30. சுதந்திரத்தின் சூத்திரம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
சுதந்திரம் என்பது ஒரு நாட்டிற்கும், அந்நாட்டு மக்களுக்கும் கிடைத்த தனிப்பட்ட ஆனால், மாபெரும் அங்கீகாரம் ஆகும். இப்படிப்பட “சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு இருக்க வேண்டிய ஒரே தகுதி, சுதந்திரத்தை கொண்டாடுபவர்கள் சுதந்திரமான முறையில் இருந்து கொண்டாதுவதுதான்”.
ஆனால், “இன்று சுதந்திரத்தை கொண்டாடும் தலைவர்கள், குண்டு துளைக்காத கார், மற்றும் கண்ணாடிப் பெட்டக பாதுகாப்பு, சுதந்திர கொண்டாட்டத்தை சுற்றி வானவூர்திகள், பாதுகாப்பு, அந்தப்படை இந்தப்படை, என ஆயிரக்கணக்கான படைப்பாதுகாப்பு வீரர்களுக்கு மத்தியில் கொண்டாடுகிறார்கள். நீதிபதிகளுக்கும் ஒன்றும் குறைச்சல் இல்லை.
மொத்தத்தில் சுதந்திரத்தை கொண்டாடுபவர்களிடம், சுதந்திரம் இல்லை. மாறாக சுதந்திர கொண்டாடாத குடி மக்களிடமே, உண்மையான சுதந்திரம் இருக்கிறது.
“சுதந்திர நாடு” என்றால். நாடு ஒவ்வொரு நாளும், சுதந்திரத்தில் இருப்பதுதானே! பின் எதற்காக ஒருநாளை மட்டும் சுதந்திர தினமாக கொண்டாட வேண்டும்?
சுதந்திரத்திற்கு ஆங்கிலத்தில், “இன்டிபெண்டன்ட், ஃபீரிடம்” என்று இரண்டு பொருள் உண்டு.
‘இன்டிபெண்டன்ட்’ என்றால், “யாரையும் சார்ந்திராமல், யாருடைய பாதுகாப்பிலும் இல்லாமல், சுயமாக தன்னை மட்டுமே நம்பி இருப்பதாகும்”.
‘ஃபீரிடம்’ என்றால், “எவ்வளவுக்கு எவ்வளவு சுதந்திரமாக இருக்க முடியுமோ, அவ்வனவுக்கு அவ்வளவு மிகவும் சுதந்திராக இருக்கும், அதே சமயம் உங்களின் ஒட்டுமொத்த சுதந்திரம், அடுத்தவரின் சுதந்திரத்தை, பறித்து விடாமல் பார்த்துக் கொள்வதும் ஆகும்”.
ஆனால், சுதந்திரத்தை கொண்டாடுபவர்கள் யாரும் இதை கடைப்பிடிப்பதில்லை. காரணம் உண்மை இல்லை. ஆம்! ”உண்மையே பாதுகாப்பு”.
உண்மை இல்லாததால், “அதிகாரம் என்ற பெயரில், தாங்கள் ஏற்படுத்திய சட்டத்தையே உதாசினப்படுத்தி, குடிமக்களின் குடியுரிமைகளை தினம் தினம் பறித்துக் கொண்டிருப்பதுடன், சுதந்திரத் தினக் கொண்டாட்டம், மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில், குடிமக்கனின் குடியுரிமைகளை பறிக்க, நாடு சுதந்திரம் பெற்ற நல்ல நாளில், ஒரு விழா தேவைதானா?” என்பதை இனி வரும் காலங்களில், சுதந்திரத்தை கொண்டாட விரும்புவோர், சிந்தித்து, அதற்கேற்ற வகையில் கொண்டாட வேண்டும்.’
இதுவே அவர்கள் மக்களாட்சிக்கு செய்யும் முதல் கடமையும், சுதந்திரத்தின் சூத்திரமும் ஆகும்.