
1/6. உங்கள் பிரச்னை யாருக்கு தெரியும்? (புத்தகம்-நீதியைத்தேடி! குற்ற விசாரணைகள்)
-
by admin.service-public.in
- 87
உங்க பிரச்சனை யாருக்கு தெரியும்?
நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்! என்ற இந்த நூல் தலைப்பில் அசைக்கவோ, மறுக்கவோ, மாற்று கருத்து எதுவும் எழவோ இயலாத ஒரு தத்துவம் அடங்கி இருக்கிறது. அது உங்க பிரச்சினைய உங்களை தவிர வேறு யாராலும் கரெக்டா சொல்ல முடியாது அப்படீங்கிறதுதான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. எனவே ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மட்டும் அல்ல. உங்கள் பிரச்சினைக்காக வக்கீல் வைத்து வாதாடி மிக எளிதாக வெற்றி பெற முடியும் என்பது எப்படி சாத்தியமாகும்?
எனக்கு தெரிய மற்ற வழக்குகளில் கூட இதை ஒரளவுக்கு நம்பலாம். ஏனெனில் மற்ற அனைத்து வழக்குகளுமே அவரவர் கைவசம் உள்ள ஆதார ஆவண சான்றுகளை வைத்து வழக்கை நடத்துவதாகும். இதில் சான்றுகளை கூட்டவோ குறைக்கவோ இயலும் என்பது முடியாத ஒன்று. அப்படியே செய்திருந்தாலும் எளிதாகக் கண்டு பிடித்து விடலாம். ஆனால் குற்ற வழக்கில் போலீஸ் என்ன சான்றுகளை உருவாக்கி தருகிறதோ அதை மட்டுமே முன் மாதிரியாக கொண்டு வழக்கை நடத்த வேண்டிய சூழ்நிலைதான் வழக்கறிஞர்களுக்கு பெரும்பாலும் உள்ளது.
இந்த நிலை முற்றிலும் மாற வேண்டும். ஏன் என்றால் சட்ட கோவிந்தன் என்பவருக்கு எதிரான பல வழக்கில் போலீஸ் தரப்பில் போடப்பட்ட சாட்சிகள் உண்மையா? என்பதை நேரடியாக புலனாய்வு செய்யும் பொருட்டு அந்தந்த இருப்பிட முகவரிகளுக்கே சென்ற போது, அந்த மாதிரி ஒரு முகவரியே இல்லை என தெரிய வந்தது.
இது போன்று வக்கீல்கள் யாராவது புலனாய்வு செய்து வழக்கை நடத்துகிறார்களா? என்றால் இல்லை. அவர்கள் போலீஸ் என்ன சட்ட விதியை மீறி நடந்து இருக்கிறார்கள்? சாட்சி என்ன உளறுகிறார்? என்பதன் மீது நம்பிக்கை வைத்துதான் வழக்கை நடத்துகின்றனர். இதோட முடிவு எப்படி இருக்கும்? போலீஸ் கொடுக்கிற ஆவணங்களின் அடிப்படையில் சாட்சிகளிடம் கேட்க வேண்டிய கேள்விகளை கேட்டு முடித்து விட்டு, இந்த வழக்குல நீங்க பொய் சாட்சி சொல்றீங்க அப்படீன்னு வக்கீல் குறுக்கு
விசாரணையை முடிப்பார். பொய் சாட்சி இதை ஒப்பு கொள்வாரா? இல்லை அப்படீன்னு முடிப்பார். இதுல என்ன தீர்வு வந்துடுச்சி? ஒண்ணும் இல்ல!
வக்கீல் என்ன செய்யணும். சாட்சியோட முகவரிக்கு ஒரு கடிதத்தை எழுதிப் போடனும். அந்த முகவரியே தப்பு அப்படீன்னு அந்த கடிதம் திரும்பி வரும் போது அது இந்திய அரசின் ஆவணச் சான்றாகி விடுகிறது. இதை ஆதாரமாக வைத்து, சாட்சி சொல்ல வந்துள்ள சாட்சி சொல்றது மட்டும் பொய் இல்ல. சாட்சியே பொய் அப்படீன்னு முதல் குறுக்கு கேள்வியிலேயே ஒரே போடா போட்டு ஆரம்பத்திலேயே சாட்சிய முறியடிச்சிற வேண்டியது தானே? செய்ய மாட்டாங்க. ஏன்னா அது அவங்களோட தொழில் தர்மம்.

🔊 Listen to this உங்க பிரச்சனை யாருக்கு தெரியும்? நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்! என்ற இந்த நூல் தலைப்பில் அசைக்கவோ, மறுக்கவோ, மாற்று கருத்து எதுவும் எழவோ இயலாத ஒரு தத்துவம் அடங்கி இருக்கிறது. அது உங்க பிரச்சினைய உங்களை தவிர வேறு யாராலும் கரெக்டா சொல்ல முடியாது அப்படீங்கிறதுதான் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை. எனவே ஒரு குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு மட்டும் அல்ல. உங்கள் பிரச்சினைக்காக…