26. சுதந்திர அடிப்படை உரிமையும், அடிப்படை உரிமையும்.
இந்த இடத்தில், ஏழு சுதந்திர உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவா? அப்படியென்றால், அடிப்படை உரிமை அல்லாது சுதந்திர அடிப்படை உரிமை, என்ற ஒன்று இருக்கிறதா? என்று எண்ணத் தோன்றலாம்.
நம் நாட்டைப் பொருத்தவரை, நமக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள், எத்தனை என்று யாரும் கணக்கிட்டு சொல்லவில்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்றாலும், முக்கிய காரணம், அடிப்படை உரிமை என்றால் என்ன? என்று பகுத்து அறியும் தன்மையை நம்மில் பலரும் உபயோகிக்காததுதான்.
இந்திய அரசமைப்பிலோ, அல்லது வேறு எந்த சட்டத்திலும் கூட இதுபற்றி சொல்லப்படவில்லை. இது எனது சிந்தனையில் எழுந்த ஒன்று.
ஆம்! அடிப்படை உரிமைகளை அறிவுறுத்தி, வலியுறுத்தும் இந்திய அரசமைப்புக் கோட்பாடு, 12 முதல் 35 வரையிலான 23 கோட்பாடுகள் எல்லாமே, அடிப்படை உரிமைகள்தான். அப்படி என்றால், குறைந்தது ஒரு கோட்பாட்டிற்கு ஒரு உரிமை, என்று கணக்கில் எடுத்துக் கொண்டால் கூட, மொத்தம் 23 அடிப்படை உரிமைகள் வரவேண்டும்.
அடிப்படை உரிமை என்றால் என்ன என்று, ”நீங்களும் வக்கீல்தான்!’ என்ற தலைப்பில், குற்ற விசாரணைகள் நூலில் விளக்கி யுள்ளேன். அதில் மேற்படி சொன்ன ஏழு உரிமைகளுக்கும் விளக்கம் சொல்லி உள்ளேன்.
அடிப்படை உரிமை என்பது, “யாரையும் கேட்காமல் நாமே செய்து கொள்வது, எடுத்துக் கொள்வதாகும்”, உதாரணமாக இக்களஞ்சியத்தை படிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள். தாராளமாக படிக்கலாம். இவைகளை செய்வதற்கு முன்பாக யாரிடமாவது அனுமதி வாங்குகிறீர்களா? இல்லைதானே! இதுதான் அடிப்படை உரிமை என்பது.
மொத்தத்தில் அடிப்படை உரிமையை, நாம் யாரிடம் இருந்தும் பிச்சை கேட்டுப் பெறவேண்டியது இல்லை. நமக்கு நாமே எடுத்துக் கொள்ள வேண்டியது என்பதால், இதை அடிப்படை உரிமை என்று சொல்வதை விட “சுதந்திர அடிப்படை உரிமை” என்று சொல்வதுதான் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
ஆனால், ஏழு உரிமைகள் என்று சொல்வது எதன் அடிப்படையில்? இந்த ஏழு உரிமைகளில், “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற முக்கிய உரிமை. உட்பட வேறு உரிமைகள் எதுவும் சொல்லப்படவில்லை. அதற்கான காரணம் என்னவென்று, பல்வேறு கோணங்களில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்தேன். ஆராய்ச்சியின் முடிவு இதோ!
”அடிப்படை உரிமைகளை தளக்குத்தானே எடுத்துக் கொள்ளும் உரிமை, மற்றும் பிறரிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் உரிமை, என இரண்டு பிரிவுகளாகப் பிரித்து இருக்க வேண்டும்”. ஏனெனில், நாம் மேலே பார்த்த ஏழு உரிமைகளும், யாரையும் கேட்காமல், தனக்குத்தானே எடுத்துக் கொள்வதால், சுதந்திர உரிமைகள் என்றும், இதற்கு பின்னர் பார்க்கப் போகும் உரிமைகள் எல்லாம், “மற்றவர்களிடம் இருந்து கேட்டு பெற்றுக் கொள்ள வேண்டிய, மற்றும் கேட்டால், அப்படி கேட்கும் கோரிக்கை சரியானதுதானா? என பரிசீலித்து மட்டுமே, கொடுக்கப்பட வேண்டிய கட்டாயச் சூழ்நிலை இருப்பதால், இவைகளை அடிப்படை உரிமைகள் என்றும் சொல்லலாமே ஒழிய, சுதந்திர உரிமை போல் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது”.
எடுத்துக்காட்டாக, நானும் நீங்களும், சட்டத்தின் முன் சமம் என்று சட்டம் சொல்கிறது. இது எது எதில் பொருந்தும்? “உரிமையை பெறுவதிலும் மற்றும் தண்டனை அடைவதிலும் மட்டுமே, சட்டம் சரி சமமாக பொருந்தும்”. திறமை, அறிவு உட்பட பல விசயங்களில் பொருந்தாது.
இக்களஞ்சியத்தை தனக்கு ஒன்று சொந்தமாக தேவை என நினைக்கிறீர்கள். எனவே, எங்களிடம் கேட்கிறீர்கள் என்றால், “நீங்களே விருப்பப்பட்டு படிப்பது சுதந்திர உரிமை’. ஆனால், “விருப்பப்பட்டு எங்களிடம் கேட்பது அடிப்படை உரிமையாகும்”.
மேற்படி வாக்கியத்தையே எடுத்துக் கொண்டோமானால், முதல் வாக்கியத்தில் “நீங்களே விருப்பப்பட்டு” என்பதன் மூலம், நீங்கள் முதலாவதாகவும், ஆனால், இரண்டாவது வாக்கியத்திலோ, “விருப்பப்பட்டு எங்களிடம்” என்பதன் மூலம், நீங்கள் விரும்பினாலும் கூட, எங்களை சார்ந்து இருக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உள்ளது.
ஏனெனில், நீங்கள் கேட்டதுமே நாங்கள் கொடுத்து விட முடியாது. காரணம் இதற்கான நிர்ணய தொகையை கொடுக்கும் நிலையில் அல்லது கொடுக்கத் தயாராக இருக்கிறிர்களா? என்பதை சரி பார்த்து தொகையை வாங்கிக் கொண்டுதானே கொடுப்போம்.
இதுபோல்தான் இன்றைய சூழலில் படிப்பு, அரசு வேலை.வாய்ப்பு, வழக்கு விசாரணைகள், கைது மற்றும் சிறையில்.அடைப்பு, நடவடிக்கைகள், தீண்டாமை ஒழிப்பு, இட ஒதுக்கீடு, போன்ற முக்கிய அம்சங்கள் உள்ளன.
இவைகளில் நாம் விருப்பப்பட்டதைச் செய்து விட முடியாது அடுத்தவர்களிடம் இருந்துதான், கேட்டுப் பேற வேண்டியிருக்கிறது? கேட்டும் தரவில்லை என்றால் நீதிமன்றத்தில் போராடி பெற வேண்டியுள்ளது.