
1/19. சேவைக் குறைபாடு நிச்சயம்தான்.
-
by admin.service-public.in
- 36
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 20
சட்டப் புத்தகங்களை எந்த தனி நபரும் உரிமை கொண்டாட முடியாது. ஏனெனில் சட்டம் என்பது தனிப்பட்ட ஒரு நபரின் சிந்தனையால் எழுந்தது அல்ல. “அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பொது நோக்கத்திற்காக அரசால் தீவிரமான ஆராய்ச்சிக்கு பிறகு கொண்டு வரப்படுவதாகும்’
இவைகளை எல்லாம் எந்த மொழி பெயர்ப்பாளரும், வெளியீட்டாளரும் புரிந்து கொண்டதாக அல்லது யோசித்ததாகக் கூடத் தெரியவில்லை. இதன் காரணத்தால் சட்டப் புத்தகம் வெளியிடும் போது அதில் பதிப்பு உரிமை தமக்கே என்று போட்டு கொள்கிறார்கள் இது சரியல்ல.
அதே சமயம் இந்த வெளியீட்டில் ஏதும் பிழை இருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பாக மாட்டோம் எனவும் முன் பக்கத்திலேயே குறிப்புக் கொடுத்து இருப்பார்கள். உரிமை கொண்டாடுகிறவர்கள் அதில் பிரச்சினை வரும் போது அதை சந்திக்கவும் தயாராகத் தானே இருக்கணும்? ஒட்டு மொத்தத்தில் இந்த இரண்டு கருத்துக்களும் முன்னுக்குப் பின் முரணானதே.
இவர்களின் இந்த நிலைப்பாட்டிற்கு காரணம் என்னவென்றால், இவர்கள் சட்டத்தை மொழி பெயர்ப்புதான் செய்கிறார்களே ஒழிய, “இந்த நூலில் சொல்லப் பட்டுள்ளது போல இந்த பிரிவுக்கு விளக்கம் இது தான் அல்லது இந்த பிரிவு இதைத்தான் சொல்கிறது என்று ஆணித்தரமான கருத்தை அனுபவபூர்வமாக சொல்ல வில்லை”
வரையறை செய்யப்படாத எது ஒன்றிலும் கருத்து சொல்வதில் பிழை இருந்தால் அதைத் தவறாக எடுத்து கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரோட கருத்து அவ்வளவுதான். ஆனால் சட்டம் அப்படியல்ல. வரையறை செய்யப்பட்ட ஒன்று. வரையறை செய்யப்பட்ட சட்டத்தில் ஆராய்ச்சி செய்ய முடியாததால்தான் மொழி பெயர்பாளர்களால் உறுதியாக சொல்ல முடிவதில்லை.
எது எப்படி இருப்பினும், எனக்குத் தெரிந்ததைதான் நான் உங்களுக்குச் சொல்லி உள்ளேன். எனக்கு தெரிந்தவை என்றால், ஒன்று நானாக நடைமுறைப்படுத்தியது. மற்றொன்று எனது ஆலோசனையின் பேரில் உங்களைப் போன்ற சாதனையாளர்கள் சாதித்துக் காட்டியது ஆகும். இதன் அடிப்படையில், நியாயமான கண்ணோட்டத்தோடு ஆராய்ச்சி செய்து எடுத்துள்ள துணிச்சலான முடிவுகள் ஆகும்.
எனவே இதை நீங்கள் பயன் படுத்தினால் நிச்சயமாக எந்த கருத்து வேறுபாடும் வந்து விடாது என உறுதியாகக் கூறுகிறேன் “ஒரு வேளை இதில் உள்ள சட்டக் கருத்துகளை நீங்கள் நடை முறைப்படுத்தும் போது ஏதேனும் சட்டச் சிக்கல் எழுந்தால், அதைத் தீர்க்கும் பொருட்டு நீங்கள் அழைப்பாணை அனுப்பி அழைக்கும் இந்தியாவின் எந்தப் பகுதி நீதிமன்றத்துக்கும் வரத்தயாராய் இருக்கிறேன்”
எனவே, தமக்கு பாதிப்பானது என்ற வகையில் மொழி பெயர்ப்பாளர் எதாவது ஒரு சட்ட பிரிவை சொல்லாமல் இருந்தாலும் அல்லது மொழி பெயர்ப்பு தவறாக இருந்தாலும் கண்டிப்பாக நுகர்வோர் சேவைக் குறைபாடு தான். இதற்காக நுகர்வோர் சட்டபடி நடவடிக்கை எடுக்கலாம்.

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 20 சட்டப் புத்தகங்களை எந்த தனி நபரும் உரிமை கொண்டாட முடியாது. ஏனெனில் சட்டம் என்பது தனிப்பட்ட ஒரு நபரின் சிந்தனையால் எழுந்தது அல்ல. “அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற பொது நோக்கத்திற்காக அரசால் தீவிரமான ஆராய்ச்சிக்கு பிறகு கொண்டு வரப்படுவதாகும்’ இவைகளை எல்லாம் எந்த…