
1/5. உங்கள் வழக்கில் நீங்கள் வக்காலத்து போடவேண்டுமா? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
-
by admin.service-public.in
- 41
உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா?
உங்கள் வழக்கில் நீங்களே ஆஜராகும் போது, எனது வழக்கில் நானே ஆஜராகி வாதாட போகிறேன், அப்படீன்னு, அனுமதி கோரி மனு போட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா இது ஒங்களோட அடிப்படை உரிமை என்பதை முன்பு சொல்லி இருந்தேன். இந்த மாதிரி அடிப்படை உரிமைகளை செய்யும் போது அதற்கு யாரிடமும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை. அதே போல் நீங்கள் ஒரு வேளை தெரியாமல் கோரினாலும், இதை உங்களுக்கு யாரும் பிச்சை போட வேண்டிய உரிமையும் இல்லை.
ஒரு சில நீதிபதிகள் என் வழக்கில் நானே வாதாட போறேன் அப்படீன்னு மனு போட சொல்லி அடம்பிடிப்பாங்க. காரணம் அறியாமை தான் அப்படீன்னு நீங்க நினைக்கலாம். இது உண்மைதான் என்றாலும், இதற்கு மேலும் ஒரு சிறப்பான காரணமும் உண்டு என்றால் அது பயம்தான். காரணம் “உங்க வழக்க நீங்களே நடத்துறீங்க அப்படீன்னா, கண்டிப்பா நீங்க விபரமான ஆளா இருப்பிங்க அப்படீங்கிறதை விட வில்லங்கமான ஆளாகவும் இருப்பிங்க” அப்படீன்னு நினைத்து உங்களை சோதிப்பதற்காக நீதிபதிகள் போடுற தப்புக் கணக்கு தான்!
அதாவது ஒங்களுக்கு கரெக்டா சட்டம் தெரியுதா? அப்படீன்னு செக் பண்ணுறது தான். அதோட நாம் சட்டப் படிப்பு படிச்சும் தெரிந்து கொள்ள முடியாத விசயத்த இவங்க எப்படி தெரிஞ்சி வச்சிருக்காங்க! அப்படீங்கிற ஆர்வக்கோளாறும் தான்.
எந்த நீதிமன்றமாக இருந்தாலும் சரி! வழக்காக இருந்தாலும் சரி! வழக்கில நீங்க மனுதாராக இருந்தாலும் சரி! எதிர் மனுதாராக இருந்தாலும் சரி! உங்கள் வழக்கில் நீங்களே ஆஜராகி வாதாடுவதற்கு அப்படீன்னு ஒவ்வொரு சட்டத்திலும் விதிகள் இருக்கு. என்றாலும், குற்றம் சாட்டப்பட்ட கைதி தன் மீதான வழக்கைத் தானே எதிர்த்து நடத்த தனியாக சட்ட பிரிவு இல்லை. இது ஒரு கைதியின் அடிப்படை உரிமையை பறிப்பதாகும். இந்திய அரசமைப்பு கோட்பாடு 19-க்கு எதிரானதும் ஆகும்.
சரி… இது நம்மோட அடிப்படை உரிமைக்கு எதிரானது என்பது ஒரு புறம் இருக்க, இதற்கு என்ன காரணம் என ஆராய்ந்தால் வழக்கறிஞரால் மட்டுமே தான் ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் தன்னை தற்காத்து கொள்ள இயலும் என நம்புவதால்தான் என்பது உண்மையோ, பொய்யோ. ஆனால், “உங்க பிரச்சனையை உங்களைத் தவிர வேறுயாருக்கும் கரெக்டா சொல்ல தெரியாது என்பதை சட்டத்தை ஆராய்ந்தவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை என்பது தான் உண்மை”

🔊 Listen to this உங்க வழக்குல நீங்க வக்காலத்து போடனுமா? உங்கள் வழக்கில் நீங்களே ஆஜராகும் போது, எனது வழக்கில் நானே ஆஜராகி வாதாட போகிறேன், அப்படீன்னு, அனுமதி கோரி மனு போட வேண்டிய அவசியம் இல்லை. ஏன்னா இது ஒங்களோட அடிப்படை உரிமை என்பதை முன்பு சொல்லி இருந்தேன். இந்த மாதிரி அடிப்படை உரிமைகளை செய்யும் போது அதற்கு யாரிடமும் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை. அதே…