
1/10. உங்களுக்கு சட்டம் தெரியணுமா?
-
by admin.service-public.in
- 22
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 14
மற்ற அலுவலகத்துக்கு போய் தேவையானவற்றை கேட்கிறத்துக்கும், கோர்ட்டுல போய் கேட்கிறத்துக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் கிடையாது. அது நிர்வாகத்துறை சார்ந்த அலுவலகம். இது நீதித்துறை சார்ந்த அலுவலகம். அவ்வளவு தான்! ஆனா நீங்க என்ன நினைக்கிறீங்க, கோர்ட்டுக்கு போகனும்னா சட்டம் தெரியணும் அப்படீங்கிற கற்பனையில இருக்கீங்க…
ஒன்றை மட்டும் நல்லா ஞாபகம் வச்சிக்குங்க. தெரிஞ்சவங்க அப்படீன்னு முழுமையா சட்டம் இந்தியாவுல யாருமே கிடையாது. அதனாலதான் ஒவ்வொரு நீதிமன்றத்துலேயும் கூட தீர்ப்பை மாத்தி மாத்தி சொல்லுறாங்க. சட்டத்தில் பட்டம் பெற்று பணியாற்றும் நீதிபதிகளே சட்டம் தெரியாமல்தான் இருக்கிறாங்க அப்படீங்கிறது உண்மையாக இருக்கும் போது எதற்காக உங்களுக்கு மட்டும் தான் சட்டம் தெரியல அப்படீன்னு நினைச்சிகிட்டிருக்கீங்க?
உங்களுக்கு தெரிய வேண்டியது எல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். உங்க பிரச்சினையில் உங்களுக்கு நியாயம் இருக்கா என்பதைக் கணக்குப் போட்டு பார்க்கிறது மட்டும் பெரிய விசயமே தான். இந்த கணக்கு ஒண்ணும் பெரிய விசயமே கிடையாது. உங்களுக்கு ஒருத்தர் பிரச்சினை பண்ணிட்டார் அப்படீன்னு நினைக்கிறீங்க. அதுல உங்களுக்கு நியாயம் இருக்கா அப்படீன்னு கணக்கு பார்க்கணும் அப்படீன்னா, அவரோட நிலையில உங்களையும், அவரை உங்க நிலையிலேயும் வைத்து யோசித்துப் பார்த்திங்கன்னா உங்களுக்கு நியாயம் இருக்கா அப்படீன்னு தெரிஞ்சிடும்.
சரி… நியாயம் இருக்கு அப்படீன்னு நடுநிலை நோக்கோடு உணர்ந்திட்டிங்க. இதற்காக நீதிமன்றத்துக்கு சென்று நியாயம் கேட்கலாம். இதுக்காக சட்டம் எல்லாம் ஒன்றும் பெரிய அளவில் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற அவசியமெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனாலும் நீங்க சட்டம் தெரிந்து வைச்சிருந்திங்க அப்படீன்னா வக்கீலும்,
நீதிபதிகளும் உங்களை மதிப்பார்கள். இதை எல்லாம் விட மிக முக்கியமாக நீங்கள் அடுத்தவர்களின் நியாயங்களுக்கு சட்ட ஆலோசகராகவும், சட்ட விழிப்புணர்வு அடைய துடிப்போருக்குப் பயிற்சி கொடுப்பவராகவும் மாறலாம்.

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 14 மற்ற அலுவலகத்துக்கு போய் தேவையானவற்றை கேட்கிறத்துக்கும், கோர்ட்டுல போய் கேட்கிறத்துக்கும் கொஞ்சம் கூட வித்தியாசம் கிடையாது. அது நிர்வாகத்துறை சார்ந்த அலுவலகம். இது நீதித்துறை சார்ந்த அலுவலகம். அவ்வளவு தான்! ஆனா நீங்க என்ன நினைக்கிறீங்க, கோர்ட்டுக்கு போகனும்னா சட்டம் தெரியணும் அப்படீங்கிற கற்பனையில…