29. குற்றத்துக்கான இலக்கணம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.
உங்களின் சுதந்திரம் எது வரை என்பதை, நீங்கள் ஒவ்வொருவரும் நன்றாகவே புரிந்து கொள்ள வேண்டும். “உங்கனின் சுதந்திரம் எக்காரணம் கொண்டும் அடுத்தவரின் உரிமையைப் பறிக்க கூடாது. அப்படி பறித்து விட்டால், அது குற்றமாக மாறி விடும். இதுதான் குற்றத்துக்கான இலக்கணம்”. அடுத்தவருக்கு தொல்லை இல்லை என்றால், நீங்கள் உங்கள் வீட்டில் புலியைக் கூட வளர்க்கலாம். இது உங்களின் உரிமை. தொல்லை என்றால் பூனை வளர்ப்பது கூடக் குற்றம்.
இவைகள்தான் சுதந்திரத்துக்கான இலக்கணமும், குற்றத் துக்கான இலக்கணமும். எனவே, அடுத்தவரின் உரிமையை பறிக்காமல் தடுப்பதற்காக அரசால் இயற்றப்படுவதுதான் சட்டம்.
எது எப்படி இருப்பினும், “நாட்டில் நடக்கும் அத்தனை விசயங்களும் நல்ல விசயங்களாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படுவதுதான் சட்டம்”.