலாம். அல்ல அல்ல உரிமையோடு கோரலாம்.

ஆம்! “இந்திய சாசன கோட்பாடு 350-இன் படி உங்களின் தாய் மொழி என்னவோ அதிலேயே இந்தியாவில் பணியாற்றும் எந்த அரசு அதிகாரியிடமும் அல்லது நீதிபதியிடமும் மனு கொடுக்கும் உரிமை உங்களுக்கு உண்டு”.

இப்படி உங்களால் கொடுக்கப்படும் மனுவிற்கு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் என்பது உங்களுக்குத்

தெரிய வேண்டும் அல்லவா? அதனால் அவர்களும் நீங்கள் என்ன மொழியில் மனு கொடுத்தீர்களோ அதே மொழியில்தான் பதில் கொடுக்க வேண்டும். அவர்கள் கொடுக்காவிட்டால் அதனை கோரி பெறுவது உங்களின் சட்டப்படியான உரிமை.

அப்படியெல்லாம் கொடுக்க முடியாது என யாரும் சொல்ல முடியாது. இப்படி ஒரு மொழி பெயர்ப்பைக் குடியரசு தலைவர் மாளிகையில் இருந்தே 2004ம் ஆண்டில் பெற்றுள்ளேன்.

“தமிழ் நாட்டைப் பொறுத்த அளவில் தமிழ்நாடு ஆட்சி மொழி சட்டம் 1956- இன் பிரிவு 4ஆ (1) – ன் படி தமிழ்நாட்டில் உயர்நீதிமன்றங்களுக்கும்  கீழான நீதிமன்றங்கள் அனைத்திலும் வழக்குகள் தமிழிலேயே தாக்கல் செய்யப்பட மற்றும் நடத்தப்பட வேண்டும் என வரையறை உள்ளது”.

ஆனால் இதனை சட்டத்தின் பாதுகாவலர்களாக இருந்து பாதுகாக்க வேண்டிய வக்கீல்களும், வக்கீலாய் இருந்து நீதிபதியான நீதிபதிகளும் இதை எல்லாம் கொஞ்சம் கூட மதிக்காமல் மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற கருத்துடனும், அதே சமயம் தான் செய்கின்ற தவறு வெளியில் தெரிந்து விடக் கூடாது என்கிற காரணத்துக்காகவும் அவர்களுக்கு நன்றாகத் தெரிந்த தாய் மொழியில் வழக்கு நடத்துவதை விட்டு விட்டு,

என்னமோ, “ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தில் படித்தவர்களைப்போல அரை குறையான ஆங்கிலத்தில் வழக்கை நடத்தி கொண்டு மக்களின் அடிப்படை உரிமை பறிப்பு கொடுமையை செய்து வருகின்றனர்”.

தமிழ் மொழி தெரியாத ஆனால் உயர்நீதிமன்றத்துக்கு கீழான நீதிமன்றங்களில் பணியாற்றுகின்ற நீதிபதிகளுக்கு மட்டும் “விதி விலக்காக” உயர்நீதிமன்றத்தின் சிறப்பான அனுமதியை பெற்று ஆங்கில மொழியில் வழக்கு நடத்தும் உரிமை வழங்கப்படும். மாநில மொழி தெரியாத நீதிபதிகள் உயர்நீதி மன்றத்துக்கு கீழான நீதிமன்றங்களில்.இருப்பதற்கு வாய்ப்புகள் மிக, மிகக் குறைவே.

ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றத்திலும் கூட, தாய் மொழி தெரிந்த நீதிபதிகள் தான் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதற்கு வாய்ப்புண்டு என்பதால் இந்திய சாசனகோட்பாடு 348 (2) – இன் படி மாநிலத்தின் மொழி என்னவோ அதையே அம்மாநில உயர்நீதிமன்றங்களில் பிறப்பிக்கபடும் உத்தரவு, தீர்ப்பு ஆகியவற்றை தவிர மற்ற நடவடிக்கைகளுக்கு, “அதாவது மனு செய்வதற்கு, பதில் தாக்கல் செய்வதற்கு, வாதுரை உட்பட எது ஒன்றையும் தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தும் உரிமையை அந்த மாநிலத்தின் ஆளுநர் வழங்கலாம்”.

தமிழ்நாட்டை பொருத்த வரை இந்த உரிமை இந்நூலின் முதற்பதிப்பு வெளியான சுமார் மூன்று மாதத்திற்கு பின்பு அதாவது 06-12-2006 அன்று தமிழக சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது மிகவும் மகிழ்ச்சியான செய்தியாகும். இதற்க்கு வழிவகை செய்த தாய்மொழி தன்னார்வலர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். 

இதேபோல் மற்ற மாநிலங்களின் தாய்மொழி தன்னார்வலர்கள் ஆக்க பூர்வமான முயற்ச்சிகளை மேற்கொண்டு சட்ட உரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய கடமையாகும்.

உங்கள் வழக்கில் நீங்களே வாதாடும் போது இது போன்ற சட்ட உரிமைகளை எல்லாம் கீழ் நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரை நிலைக் நாட்டி கொள்ளலாம். அப்போதுதான் வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கும் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் இது போன்ற உரிமைகள் எல்லாம் உள்ளது என்பதை நீங்கள் தெரிவிக்க முடியும்.

“எனவே உங்களுக்கு ஆங்கிலம் தெரியவில்லையே என்ற கவலை சிறிதும் வேண்டாம்!”

உலகிலேயே இந்தியாவில் மட்டும்தான் ஆங்கிலம் அதிக அளவில் இது போன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேசிய மொழியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில மொழிகள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றம் மட்டுமல்லாது உச்சநீதிமன்றம் வரை அங்கீகரிக்கப்பட வேண்டும் அப்போதுதான் அது உண்மையிலேயே தேசிய அங்கீகாரத்தை பெருகிறது.

இந்த சூழ்நிலை இல்லாத போது தமிழ் உள்பட பல மாநில மொழிகளை ஏன் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழியாக தேர்ந்தெடுத்தார்கள்? தேர்ந்தெடுத்ததால் அந்தந்த மாநிலத்தில் வசிப்போரைத் தவிர, இந்தியாவின் பிற பகுதியில் என்ன பலன் கிடைத்து விட்டது என்பதை, இன்றைக்கு அதை பயன்படுத்த வேண்டிய தாய் மொழியாக கொண்டவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

எவர் ஒருவரும் தாய் மொழியில் பயிலும் போது தான்,”கற்பது மிகவும் எளிமையானதாகவும், விரைவில் புரியும் தன்மை உடையதாகவும் இருக்கும்“.

இப்படி புரிந்து விட்டால் அது ஏன் ? அப்படி இருக்கிறது…இப்படி இல்லாமல்… என்ற வகையில் எல்லாம் ஆராய்ச்சி செய்ய முடியும். இதை எல்லாம் கொஞ்சம் கூட விளங்கிக் கொள்ளாமல், 

“நமது வக்கீல்களும் நீதிபதிகளும் என்னமோ ஆக்ஸ்போர்டு யுனிவர் சிட்டியில் ஆங்கிலம் பயின்றவர்களை போல் நடித்துக் கொண்டு திறமையற்ற வர்களாக இருக்கிறார்கள். கூடவே இருக்கும் கொஞ்ச நஞ்ச திறமையையும் இழந்து கொண்டிருக்கிறார்கள்”

”நம்மோட உணர்வுகளை நமது தாய் மொழியல்லாத வேற்று மொழியாளர்கள் கூட மதிக்க ஆரம்பித்ததன் விளைவு தான், உலக அளவில் கணிணியில் தமிழ், உலா.பேசியில், தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள தமிழ் என புதிய புதிய சாப்ட்வேர் எனப்படும் மென் பொருட்களை கண்டு பிடித்து மக்களின் சிந்தனைக்கு விருந்து கொடுத்து நமது செயல் திறனை ஊக்கப்படுத்தி உள்ளனர்”.

ஆனால், “நம் நீதித்துறையில் இவ்வாறு செய்யாததற்கு என்ன காரணமாக இருக்க முடியும்? நீதித்துறையைப் பற்றியும், அதில் நடக்கும் தவறுகள் பற்றியும் யாருக்கும் தெரிந்து விடக் கூடாது… மக்கள் சட்ட விழிப்புணர்வு இல்லாவர்களாகவேதான் இருக்கவேண்டும் என்று கற்பனை செய்து கொண்டு அவர்களும் சட்ட   விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர் என்பது தான் உண்மை!”

இனி மேல் அவர்களின் கற்பனை எல்லாம் இது போன்ற நூல்களால் உடைத்து எறியப்பட வேண்டும் என்ற காரணத்தினால்தான் மிகுந்த சிரமத்திற்கு இடையில் கொண்டு வந்திருக்கிறோம். இதன் மூலம் நீங்கள் சட்ட விழிப்புணர்வு பெற்று, அவர்களையும் பெற வைப்பீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பொதுவாக ஆங்கிலம் பேசுபவர்களை பார்த்தால் அவரை அறிவாளி என நினைக்கிறோம். இது தவறு.    “ஆங்கிலம் என்பது தமிழை போன்றே ஒரு மொழி தானே தவிர, அறிவு அல்ல” என்பதை நீங்கள் முதலில் நன்றாக விளங்கி கொள்ள வேண்டும். இந்த ஆங்கிலத்தை அரை குறையாக தெரிந்துவைத்துக் கொண்டுதான் வக்கீல்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடன்…

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பொதுவாக ஆங்கிலம் பேசுபவர்களை பார்த்தால் அவரை அறிவாளி என நினைக்கிறோம். இது தவறு.    “ஆங்கிலம் என்பது தமிழை போன்றே ஒரு மொழி தானே தவிர, அறிவு அல்ல” என்பதை நீங்கள் முதலில் நன்றாக விளங்கி கொள்ள வேண்டும். இந்த ஆங்கிலத்தை அரை குறையாக தெரிந்துவைத்துக் கொண்டுதான் வக்கீல்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களுடன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *