http://www.tniuscbe.org/download/go/go1090.pdf
https://acrobat.adobe.com/id/urn:aaid:sc:AP:26372dc8-23e6-42fc-8622-4abe5ee47728?sfnsn=wiwspwa
அரசுக்கு சொந்தமான இடத்தில் எந்த ஒரு ஆக்கிரமிப்பு செய்ய கூடாது மீறிய ஆக்கிரமிப்பு அகற்றம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அதன் வழிமுறைகள்
[07/06, 03:07] 23 Thesiya Satta Neethi Iyakkam / Muthuraj: அரசாணை எண் : 540-ன் கீழ் நீர்நிலை ஆக்கிரமிப்பு அகற்ற கோரும் மனு.
விடுநர் :
பெறுநர் :
உயர் திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.
.
பொருள் :
அரசுக்குச் சொந்தமான வருவாய்த்துறை அரசாணை எண் : 540 -ன் படி ஆக்கிரமிப்பை அகற்றி பொதுமக்கள் பயன் பெற செய்ய கோருதல்.
பார்வை :
அரசு நிலங்களை பாதுகாக்கவும் ஆக்கிரமிப்புகள் கண்டறிந்து அவற்றை அகற்றவும் கீழ்க்காணும் சட்டங்களின் வழிவகை செய்யப்பட்டுள்ளன.
1.தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905.
2.தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920 .
3.தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சட்டம் 1958.
4.தமிழ்நாடு பொது கட்டிடம் (அனுமதிக்கப்படாத ஆக்கிரமிப்பு) சட்டம் 1975.
5.தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டம் 1994.
6.தமிழ்நாடு நெடுஞ்சாலைகளில் சட்டம் 2001.
7.தமிழ்நாடு நீர் நிலைகள் பாதுகாத்தல் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் சட்டம் 2007.
8.அரசாணை (நிலை) எண் 41 வருவாய் துறை நாள்: 20.01.1987.
9.அரசாணை (நிலை) எண் 186 வருவாய் துறை நாள்: 29.04.2003.
10.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப்பேராணை என் 20186-2000 ல் வெளியிட்ட தீர்ப்பின்படியும்.
11.மாண்புமிகு உச்ச நீதிமன்ற சிறப்பு விடுப்பு மனு எண் 3109-2011 மற்றும் சிவில் மேல்முறையீட்டு எண் 1132-2011ஆகியவற்றின் மீது வழங்கப்பட்ட உத்தரவுகளின்படியும்.
12.மாண்புமிகு உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 26722-2013 மற்றும் பலவகை மனு எண் 1-2013 ன் மீது 11.08.2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்புரையின் படியும்.
13.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 26722-2013 ன் மீது 08.10.2014 ன் படி வழங்கப்பட்ட உத்தரவின்படி அரசாணை (நிலை) எண் 540 வருவாய் (நி.மு.6(2) ) துறை நாள் 04.12.2014 ன் படியும்.
14.மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதிப் பேராணை எண் 4614 -2015 இன் மீது 31.03.2015 அன்று வழங்கிய தீர்ப்புரையின்படியும்.
15.அரசாணை (நிலை) எண் 148 வருவாய் (நி.மு. 6(2) ) துறை நாள் 24.03.2016 ன் படியும்.
மதிப்புக்குரிய மாவட்ட ஆட்சியர்அவர்களுக்கு,
கிராமத்தில்* ஆயிரம் குடும்பங்களுக்கு மேல்வசித்து வருகிறார்கள், ஊருக்கு மேற்கு பகுதியில் சர்வே எண்:…… கண்ணச்செம்மல் மலையில் இருந்து வரும் தண்ணீர் *கண்ணசெம்பு குளத்து சர்வே எண் சென்றடைய விடாமல் …… *நீரோடை சர்வே எண் – ——-;;;;* முழுவதும் சமூக விரோதிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இது ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் அரசாணை எண் 540 -ன் படி மீட்டு தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
நீண்டகால நீர்நிலை என்பதால் ஏரி குளங்களை மற்றும் அரசு சொத்துக்களை ஆக்கிரமிக்க அரசு அனுமதிக்கக்கூடாது என 30.10.2015 அன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் திரு S.K. கவுல் நீதியரசர் திரு. சத்தியநாராணா நீதியரசர் திரு. சிவஞானம் ஆகியோர் அமர்வு உத்தரவில் W.P.NO 1294/2009ல் கூறியுள்ளதை தங்களுக்கு நினைவூட்டுகிறேன்.
இந்தநிலையில் தமிழக அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாக மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி பார்வை 5-ல் காணும் அரசாணையில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வட்டாட்சியருக்கு மனு செய்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மேலே குறிப்பிட்டுள்ள நீர்நிலைகள் மற்றும் அதன் நீர் வழி பாதைகளை உள்ள ஆக்கிரமிப்புகளை 1950ம் ஆண்டுக்கு முன் உள்ள வருவாய் பதிவேடு அளவுகளின்படி அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிடக் கோருகிறேன்.