GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

3. சட்ட அறிவுக்களஞ்சியம் (Pay & Read) 3/51. சட்டங்களின் பெயர்கள் சரியா? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

3/51. சட்டங்களின் பெயர்கள் சரியா? சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

சட்ட-அறிவுக்களஞ்சியம்
ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

51. சட்டங்களின் பெயர்கள் சரியா?

பொதுவாக சட்டங்களுக்கு வைத்துள்ள பெயர்களே பொருத்தமானதாக இல்லை என்பதோடு, அதன் மூல நோக்கத்தை சிதைப்பதாகவும் உள்ளது என்பது எனது அறிவுக்கு எட்டிய கருத்தாகும். எனது கருத்தின்படி பொருத்தமான பெயர்களை இங்கு தேர்ந்தெடுத்து சூட்டி உள்ளேன்.

இதனை நீங்கள் பயன்படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும் ஒரு வேளை இப்படி பெயரை மாற்றி பயன்.படுத்தினால், நாம் என்ன சட்டத்தை குறிப்பிடுகிறோம் என்று தெரியாமல் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு என கருதுபவர்கள், புதிய பெயரை முன்மொழிந்து பின் பழைய பெயரை குறிப்பிட்டால் எந்த குழப்பமும் ஏற்பட வாய்ப்பு இல்லாததோடு புது பெயருக்கான அங்கீகாரமும் கிடைக்க கூடிய வாய்ப்பை ஏற்படுத்தலாம்.

எ.கா; இந்திய சாசனமாம் இந்திய அரசமைப்பு

1.இந்திய சாசனம் (இந்திய அரசமைப்பு – 1950)

இந்திய அரசு எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி மட்டும் சொல்லப்படாமல் நாட்டில், எது எதுக்காக அமைப்புகள் நிறுவப்பட வேண்டும், அந்த அமைப்புகள் எப்படி செயல்பட வேண்டும், அந்த அமைப்புகளில் நியமிக்கப் படுபவர்கள் எப்படி எல்லாம் கடமையாற்ற வேண்டும், குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள், கடமைகள் என்னென்ன என்பன போன்ற அனைத்து விதமான அறிவுறுத்தல் களையும் தந்திருப்பதால் அதற்கு இந்திய அரசமைப்பு என்பதை விட “இந்திய சாசனம்”என்பதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும்.

இதில் மொத்தம் 395 கோட்பாடுகள் உள்ளன.

இந்திய அரசமைப்பு என்பதை பலரும் இந்திய அரசியல் சாசனம் என்று அரசியலுக்கான சாசனம் போல தவறாது தவறாகவே மொழி பெயர்க்கின்றனர்.

2. நீதிமன்ற சாசனம் (இந்திய சாட்சிய சட்டம் 1872)

அரசு இயந்திரம் அல்லது அரசு சார்ந்த அதிகாரி தவறாக இயங்கும் போது, அதை நிவர்த்தி செய்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விதத்திலும், மக்கள் செய்யும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கவும், மக்களுக்குள் உள்ள பிரச்சனைகளை தீர்க்கவும் அமைக்கப்பட்டது தான் நீதிமன்றம்.

இந்த நீதிமன்றம், எப்படி எல்லாம் தனது உள்ளார்ந்த அதிகாரத்தை பயன்படுத்தி, தக்க நீதி வழங்க வேண்டும். இப்படி நீதி வழங்குவதற்கு அடிப்படையில் தேவையான ஆவண.சாட்சியம், நேரடி சாட்சியம், குறுக்கு விசாரணை, ஆகியன குறித்து விரிவான அறிவுரை வழங்குவதுதான் இந்திய சாட்சிய சட்டம்.

உள்ளூர் நீதிமன்றங்கள் முதல், உலக நீதிமன்றங்கள் வரை, அந்நீதிமன்றங்கள் இயங்கிடவும், சான்றுகளின் அடிப்படையில் முடிவெடுக்கவும், இச்சட்டமே மூலக்காரணம் என்பதால், இதற்கு “நீதிமன்ற சாசனம்” என்பதுதான் சாலப் பொருத்தமாக இருக்கும்.

உலகில் உள்ள அனைத்து நீதிமன்ற விசாரணைகளுக்கும், எல்லா நேரத்திலும், எந்த சூழ்நிலையிலும், பொருந்த கூடியது. ஆனால், அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளால் செய்யப்படும் விசாரணைகளுக்கு இந்த சாசனம் பொருந்தாது.

அதாவது, ஒரு நபரை சத்திய பிரமாணம் செய்வித்து, விசாரணை செய்யும் அதிகாரம் உள்ள அனைத்து மன்றத்திலும், இந்நீதிமன்ற சாசனம் பொருந்தும். அப்படி இல்லாத எந்த விசாரணைக்கும் பொருந்தாது.

உலகில் உள்ளவர்கள் அனைவருமே, பொதுவாக வாயால்தான் பேசுகிறார்கள், கையால்தான் எழுதுகிறார்கள். ஏதோ ஒரு ஆயுதத்தால்தான் தாக்குகிறார்கள். மொத்தத்தில், உலக அளவில் மொழிதான் வெவ்வேறே ஒழிய அதை செயல்படுத்தும் செய்கை ஒரே மாதிரி தன்மை உடையதுதான். எனவேதான் இச்சட்டம் உலக அளவில் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. இந்த ஒரு சட்டத்தை முழுமையாக தெரிந்து வைத்திருந்ததால் தான். “மகாத்மா காந்தியடிகள், இந்தியா மட்டுமல்லாது தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட வக்கீலாக கடமையாற்ற முடிந்துள்ளது”,

அதாவது இந்த சட்டம் தெரிந்திருந்தால் உலகில் எந்த நாட்டில் உங்கள் மீது பொய் வழக்கு போட்டாலும், அதிலிருந்து தற்காத்து கொள்ள முடியும். இதுதான்  இச்சட்டத்தின் மகிமை? இதில் மொத்தம் 167 உறுபுகள் உள்ளன.

3. இந்திய தண்டனை சட்டம் – 1860

சட்டப்படி எதை எதையெல்லாம் ஏன் செய்ய கூடாது?

சட்டப்படி எதை எதையெல்லாம் ஏன் செய்ய வேண்டும்?

சட்டப்படி செய்யக் கூடாததைச் செய்தால் அது எந்த விதத்தில் குற்றமாகும்?

சட்டப்படி செய்ய வேண்டியதை செய்யாமல் இருநதால் அது எந்த விதத்தில் குற்றமாகும்?

இவைகளுக்கு என்ன தண்டனை என்பதை விரிவாக விளக்குவது தான் “இந்திய தண்டனை சட்டம் -1860 ஆகும்”. இந்த சட்டத்தில் மொத்தம் 511 பிரிவுகள் உள்ளன.

இது போன்று, மேலும் பல குற்ற சட்டங்கள், மற்றும் சிறப்பு சட்டங்கள் இயற்றப்பட்டு உள்ளன. மணக்கொடைத் தடுப்பு சட்டம், ஊழல் தடுப்பு சட்டம், போன்றவைகளாகும்  

இது போன்ற சட்டங்கள் பெரும்பாலும், “சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற, சம நோக்கு இல்லாததாகவும், ஒருசாரார் செய்த குற்றச்செயலை நியாயப்படுத்தியும், மற்றொரு சாராரின் குற்றச்செயலை அநியாயப்படுத்தி குற்றம் கூறும் விதமாகவே இருக்கும் என்பதோடு, முழுக்க முழுக்க பொதுவான தண்டனை சட்டமான, இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் அறிவுறுத்தல்களுக்கு எதிரானதாகவே இருக்கும்”.

4. குற்ற விசாரணை முறை விதிகள் – 1973

(குற்ற விசாரணை முறை சட்டம்-1973)

ஒரு குற்றப்புகாரை, முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்வது, குற்ற சட்டத்தின் கீழ் ஒருவர் செய்தது சட்டப்படி குற்றமா? அல்லது இல்லையா? என்பதற்கான புலனாய்வை மேற்கொள்வது எப்படி, புலனாய்வு முடியும் வரை ஜாமீனில் விடுவதா? அல்லது சிறைப்படுத்துவதா? குற்றச்சாட்டின் பேரில் விசாரணையை மேற்கொள்வது எப்படி? விசாரணைக்கு ...

இந்த பகுதி பணம் செலுத்தி சட்டம் அறியும் பகுதியாகும். நீங்கள் login செய்து கணக்கினுள் நுழைந்து, ஒரு நாளுக்கு 1 ரூபாய் செலுத்தி தொடர்ந்து படிக்கலாம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/34. சட்டத்தின் மூலம் கிடைக்கும் சம உரிமையும், பாகுபாடும். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/34. சட்டத்தின் மூலம் கிடைக்கும் சம உரிமையும், பாகுபாடும். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 30 34. சட்டத்தின் மூலம் கிடைக்கும் சம உரிமையும், பாகுபாடும். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி. சட்டத்தின் மூலம் சம உரிமை எப்படி பாதுகாக்கப்

சட்ட-அறிவுக்களஞ்சியம்

3/19. எல்லாம் சட்டபடி தான் நடக்கணும்! சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/19. எல்லாம் சட்டபடி தான் நடக்கணும்! சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 69 19. எல்லாம் சட்டபடி தான் நடக்கணும்! நாம் ஒவ்வொருவரும் சட்டப்படிதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். என்று  நான் சொன்னா நீங்க நம்ப மாட்டிங்க.ஆனால்,

3/14. மநு தர்மம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.3/14. மநு தர்மம். சட்ட அறிவுக்களஞ்சியம். நீதியைத்தேடி.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 56 14. மநு தர்மம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் நாடு மன்னர் ஆட்சியில் இருந்த போது, மநுநீதி தர்மம் என்ற கோட்பாட்டின்

வாரண்ட் பாலா எழுதிய புத்தகங்களை 100 நாட்களுக்கு, ரூ:100 கட்டணம் செலுத்தி, படித்து நீங்களும் சட்ட வல்லுநர் ஆகலாம். விபரங்களுக்கு இந்த யூடுயூப் சேனலை பாருங்கள். (விரைவில்)