19. எல்லாம் சட்டபடி தான் நடக்கணும்!
நாம் ஒவ்வொருவரும் சட்டப்படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்று நான் சொன்னா நீங்க நம்ப மாட்டிங்க.ஆனால், இதுதான் உண்மை.
நீங்க சட்டப்படி வாழ்வதால்தான் வெளியில இருக்கீங்க. அப்படி இல்லைனா எங்க இருப்பிங்க. ஜெயில்ல தான்.
நீங்க சட்டப்படி வாழ்ந்தாலும் சட்டம் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கீங்க. இதுதான் உங்களுடைய பலவீனம். இதனால்தான் சட்டப்படி தனது கடமையை ஆற்ற வேண்டிய அதிகாரிகள், நீதிபதிகள், சட்டத்துக்குப் புறம்பாக உங்களின் பலவீனத்தின் மூலம், பல வகையிலும் பலன் அடைந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த வேறுபாடு முற்றிலும் களையப்பட வேண்டும். அதனால் நாம் கட்டாயம் சட்டத்தைத் தெரிந்து கொண்டுதான் ஆக வேண்டும்.
சட்டத்தைத் தெரிந்து கொண்டு சட்டப்படி வாழ்வதை விட, சட்டம் தெரியாமல் சட்டத்தை கடைப்பிடிக்காத வாழ்க்கை வாழ்ந்தால் என்ன? என்ற கேள்வியும் எழலாம்.
சட்டம் தெரிந்து வாழ்ந்தால் உங்களது உரிமை எதையும் தட்டிக் கேட்கலாம். சுதந்திரமாக நாடு முழுவதும் உலா வரலாம். ,“சட்டம் தெரியாமல் இருந்தால் உரிமையைக் கோர முடியாமல், அடிமைத்தனமாக கட்டுப்படுத்தப்பட்ட இடத்தில், கட்டுப்படுத்தப்பட்ட சுதந்திரத்துடன், சிறையில் வாழும் நிலையும் ஏற்படலாம்”.
இதில், உங்களுக்கு எது தேவை? என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
Court take decision after long time for small problems. Meanwhile the petitioner will lost his hope or may be die. Accuste will get full of benefits. What is the use? We have to change the rule for quick active decision. otherwise we are the looser. Our previous CM Jayalalitha get punishment after her death. Tje case was run for 18 years. Finally there is no use of punishment. Meanwhile she elected 3 times as CM and enjoyed royal life. Our tax money was looted by her team. What is the use of courts and law. This all give benefits to criminals.