காவல் நிலையத்தில் புகார் வழங்கி காவல் துறையினர் 7 தினங்களாக FIR பதிவு செய்யாமல் எதிரியிடம் புகார் மனு பெற்று கொண்டு கவுண்டர் கேஸ் போட போவதாக மிரட்டி வந்தால் கீழ் காணும் மேல் முறையீட்டு மனு மாடல் போல தங்களின் பிரச்சினைக்கு ஏற்ப மனு தயாரித்து கவுண்டர் பொய் வழக்கில் இருந்து உங்களை தற்காத்து கொள்ளலாம்
ஒப்புதலுடன் பதிவஞ்சல்
மனுதார்:
…………………
வயது-…..,
த/பெ……….
…………..தெரு,
………………
…………….. தாலுகா,
…………….. மாவட்டம்.
Cell Phone No.
பெறுநர்:
திரு. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்,
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம்,
……………. (இ)
……………. மாவட்டம்.
எதிர்மனுதார்:
1) திரு. காவல் ஆய்வாளர் அவர்கள்,
சீர்மிகு காவல் நிலையம்,
………………,
…………… தாலுகா,
…………. மாவட்டம்.
2)……………..
த/பெ…………
(அவரது மகன்)
3)…………….
த/பெ……………,
………………….. தெரு,
…………………….. தாலுகா,
…………………… மாவட்டம்.
Cell Phone No.
மதிப்பு மிகுந்த ஐயா,
பொருள்:
கு. வி. மு. ச.1973 இன் 154(3) வது பிரிவுப்படி மேல் முறையீட்டு மனு.
1) மனுதாராகிய நான்……………மாவட்டம்,…………தாலுகா,
………………,……….தெரு, கதவு எண்……… என்ற முகவரியில் குடியிருந்து வரும்…………..மகனாகிய…………. வயது…….. ஆகிய நான் மேற்காணும் 1,2 ஆகிய எதிர்மனுதாரர்களால்……………… அருகில் கடந்த……………. ஆம் தேதி சுமாராக காலை/ மதியம்/ மாலை/ இரவு ……… மணியளவில் மிகக் கடுமையாக தாக்கப்பட்டு பலத்த காயங்களுடன்……………….அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு அதன் பின்னர்…………….அரசு மருத்துவமனையில்………… ஆம் தேதி காலை/ மதியம்/மாலை /இரவு சுமார்………… மணியளவில் உள் நோயாளியாக அனுமதிக்கப் பட்டு இன்றுவரையில் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறேன்.
2)………………..அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில்……….. காவல் நிலையத்தின் காவலர்கள் வந்து மருத்துவ சிகிச்சையில் இருந்த என்னிடம் நடைபெற்ற சம்பவம் குறித்து புகார் மனுவினை காவலரே எழுதி என்னிடம் கையொப்பம் பெற்று சென்றுள்ளார்கள். ஆனால் நாளது தேதி வரை எனது புகார் மனு மீது (FIR) குற்ற முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யாமல் இருந்து வருகின்றனர். இதுகுறித்து காவல் நிலையத்தில் எனது உறவினர்களை நேரில் சென்று கேட்கச் சொன்ன போது எதிர்மனுதாரர்களிடமும் புகார்மனு பெற்று கொண்டு ஒரே சம்பவத்திற்கு இரண்டு வழக்கு பதிவு செய்ய………… காவல் நிலையத்தினர் முயற்சி செய்து வருவதாக தெரிய வருகிறது. மேற்காணும் 2 மற்றும் 3 வது எதிர்மனுதாரர்கள் மனுதாரர் ஆகிய என்னை தாக்கியதற்கு சாட்சிகளும் – சான்றுகளும் ( நீதிமன்ற சாசனமாம் இந்திய சாட்சிய சட்டம் 1872 இன் 65-A பிரிவுபடி மின்னணு சான்று ஆவணம்) உள்ளது.
3) தமிழ்நாடு காவல் நிலை ஆணை எண் – 566 ல் போலீசார் செய்யும் விசாரணை நடுநிலையாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த பிரிவில் கூறப்பட்டுள்ளதை சுருக்கமாக கீழே குறிப்பிட்டு உள்ளேன்.
புலன் விசாரணை அதிகாரி ஒருவருக்கு சார்பாகவும், மற்றவருக்கு எதிராகவும் செயல்படக்கூடாது. உண்மையை கண்டுபிடிப்பது தான் விசாரணை அதிகாரியின் குறிக்கோளாகும். விசாரணையின் போது காவல் அதிகாரி நடுநிலையாக செயல்பட வேண்டும்.
ஒரே குற்றச் சம்பவம் தொடர்பாக கொடுக்கப்பட இரண்டு குற்றச்சாட்டுக்களை விசாரணை நடத்தும் போது காவல்துறை அதிகாரி கீழ்கண்ட இரண்டு நடைமுறைகளில் ஏதாவது ஒன்றை பின்பற்றி விசாரணை நடத்த வேண்டும். எதிரிகளில் யார் வலிய தாக்குபவர்களாக இருந்துள்ளார்களோ அவர்கள் மீது குற்றம் சாட்டுதல் அல்லது
அந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் பொய் என்று தெரிய வந்தால் இரண்டையும் நிராகரித்தல் குற்றச்சாட்டு அடிப்படையில் விசாரணை அதிகாரி ஆய்வு செய்கையில், நீதிமன்றத்தில் எதிர் குற்றச்சாட்டை சான்றுப் பொருளாக தாக்கல் செய்து, எதிர் தரப்பில் காயம்பட்டவர்களின் உடல்நிலை சான்றுகளையும் மெய்பிப்பது அவரது கடமையாகும். நீதிமன்றத்தின் முன்பு திட்டமான வழக்கு (Desinite Case) ஒன்றை முன்வைத்து அதனை ஏற்றுக் கொள்ளுமாறு விசாரணை அதிகாரி நீதிமன்றத்திடம் கோர வேண்டும். அத்தகைய வழக்குகளில் ஒரு புகாரை மட்டுமே ஏற்றுக் கொண்டு, அந்த புகாருக்கு ஆதரவான சாட்சிகளை மட்டும் விசாரித்து விட்டு, மறு தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள காயங்களுக்கு எந்த விதமான விளக்கத்தையும் அளிக்காமல் புலன் விசாரணை அதிகாரி இருக்கக்கூடாது. எதிரிடை வழக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து எதிர் தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள காயங்களை நிரூபிப்பதற்காக தேவையான மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பொதுவாக இதுபோன்ற வழக்குகளில் இரு தரப்பு குற்றச்சாட்டுகளும் உண்மையானதாக இருக்காது. எனவே நீதிமன்றம் உண்மையை கண்டறியும் விதமாக புலன் விசாரணை அதிகாரி இரு புகார்களையும், சம்மந்தப்பட்ட ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
விசாரணை அதிகாரி இரண்டு புகார் சம்பந்தப்பட்ட வழக்கில் முடிவு எடுக்க திணறினால் மாவட்ட அரசு வழக்கறிஞரின் கருத்துரையை பெற்று அதன்படி நடக்க வேண்டும் வழக்கு மற்றும் எதிரிடை வழக்கு ஆகிய இரண்டையும் ஒன்றாக விசாரித்தால்தான் உண்மையில் யார் தப்பு செய்தது என கண்டுபிடிக்க முடியும். புலன் விசாரணை அதிகாரி இரண்டு வழக்குகளிலும் புலன் விசாரணையை ஒரே சமயத்தில் மேற்கொள்ள வேண்டும். உச்சநீதிமன்றம் ” இராமகிருஷ்ணய்யா Vs மாநில அரசு (1954- MWN-CRL-9)” என்ற வழக்கில், வழக்கு மற்றும் எதிரிடை வழக்குகளில் காவல்துறையினர் எப்படி விசாரணை நடத்த வேண்டும் என்று வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் ” பிரசாத் Vs காவல் ஆய்வாளர், அவனியாபுரம் காவல் நிலையம் (CRL. O. P. NO – 13177/2016) என்ற வழக்கிலும் தீர்ப்பு கூறியுள்ளது. எனவே ஒரு குற்றச் சம்பவம் குறித்து இரண்டு புகார்கள் அளிக்கப்பட்டால் தமிழ்நாடு காவல் நிலை ஆணைகளை பின்பற்றி அந்தப் புகார்களை விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. CRL. OP. NO – 11649/2011 DT – 12.7.2017, Dr. M. S. கதிர்வேலு மற்றுமொருவர் Vs ஆய்வாளர், B1 வடக்கு காவல் நிலையம், சென்னை 2017-3-MLJ-CRL-762 ஆனால்………..காவல் நிலையம் எனது வழக்கை நடுநிலையாக விசாரணை செய்யாமலும், குற்றவாளிகளை இதுவரையில் கைது செய்து நடவடிக்கை எடுக்காமல்………. காவல் நிலையத்தினர் செயல் படுவதால் இவ்வழக்கின் எதிரிகள் இப்போது மிகவும் மிகவும் பகிரங்கமாக மிரட்டி வருகின்றனர். மேலும் எங்கள் உடமைக்கும், உயிருக்கும் அச்சுறுத்தல் தொடர்ந்து வருகிறது. பாதுகாப்பு தர வேண்டிய காவல் துறை குற்றவாளிகளின் குற்றச் செயல்களுக்கு ஆதரவாக சேர்ந்தமரம் காவல் நிலையம் இருப்பது நமது நாட்டின் இறையாண்மையை கேலிக்கு உள்ளாக்கியுள்ளது.
4) காவல் நிலை ஆணை எண்:658 இறுதி அறிக்கையானது படிவம் எண்:89ல் அதிகார வரம்புள்ள குற்றவியல் துறை நடுவர் அவர்களுக்கு, காவல் ஆய்வாளர் அவர்களால் அல்லது புலன் விசாரணை அதிகாரி அவர்களால் குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 173 ன் கீழ் அனுப்பப்பட வேண்டிய அறிக்கையாகும். படிவம் எண்:89 என்பது விசாரணை செய்கின்ற வழக்குகளை பொய்வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும், துப்பறிய முடியாத வழக்கு என்று கூறி அனுப்புவதற்கும் காவல்துறையினரால் பயன்படுத்தப்படுகின்ற படிவம் ஆகும். காவல் நிலை ஆணை எண்:659 வது பிரிவு
விசாரணை செய்கின்ற வழக்குகளை, அவைகள்
பொய்யாக இருந்தால் மட்டுமே, பொய் வழக்கு என்று அறிக்கை செய்ய வேண்டும். அந்த வழக்குகளை பொய்யென்று நம்புவதற்கு தகுந்த ஆதாரங்கள் விசாரணை அதிகாரிக்கு கிடைத்தால் ஒழிய, அந்த வழக்குகளை பொய் வழக்கு என்று சொல்லக்கூடாது.
பொய்வழக்காக பெரும்பாலும் இருக்கலாம் என்று விசாரணை அதிகாரி எண்ணுவதை ஏற்க முடியாது. பொய் வழக்கு என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றாலோ, குற்றத்தை நிரூபிக்க முடியவில்லை என்றாலோ விசாரணை அதிகாரியானவர், அந்த வழக்கை துப்பு துலக்க முடியாத வழக்கு என்று திருப்பி அனுப்பிவிட வேண்டும். என்று வகைப்படுத்தப் பட்டுள்ளது. மேலும்
கி.வீரமணி VS புதுச்சேரி யூனியன் பிரதேசம் சென்னை,உயர் நீதி மன்றம், வழக்கு எண் CRL. OPNo. 4915/2020 மற்றும் Cf. MPNo. 2810 ஆகிய வழக்குகளில் தீர்ப்பு தேதி : 28.08.2020 என்ற வழக்கின் தீர்ப்புரையில் காவல் நிலைய ஆணையின் 588-A பிரிவின்மீது கவனம் செலுத்துவது பொருத்தமானதாக இருக்கும் என்றும், இதையே ஹரியானா மாநிலம் எதிர் 1992 (Sup-1)SCC 335 என்ற உச்ச நீதிமன்ற வழக்கிலும் உறுதிப்படுத்தி உள்ளது.
5) பாபுபாய் V. குஜராத் மாநிலம் ((2010) 12 SCC 254 என்ற வழக்கில் கிரிமினல் வழக்குகளில் நியாயமான விசாரணையும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் அடிப்படை உரிமைதான் – என உச்சநீதிமன்றம், தீர்ப்பளித்துள்ளது. இந்நிலையில் எனது புகாரின் மீது……………… காவல் நிலையம், வழக்குப்பதிவு செய்து நடுநிலையான விசாரணை செய்யாதது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ள எனது அடிப்படை உரிமைக்கு எதிரானது என மனுதாராகிய என்னால் கருதப்படுகிறது.
6) ஒரு வலிமையான நீதிமன்ற தீர்ப்பை சட்டமாக மதிக்க வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 இன் 13 (3) கூறுகிறது. அதன் அடிப்படையில் மேற்காணும் வலிமையான நீதிமன்ற தீர்ப்புகள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 1950 இன் 14 வது பிரிவுப்படி எனது இந்த வழக்கிற்கும் பொருந்தும் என மனுதாரராகிய என்னால் கருதப்படுகிறது.
7) ஆகையால் மேற்காணும்……….மாவட்டம்,…………வட்டம்,……………காவல் நிலையத்தில் மனுதாரர் ஆகிய நான் வழங்கிய புகார் மனு மீது மூத்த குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் -2007 இன் விதிகளுக்கு இணங்க உரிய சட்டபூர்வமான நடவடிக்கையும், மேற்காணும் எதிரும் மனுதாரர்களிடமிருந்து பாதுகாப்பும்,…….. காவல் நிலையத்தினரின் நேர்மையான புலன் விசாரணை செய்வதற்கு உத்தரவிட வேணுமாய் மிகவும் பணிவோடு பிரார்த்திக்கப்படுகிறது.
மனுதார்
தேதி:
இடம்:
இதையே பிரமாணமாக இதில்…………………… தேதியன்று என்னால் கையொப்பம் செய்யப்படுகிறது.
தன் வழக்கில் தானே முன்நிலைப்படுபவர்
நகல்.
கு. வி. மு. ச. 1973 இன் 190(அ) பிரிவுப்படி உரிய நீதி நடவடிக்கைக்காக
மாண்பமை குற்றவியல் நடுவர் அவர்கள்,
குற்றவியல் நடுவர் நீதிமன்றம்,
…………
….. மாவட்டம்.