31. நியாயமில்லாத சட்டம் எதுவும் செல்லாது. சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
அடிப்படை உரிமை அதிகாரத்தைப் பயன்படுத்தி, அரசு “நியாயமான” சட்டங்களைத்தான் இயற்ற வேண்டும் என்றாலும், பெரும்பாலும் “நியாயமில்லாத வகையில்தான்” சட்டங்களை இயற்றி வருகிறது.
இது தவிர, நம்நாடு குடியரசு ஆவதற்கு முந்தைய காலத்தில் இருந்தே, நாட்டில் பல சட்டங்கள் அமலில் இருந்து வருகின்றன. அப்படி அமலில் இருந்து வரும் சட்டங்களும், நியாயமானதாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், அதற்காக நாம் கவலைப்பட வேண்டியதில்லை.
ஏனெனில், “இந்திய அரசமைப்பு, அமலுக்கு வந்த பின் இயற்றப்படும் சட்டங்கள், நியாயமானதாக இல்லாவிட்டால், செல்லாது என கோட்பாடு 13/1-ம், இந்திய அரசமைப்பு அமலுக்கு வருவதற்கு முன்பு, நாட்டில் அமலில் இருந்து வரும் சட்டங்கள் நியாயமானதாக இல்லாவிட்டால், செல்லாது எனக்கோட்பாடு 13/2-ம் அறிவுறுத்துகின்றன”.
இதன்படி, பல சட்டங்கள் நியாயமான சட்டங்கள் இல்லை, என்ற காரணத்தால் நீக்கப்பட்டுள்ளன. இது குறித்த விபரத்தை தொடர்புள்ள இடத்தில் பார்ப்போம்.