”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. பக்கம்- 14
எப்பவும் ஒரு விசயத்தை சொல்கிறவர்கள் அதில் உள்ள நல்ல விசயங்களை மட்டுமே சொல்வார்கள், குறைகளைச் சொல்ல மாட்டார்கள். உங்களுக்கு நீங்களே வாதாடினால், எப்படி எல்லாம் வெற்றி பெறுவதற்கு வாய்ப் உண்டு என எடுத்து காட்டினேனோ, அதே போல் குறை ஏற்பட வாய்ப்பு உண்டா? என்பதையும் தொகுத்துள்ளேன் .
உங்களுக்கு நீங்களே வாதாடுவதில் சிரமமானது என்று சொல்ல போனால், வேலை வெட்டிகளை விட்டுட்டு நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு நடத்துவது சாத்தியமா என்பது தான்.
குற்றவியல் வழக்கு மட்டுமன்றி, அனைத்து வழக்குகளையும் விரைவாக முடிக்கத்தான் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டு உள்ளது. அதை நீதிமன்றம் கடைப்பிடிக்கிறதோ இல்லியோ, நீங்க கடைப்பிடிக்க ஆரம்பித்தாலே வழக்கு விரைவாக முடிந்து விடும். இதை எப்படி எல்லாம் நடை முறைப்படுத்தலாம் என்பதை இந்நூலின் பிற்பகுதியில் சொல்லப்பட்டு உள்ளது. எனவே நீதிமன்றத்துக்கு சென்று வழக்கை நடத்துவது ஒரு சிரமமான காரியமே அல்ல. இதனை சிரமாக நினைத்தால் இதை விட சிரமத்தை எல்லாம் சந்திக்க நேரிடும்.
‘எச்சரிக்கை’ ‘எச்சரிக்கை”
நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகித்தான் எதையும் தாக்கல் செய்ய வேண்டும், தகவலை சொல்ல வேண்டும் என்று எந்த சட்ட விதியும் இல்லை என்றாலும், இதை நடை முறையில் பழக்கத்தில் வைத்திருக்கிறார்கள்.
இதற்கு முக்கிய காரணம், கடந்த பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில் வக்கீல்கள்தான் வாதாடி வருகின்றனர். இவர்களுக்கு அனுதினமும் அங்குதான் வேலை. ஆனால், நமக்கு அப்படியல்ல. இந்த கெட்ட பழக்கம் எல்லாம் நமக்கு எதற்கு? எனவே எந்த தகவலையும் கடிதம் மூலமாகவே அனுப்பலாம். பதில் கேட்டு பெறலாம்.
“எனக்குத் தெரிய வீட்டில் இருந்து கொண்டே வழக்கை நடத்தி முடிக்கலாம். சட்டங்களும், விதிகளும் அவ்வளவு தெளிவாக உள்ளன“.
ஆம்! சமீபத்தில் என்மீதும், கேர் சொசைட்டி அய்யப்பன் மீதும், தமிழ்நாட்டில் உள்ள விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், தொடுக்கப்பட்ட அசல் வழக்கு எண் 210/2006இல் இருவருக்காகவும், நானே கடிதம் மூலமாகவே பதிலுரை தாக்கல் செய்ததன் மூலம், ஒரே விசாரணையில் எதிர் மனுதாரையும், அவரது வக்கீலையும் ஆஜராக முடியாதபடி செய்து வழக்கை எனக்கு சாதகமாக்கி கொண்டுள்ளேன்.
எனவே உரிமையியல் மட்டுமல்லாது அனைத்து விதமான வழக்குகளிலுமே, மனு உள்ளிட்ட அனைத்தையும் நீதிமன்றத்திற்கு கடிதம் மூலமாகவே அனுப்பலாம். ஆனால் இப்படி எல்லாம் அனுப்ப முடியாது என சில கீழமை நீதிமன்றங்களில் வாதம் செய்யலாம். அது தவறு.
உச்ச நீதிமன்றம் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் கடிதம் மூலமாக வரக்கூடிய சங்கதிகளை வழக்காக கருதி தீர்ப்புகளை சொல்லி இருக்கின்றன. மேலும், கடந்த வருடம் முதல் இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் மின் அஞ்சல் மூலம் வழக்குகளை பதிவு செய்யும் வசதியை செய்து தந்துள்ளதையும் நினைவில் கொண்டு கீழமை நீதிமன்றங்களில்கடிதம் மூலமாகவே காரியத்தை முடித்து கொள்ள முன் வர வேண்டும்.
அதே போல், சாட்சியத்தை கூட சத்திய பிரமாணமாக தயார் செய்து அனுப்பி வைக்கலாம். ஆனால் ஒரே ஒரு முறை மட்டும் நீதிமன்றத்துக்குக் கட்டாயம் செல்ல வேண்டியிருக்கும்.
எதற்காக என புரிந்து இருக்குமே! சத்திய பிரமாண சாட்சியத்தின் மீது உங்களை எதிர்தரப்பினர் குறுக்கு விசாரணை செய்யணும் இல்லியா? அதுக்காகத் தான்.
அப்படி நீதிமன்றத்துக்கு எது ஒன்றையும் கடிதம் மூலமாக அனுப்பும் போது, அப்படியே எதிர் தரப்பினருக்கும் அதன் நகலை அனுப்பி வைத்து விட்டு நீதிபதிக்கும் தகவல் சொல்வதால், உங்களின் சட்டம் மற்றும் விதிகளின் படியான செயல்பாடுகளின் தன்மை நீதிபதிக்குப் பிடித்து விடும். வழக்கும் உங்களுக்கு எந்த வித சிரமமும் தராத வகையில் முறையாக நடக்கும்.
இதில் கூடுதலான ஒரு நன்மையும் உண்டு. நேரடியாக நீதிமன்றத்தில் மனுவை கொடுக்கும் போது அதற்கு உரிய மனு தராமல் இழுத்தடிப்பார்கள். அந்த மனுவிற்கு அவர்களால் பதில் செல்ல இயலாத போது அதை மறைத்து
தப்பிக்க முயற்ச்சிப்பார்கள். நீங்கள் தபால் மூலம் மனுவை அனுப்பும் போது அவர்களின் இது போன்ற தில்லாலங்கடி
வேலைகளை எல்லாம் நீங்கள் தடுக்க முடியும்.