27. அடிப்படை உரிமையில் நம்நாடும், அயல்நாடுகளும்.
மற்ற நாடுகளில் எல்லாம், அதிகபட்சமாக ஆறு, ஐந்து, நான்கு என்ற அளவில்தான் சுதந்திர உரிமைகள், அந்நாட்டு குடிமக்களுக்கே வழங்கப்படுகின்றன. சில நாடுகளுக்கு கூடுதலாக இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, வெளிநாட்டவர் ஒருவரை, நாம் இந்தியாவின் எந்த பகுதியிலும் பார்க்கலாம் ஆனால், ஒரு இந்தியர் வெளிநாடு செல்லும் போது பல நாடுகளில் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டும்தான், சுதந்திரமாக நடமாடும் உரிமை வழங்கப்படும்.
இந்த விசயம் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோருக்கும், சுற்றுலா பயணமாக செல்வோருக்கும், நன்றாகவே தெரிந்திருக்கும். பழக்க தோசத்தில் இந்தியாவைப் போன்று நடமாடி விட்டால், சில வேளைகளில் தண்டனைக்குரிய குற்றமாகக் கூட ஆகலாம்.
இந்த உரிமையை மீறி முறையான அனுமதியில்லாமல், மற்ற நிலப்பகுதிக்கு சென்று விட்டால், தாக்குதல், கைது, சிறையில் அடைப்பு, போன்றவைகள்தான். நீர்ப் பகுதிக்கு சென்று விட்டால் துப்பாக்கி சூடுதான்.
இது போன்ற சந்தர்ப்ப சூழ் நிலைகளில், அது குறித்த தகவல் அரசின் கவனத்திற்கு வந்தால் மட்டுமே, சம்பந்தப்பட்ட நாடுகளுக்கிடையில் பேச்சு வார்த்தை நடத்தி, பாதிக்கப்பட்டவர் உயிரோடு இருந்தால் விடுவிப்பார்கள்.