18. கொள்ளை போன அரசின் கொள்கைகள்.
இந்திய அரசமைப்பின் பாகம் நான்கானது, அரசுக்கான கொள்கை விளக்கத்தை எடுத்து இயம்புவதாக இருக்கிறது. அதாவது, “அரசு மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ற வகையில், எப்படியெல்லாம் திட்டங்களைத் தீட்டி, தனக்குத்தானே சுயக்கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டும் என அறிவுரை செய்கிறது”.
ஆனால், அரசு இந்த அறிவுரைப்படி செயல்படாத போது, அது குறித்து யாரும் தனிப்பட்ட முறையிலோ, அல்லது நீதிமன்றத்தின் மூலமாகவோ, எந்த விதமான கேள்வியும் கேட்க முடியாது என கோட்பாடு 37 அறிவுறுத்துகிறது.
இந்த அறிவுறுத்தல் 1976-ஆம் ஆண்டு செய்யப்பட்ட 42 ஆவது, திருத்தத்தின்படி கொண்டு வரப்பட்டுள்ளது என்று தெரிகிறது. இருந்தாலும் கூட, திருத்தம் கொண்டு வரப்பட்டதற்கான எந்த தடையமும் இல்லை. அதாவது, “கோட்பாடு 37 இல் உட்பிரிவோ அல்லது கூடுதல் சேர்க்கையோ இல்லை என்பதால், இக்கோட்பாட்டை பொறுத்தமட்டில் பல மர்மங்கள் இருப்பதாகத்தான் தோன்றுகிறது”.
இப்படி, யாரும் கேள்வி கேட்க இயலாத கோட்பாடான 38 முதல் 50 வரையிலான கோட்பாடுகளில்தான், அனைத்து விதமான குடிமக்களின் தேவைகளும், பாதுகாப்பும் அடங்கி உள்ளன.
எனவே மக்களுக்கான உரிமைகள், அடிப்படை உரிமைகளாக தாராளமாக கிடைத்திருந்தாலும்கூட, அந்த உரிமைகளின் அடிப்படையில் தேவைகளை நிறைவேற்றுவது, அரசின் கொள்கையில் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கப் படுகிறது என்பதை, விரிவாகப் பின்னர் தேவையான சமயத்தில் இகளஞ்சியததில் பார்ப்போம்.