GENIUS Law Academy, Karaikal-609602

சட்ட சங்கதிகள் பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு அறிவிப்பு.

பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு அறிவிப்பு.

பொது தகவல் அலுவலருக்காக வாதாட அரசு வக்கீல் கிடையாது தமிழக அரசு

தமிழ்நாடு தகவல் ஆணையமானது தகவல் தர மறுக்கும் பொது தகவல் அலுவலருக்கு, அபராதமோ அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கைக்கோ ஆணையிட்டால், அந்த ஆணையை இரத்து செய்வதற்காக பொது தகவல் அலுவலர் உயர்நீதிமன்றத்தில் நீதிப்பேராணை தாக்கல் செய்வது வழக்கம்.

அவ்வாறான சூழ்நிலையில், இதுநாள்வரை பொது தகவல் அலுவலர் தனக்கு வாதாடுவதற்காக, அரசு வழக்கறிஞரையே நியமித்து கொள்வது வழக்கமாக இருந்தது.

இதனால் பொது தகவல் அலுவலருக்கு எந்தவித செலவினமும் ஏற்பட்டதில்லை.

தமிழக அரசானது Letter (Ms) No.16152/AR.3/2017-1 dated 16.06.2017 of Personal Administrative Reform (AR-III), Secretariat, Chennai-600 009-ன் படி, இனிமேல் பொது தகவல் அலுவலருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் தண்டணை விதித்தால் (பணத்தண்டம் அல்லது நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக), பொது தகவல் அலுவலரானவர், தமிழக அரசு வழக்கறிஞரை தனக்காக வாதிட ஏற்பாடு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு தகவல் ஆணையமயானது பொது தகவல் அலுவலருக்கு எதிராக தண்டணைகளுக்கான (பணத்தண்டம் மற்றும் நிர்வாக ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதது) ஆணைகளை பிறப்பித்தால், பொது தகவல் அலுவலர் அதை தனது சொந்த செலவிலேயே, தன் சார்பாக வாதிட வழக்கறிஞரை நியமித்து கொள்ள வேண்டும்.

ஆகவே, பொது தகவல் அலுவலர் முறையாக தகவல்களை மனுதாரருக்கு வழங்குவது என்பது தற்போது மிக அவசியமாகின்றது.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறைவாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை

Views: 20 “வாடகை வீடுகளில் வசிப்பவர்களிடம், விதிமுறைகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்தால், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும், மூன்று மாத சிறை தண்டனை”. Overcharging of electricity tariff by landlords from tenants is a punishable offence.

Lok Adalat | THE LEGAL SERVICES AUTHORITIES ACT, 1987 Hand-book | லோக் அதாலத் சட்டம் 1987 கையேடு.(Pdf in English)Lok Adalat | THE LEGAL SERVICES AUTHORITIES ACT, 1987 Hand-book | லோக் அதாலத் சட்டம் 1987 கையேடு.(Pdf in English)

Views: 25 குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Fish sales for fish farming | பண்ணை குட்டையாளர்கள் கவனத்திற்கு. விரால் மீன், மற்ற மீன் குஞ்சுகள் விற்பனைக்கு.Fish sales for fish farming | பண்ணை குட்டையாளர்கள் கவனத்திற்கு. விரால் மீன், மற்ற மீன் குஞ்சுகள் விற்பனைக்கு.

Views: 7 எங்களிடம் வருடம் முழுவதும் நாட்டு விரால் மீன் குஞ்சுகள் கிடைக்கும் விலை 2 ரூபாய் முதல் தமிழகம் முழுவதும் உங்கள் இடத்திற்கே கொண்டு வந்து டெலிவரி செய்கிறோம்..Cell:9600210791 மேலும் ஏரியில் வளர்க்கப்பட்ட கெண்டை, ஜிலேபி மீன்கள் விரால் மொத்தமாக