நான் உங்கள் செல்வம் பழனிசாமி
ஒரு அரசாங்க நிர்வாகம் நல்லா இருக்கணும்னா,
அந்த நாட்டு நிர்வாகத்தை பல துறைகளாக பிரிக்கணும்.
அந்த துறைகளில் உள்ள ஊழியர்கள் ஒழுங்கா வேலை செய்யணும். அவங்க ஒழுங்கா வேலை செய்றாங்களாங்கிறத உயர் அதிகாரிகள் கண்காணிக்கணும்.
ஒழுங்கா வேலை செய்யாதவர்களை கண்டிக்கணும். தேவைப்பட்டால் தண்டிக்கணும்.
அப்பத்தான் அந்த அதிகாரிகளுக்கு பயம் இருக்கும்.
அந்த நாட்டு நிர்வாகமும் நல்லா இருக்கும்.
மக்களும் சந்தோசமா இருப்பாங்க.
நம்ம தமிழ்நாட்டிலயும் அரசு நிர்வாகத்தை பல துறைகளாக பிரிச்சிருக்காங்க.
அரசு ஊழியர்களுடைய வேலை என்ன? அவங்க என்னென்ன வேலை செய்யணும்? அதை அவங்க எப்படி செய்யணும்?
அத அவங்க ஒழுங்கா செய்யலைன்னா அவங்க மேல என்ன நடவடிக்கை எடுக்கணும்? என்கிற விதிகளை ஏற்படுத்தி அதை செயல்படுத்துவதற்கு என்று ஒரு துறையையும் நம்ம தமிழ்நாட்டில ஏற்படுத்தி வச்சிருக்காங்க.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின்னு அதுக்கு பேரு. பொதுமக்கள் அரசுத் துறையில் புகார் கொடுத்தாள் அந்த புகார அரசு அதிகாரிங்க எப்படி கையாளனும் என்னென்ன நடவடிக்கை எடுக்கணுங்கறத பத்தி, இந்த துறையில் இருந்து தான் அரசாணைகள் மூலமாகவும் கடிதங்கள் மூலமாகவும் அரசு ஊழியர்களுக்கு சொல்லிக்கிட்டு இருக்காங்க.
ஆனா அதை கொஞ்சம் கூட கண்டுக்காம அரசு அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக இருந்து கொண்டு வராங்க.
அப்படி இருந்தாலும் அந்த அதிகாரிங்க மேல நடவடிக்கை ஏதும் இந்த துறையில் இருந்து எடுக்காமல் இருக்கிறதால, பொதுமக்கள் பல பேரு அரசு அதிகாரிகள் மேல வழக்கு தொடுக்க, தொடர்ந்து கோர்ட்டுக்கு போயிட்டு தான் இருக்காங்க.
சமீபத்துல இந்த மாதிரி ஒரு பிரச்சனை சம்பந்தமான வழக்கு ஒன்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. அந்த வழக்குல நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமா இருந்த சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மேல, நடவடிக்கை எடுக்கச் சொல்லி உயர் நீதிமன்றம் அரசு செயலாளருக்கு உத்தரவு போட்டு இருக்கு.
அத பத்தி தான் நாம இந்த வீடியோவில் பார்க்க போறோம்.
பொதுமக்கள் அரசு அதிகாரிகள் கிட்ட புகார் கொடுத்தா, அந்த புகார அரசு அதிகாரிங்க எப்படி கையாளனும்? என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்று சொல்லி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறையில் இருந்து கடந்த2/8/2006ல் அரசாணை எண் 114 வெளியிட்டு இருந்தாங்க.
அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியமாக இருந்த காரணத்தால மறுபடியும் அதே அரசாணையை 12 9 2013 ல வெளியிட்டு இருந்தாங்க.
ஆனா அதையும் அரசு அதிகாரிங்க சட்டையே செய்யல இதுக்கு அப்புறமா கடந்த 2014 ஆவது வருஷம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ரிட் பெட்டிஷன் வழக்கு எண் 20257 வழங்கப்பட்ட தீர்ப்புல, பொதுமக்கள் கிட்ட இருந்து பெறக்கூடிய குறைகளை 30 நாளுக்குள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்த 30 நாளுக்குள்ள நடவடிக்கை எடுக்க முடியல என்றால் சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு அதை எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். என்று ஒரு உத்தரவு போட்டாங்க.
அதன் அடிப்படையில கடந்த 21/9/2015ல் அரசாணை எண் 99 தை, தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர்கள் வெளியிட்டாங்க.
ஒருவேளை மனு மேல நடவடிக்கை தேவை இல்லை என்று அந்த மனுவை அரசு ஊழியர் நிராகரிச்சா, அதையும் அந்த மனுதாரருக்கு தெரிவிக்கணும்னு அந்த அரசாங்கம் சொல்லியிருந்தாங்க.
அதுக்கு அப்புறமும் அதிகாரிகள் அலட்சியமா இருந்ததால மறுபடியும் 21/2/2021-ல் ஒரு அரசாணையை அரசாங்கத்தில் இருந்து வெளியிட்டாங்க.
ஆனா இன்னும் அரசு அதிகாரிங்க அலட்சியமாகத் தான் இருக்காங்க.
காரணம் அவங்க மேல அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்கறதே இல்லை.
இதுக்கு உதாரணமா சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த ஒரு வழக்கு பற்றி பார்க்கலாம்.
நம்ம தமிழக அரசுடைய போக்குவரத்து துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஒரு அரசு அதிகாரி உடைய பெயர் வி மோகன்ராஜ்.
இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி.
இவர் சினிமாவுக்கு பைனான்ஸ் செஞ்சிட்டு இருந்த முகுந்த் போத்ரா கிட்ட கடந்த 2016 ஆவது வருஷத்துல 10 லட்ச ரூபாய் கடன் வாங்கி இருக்காரு.
கடனை திருப்பிக் கொடுப்பதற்காக அவர் கொடுத்த செக்கு அக்கவுண்ட்ல பணம் இல்லாததால, திரும்பி வந்துடுச்சு.
இதனால் அவர் மேல நடவடிக்கை எடுக்கணும்னு கடன் கொடுத்த முகுந் சந்து போத்ரா அரசுத்துறை உயர் அதிகாரிகள் கிட்ட புகார் செஞ்சம் எந்த பிரயோஜனமும் இல்லை.
அதனால அவரு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்.
வழக்கு போட்ட பிறகு அவர் இறந்ததால் அந்த வழக்கை அவருடைய மகன் ககன்போத்ரா நடத்திட்டு வந்திருக்காரு இந்த வழக்கு சமீபத்தில் கனம் நீதிபதி எஸ் சுப்பிரமணியம் அவர்கள் முன்னிலையில் விசாரணை வந்திருக்கு.
ஐஏஎஸ் அதிகாரி மோகன்ராஜ் இந்த மாதிரி பல பெயர்கள் கிட்ட கடன் வாங்கி மோசடி செஞ்சி இருக்கிறார்.
அவர் மேல புகார் கொடுத்தாலும் உயர் அதிகாரிங்க எந்த நடவடிக்கை எடுக்கல. அப்படி எடுத்து இருந்தா அவரால பணியில் இருந்து ஓய்வு அடைந்து இருக்க முடியாதுன்னு மனுதாரர் தரப்புல குற்றம் சுமந்தனாங்க.
அப்படி எல்லாம் இல்ல தலைமைச் செயலாளர்கள் உத்தரவின்படி மனுதாரர் கொடுத்த புகாரின் மேல சென்னை குற்றப்பிரிவு காவல் துறையிலிருந்து விசாரணை செஞ்சு, அந்த மோகன்ராஜ் மேல மோசடி வழக்கு பதிவு செஞ்சிருக்காங்கன்னு சொல்லி அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதாடியிருக்கிறார்.
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, நீதிபதி, பொது மக்களுடைய நலன் கருதி அதிகாரிகள் தங்களுடைய கடமைகளை சரிவர செய்யணும். உரிய ஆதாரங்களோடு கொடுக்கிற புகார்கள் மேல அரசு அதிகாரிங்க சீக்கிரமா நடவடிக்கை எடுக்கணும். இல்லைன்னா அரசாங்கத்தின் மேலயும் அரசு அதிகாரிகள் மேலயும் பொதுமக்களுக்கு இருக்கிற நம்பிக்கை இல்லாம போயிரும். பொதுமக்கள் கொடுக்கிற புகார்கள் மேல உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் காலாவது தாமதம் செய்கிறது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
பண மோசடியில் ஈடுபட்ட மோகன்ராஜ் மேல புகார் கொடுத்த காலகட்டத்திலேயே நடவடிக்கை எதுவும் எடுக்காம, அலட்சியமா இருந்த அதிகாரிகள் மேல அரசு தலைமைச் செயலாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு போட்டு இருக்காரு.
இந்த தீர்ப்ப டவுன்லோட் செய்வதற்கான லிங்க நான் டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்திருக்கேன்
பொதுமக்கள் கொடுக்கிற புகார்கள் மேல நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகளுக்கு வழிகாட்டி அரசாங்கத்தில் இருந்து வெளியிட்ட அரசாணைகளை டவுன்லோட் செய்வதற்கான லிங்கையும் டிஸ்கிரிப்ஷன்ல கொடுத்திருக்கேன்.
நீங்க அரசு துறைகளுக்கு அனுப்புற புகார் மனுக்கள் ஓட இந்த அரசாணைகள் உடைய நகலையும் உயர் நீதிமன்ற தீர்ப்போட நகலையும் இணைத்து அனுப்புங்க உங்க புகார் மேல அரசு அதிகாரிங்க சீக்கிரம் நடவடிக்கை எடுப்பாங்க.
Courtesy Selvam Pazhanichamy
அரசாணைகள் டவுன்லோடு செய்யும் லின்க் https://cms.tn.gov.in/sites/default/f… 16.03.2018 https://cms.tn.gov.in/sites/default/files/go/par_Lr_6112_2018.pdf
அரசாணைகள் டவுன்லோடு செய்யும் லின்க் https://cms.tn.gov.in/sites/default/f… 03.02.2021 https://cms.tn.gov.in/sites/default/files/go/par_Lr_2342_2021.pdf
உயர்நீதிமன்ற தீர்ப்பு டவுன்லோடு செய்யும் லின்க் 28.10.2022https://www.livelaw.in/pdf_upload/muk…