துரதிருஷ்டத்தைத் தூரத் தூக்கி எறிவதெப்படி?
நாட்டில் யார் என்னசெய்கிறார்கள் என்பதை பார்த்து, அவர்கள் செய்யும் காரியத்தைக் குற்றம் சொல்லுபவர்கள் தான் அதிகம். ஆனால் நாம் அப்படி இருக்கக்கூடாது என்று உறுதி பூண்டேன், ஒன்றைக் குற்றம் சொல்கிறோம் என்றால், அதற்குத் தீர்வு சொல்லும் தகுதி நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அப்போது மட்டும்தான் நமக்கு குற்றம் கண்டுபிடித்து சொல்லும் யோக்கியதையே. இது நமக்கு மட்டுமல்ல எவருக்குமே உண்டு என்பதால் “குற்றம் சொல்லுங்கள்; அத்துடன் அதைத் திருத்தும் வழியைச் சொல்லுங்கள்” என்று எதார்த்தமாக ஒரு புதுமொழியை அறிமுகம் செய்கிறேன்.
இந்திய அரசு, சட்டக்கல்வியை கட்டாய அடிப்படை கல்வியாக கொண்டு வாராதது மிகப்பெரிய குற்றம் என்று சொல்லும் நாம், நமது புதுமொழியான “குற்றம் சொல்லுங்கள்; அதற்கு முன்பாக அதை திருத்தும் வழியை சொல்லுங்கள்” என்பதற்கு ஏற்ப, சட்டக்கல்வி குறைப்பாட்டை களைவதற்கு தேவையான வழிகளை சொல்ல வேண்டும் அல்லவா?
ஆம்! அதற்கான வழிகள்தான் நீதியைத்தேடி, நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! என்ற தலைப்பிலான நூல் வரிசைகள்.
நமது இந்நூல் வரிசைகளின் கருத்து சரியானது என்பதால்தான், நமது இந்நூல் வரிசைக்கு 2006 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு வரை மத்திய சட்ட அமைச்சகம் தொடர்ந்து, ஆண்டுக்காண்டு அதிகப்படுத்தியும் நிதியுதவியை வழங்கி வருகிறது. எனவே கூடிய விரைவில் சட்டக்கல்வி அடிப்படைக் கல்வியாகக் கட்டாயம் அரசு கொண்டு வரும் என நம்பலாம்.