குற்ற விசாரணைகள்

1/8. நீங்க வாதாடுவதற்கும், வக்கீல் வாதாடுவதற்கும் உள்ள வித்தியாசம்

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.

8. நீங்க வாதாடுவதற்கும், வக்கீல் வாதாடுவதற்கும் உள்ள வித்தியாசம்

உங்க வழக்குல நீங்க தான் கண்டிப்பா வாதாடணும். அப்பதான் பிரச்சனைகளை எளிதாகத் தீர்க்கலாம். இல்லைன்னா பிரச்சினை பெரிசாகத்தான் போகும். இது ஏன், எவ்வாறு என்பதைத்தான் வேறுபடுத்திக் காட்டி உள்ளேன். இப்படி வேறுபடுத்திக் காட்டியிருப்பது இந்நூலின் கருத்தையும் தத்துவத்தை வலியுறுத்துவதற்காகத் தானே அன்றி வேறு எதற்காகவும் அல்ல.

 இப்படி பல வேறுபாடுகளை உதாரணங்களாகச் சொல்லலாம். இவைகளை நன்றாக புரிந்து கொள்வது சாலச் சிறந்தது.

யார் எந்த கருத்தை வலியுருத்தினாலும் ,அதில் உள்ள நல்ல சங்கதிகளை மட்டுமே தெரிவிப்பார்கள் கெட்ட கருத்துக்களை மறைத்து விடுவார்கள்.

 அது போல் மறைக்காமல் இரண்டு விதமான கருத்தையும் தர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், கெட்ட கருத்தை கண்டுபிடிக்கும் திறமை எனக் இல்லாததால் இங்கு உங்களுக்கு தற்போது தெரிவிக்க முடியவில்லை. பின்வரும் காலங்களில் தெரிவிக்க முயற்சி எடுப்பேன் என்பதில் மாற்று கருத்து இருக்காது.

 எது எப்படி இருப்பினும், இதில் உள்ள கெட்ட கருத்தை நீங்கள் கண்டு பிடித்துத் தெரிவித்து, அது சரியான கருத்தாக இருந்தால் அதை சேர்க்கவும் தயாராக உள்ளேன்

ஒரு தொழிலை முறையாக செய்யும் போது அது தொழில். அதையே முறையில்லாமல் செய்யும் போது அது சேவைக் குறைபாடு. அதாவது நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி சேவைக் குறைபாடு ஆகும். முறையீட்டிற்கு ஒரு வக்கீல் உள்ளாகக் கூடாது என்றால் அவர் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைத் தாங்களே அறிவீர்கள். அல்லவா? முக்கியமாக அவர் உங்கள் வழக்கில் வெற்றி பெற்றுத் தந்து விட்டார் என்று வைத்து கொண்டாலும் கூட அவரின் சேவை முடிந்து விடவில்லை. வழக்கில் தோற்றவர் நீதிமன்றத்தில் பொய்யான வழக்கை தாக்கல் செய்தார் என்றோ அல்லது பொய்யான சான்றாவணங்களை தாக்கல் செய்து நீதி நிர்வாகத்தை பாதிக்கச் செய்து விட்டார் என தண்டனை வாங்கிக் கொடுக்கும் போது தான் வக்கீலின் சேவை முடிவுக்கு வருகிறது. இது வரை எந்த வக்கீலாவது செய்திருக்கிறார்களா?

ஏன் செய்யனும்? செய்யமாட்டார்கள்! இப்படி எல்லாம் நடவடிக்கை எடுத்தா அப்புறம் யாருமே தேவையில்லாத பிரச்சினை பண்ணமாட்டாங்க. அதனால் போலீஸ்ல வழக்கு வராது. இது இரண்டும் இல்லேன்னா வக்கீலோட பாடு திண்டாட்டம் தானே? அதான். இது தான் வக்கீலோட தொழில் தர்மமா? .

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 8. நீங்க வாதாடுவதற்கும், வக்கீல் வாதாடுவதற்கும் உள்ள வித்தியாசம் உங்க வழக்குல நீங்க தான் கண்டிப்பா வாதாடணும். அப்பதான் பிரச்சனைகளை எளிதாகத் தீர்க்கலாம். இல்லைன்னா பிரச்சினை பெரிசாகத்தான் போகும். இது ஏன், எவ்வாறு என்பதைத்தான் வேறுபடுத்திக் காட்டி உள்ளேன். இப்படி வேறுபடுத்திக் காட்டியிருப்பது இந்நூலின் கருத்தையும் தத்துவத்தை…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *