GENIUS Law Academy, 46 Vallal Seethakathi Street, Karaikal-609602, Puducherry State, India

சட்ட சங்கதிகள் வீட்டை லீசுக்கு எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை.

வீட்டை லீசுக்கு எடுக்கும் முன் கவனிக்க வேண்டியவை.

ஒலி வடிவில் கேட்க >> (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்)

வாடகை வீடு நல்லது.

பெரு நகரங்களில் பெருகி வரும் வீடு லீஸ் மோசடிகள். பொது மக்கள் கவனமாக இல்லாவிட்டால் சம்பாதித்த பணத்தை இழக்க நேரிடும்.

சென்னை வடபழனியில் ஒரு Flat லீசுக்கு விடபடுகிறது. லீஸ் தொகை 14 லட்சம். சொத்தின் உரிமையாளரும் லீஸ்க்கு வருபவரும் Agreement போட்டு கொள்கிறார்கள்.

6 மாதம் சென்ற பின் வீட்டுக்கு ஒரு ஏல நோட்டீஸ் வருகிறது. இந்த வீட்டின் உரிமையாளர் வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை, அதனால் இந்த தேதியில் பகிரங்க ஏலம் மூலம் விற்க போவதாக வங்கி அறிவிப்பு செய்து நோட்டீஸ் கதவில் ஒட்டப்படுகிறது.

லீஸ் பார்ட்டி பதற்றமடைந்து Flat ஓனருக்கு Phone செய்கிறார் . அவரோ அதெல்லாம் ஒண்ணுமில்லை, நான் பணத்தை கட்டி விடுவேன் என்று சமாதானம் சொல்கிறார்.

இவரும் அமைதியாகி விடுகிறார். அந்த Flat ன் அதிகபட்ச மார்கெட் மதிப்பு ரூ.60 லட்சம்; வங்கியில் கடனோ வட்டியுடன் ரூ.70 லட்சம் மேல் இருக்கும். அந்த Flat ஓனர் தன்னால் கடனை கட்ட முடியாது என தெரிந்து , ஒருவரை ஏமாற்றும் நோக்கில் லீஸ்க்கு விட்டு பணம் வாங்கியுள்ளார்.

பின்ன என்ன நடந்ததென்று கேட்கிறீர்களா?

அந்த சொத்தை ஒருத்தர் ஏலத்தில் ரூ.48 லட்சத்துக்கு வாங்கினார் . வங்கி CMM கோர்ட்டில் EVICTION order (காலி செய்யும் உத்தரவு) வாங்கி போலீசை வைத்து சட்டி சாமான் எல்லாத்தையும் ரோட்டில் தூக்கி வைத்து வீட்டை சுத்தமாக காலி செய்து சீல் வைத்து விட்டனர். அவ்ளோதான் லீஸ் பார்ட்டி பணத்தை கொடுத்தவரிடம் பணம் வாங்கி கொள்ள வேண்டும்.(நம்பிக்கை மோசடி புகார் தரலாம்)

நாமதான் லீஸ் அக்ரிமெண்ட் போட்டிருக்கோமேன்னு நினைக்க வேண்டாம். வங்கியில் ஒரு சொத்தின் மீது கடன் வாங்கின பின் Lease அல்லது Rent Agreement செல்லாது என்று சர்பாசி சட்டம் 2002 சொல்கிறது.(வாடகை சட்டம் பொருந்தாது)

வங்கியில் சில பிராடு பேர்வழிகள் கடன் வாங்குறானுங்க (சில பில்டர்கள் 100% Loan வாங்கி தருவார்கள் அதில் 60% லீசுக்கு விட்டு விட்டு ஓடி போனவர்கள் தான் அதிகம்) திருப்பி கட்ட முடியாதுன்னு தெரிந்தவுடன் அல்லது சொத்து மூழ்கி போய் விட்டால் எதாவது ஒரு அப்பாவிடம் லட்சகணக்கில் பணம் வாங்கி கொண்டு ஓடி போய் விடுகின்றனர்.

அந்த அப்பாவி பொதுமக்கள் வங்கியுடனும், சட்டத்துடன் போராட முடியாமல் பணத்தை இழந்து மன வேதனைக்கு ஆளாகின்றனர். இதில் கொடுமை என்னவென்றால் ஒரே வீட்டை காட்டி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்பவர்கள் இருக்கிறார்கள்.

பொது மக்கள் என்ன செய்ய வேண்டும்?

  1. யாராவது லீஸ்க்கு வீடு தருவதாக சொன்னால் முதலில் அந்த வீடு வங்கியில் அடமானம் அல்லது Loan ல் உள்ளதா என கேட்க வேண்டும். வங்கியில் இருந்தால் அந்த சொத்தை தவிர்த்து விடுவது நல்லது.
  2. சொத்தின் மீது வங்கி கடன் இல்லாத பட்சத்தில் நீங்க கொடுக்கும் லீஸ் தொகையை அக்ரிமெண்ட் போட்டு சம்பந்தபட்ட Sub register office ல் Register செய்ய வேண்டும். அப்படி Register செய்தால் EC (வில்லங்க சான்று)ல் அந்த ஓனர் உங்களிடம் இத்தனை ரூபாய் வாங்கி கொண்டு வீட்டை லீசுக்கு விட்டுள்ளார் என தெரியும்.
  3. அதனால் நீங்கள் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யாமல் அந்த ஓனர் தன் சொத்தை விற்கவோ வங்கியில் அடமானமோ அல்லது தனியார் பைனான்ஸ் க்கோ வைக்க முடியாது.
  4. என் மீது நம்பிக்கை இல்லையா? எங்களை பார்த்தால் ஏமாற்றுகிற மாதிரியா தெரியுது? நாங்கெல்லாம் பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவங்க, நாங்கெல்லாம் கடவுள் பக்தியுடையவங்க ஏமாத்தினா அவர் எங்களை சும்மா விட மாட்டார். இப்படித்தான் ஏமாற்றுகிறவர்கள் பேசுவார்கள். வங்கி உங்களை கோர்ட் மூலமாக வெளியேற்றியபின் பணம் கேட்டாலும் இதையேதான் சொல்லுவார்கள்.
  5. வேணும்னா ஒரு டயலாக்கை சேர்த்துக்கோங்க”ஒரு இடத்தில் இருந்து பணம் வரணும்; வந்தவுடன் தந்து விடுவேன்”னு சொல்லுவாங்க.
  6. அக்ரிமெண்ட் எல்லாம் போட முடியாது விருப்பம் இருந்தா வாங்க இல்லைன்னா போன்னு சொல்றவனையும் ஒதுக்கி தள்ளி வைத்து விடலாம்.
  7. உங்க கிட்ட பணபலம் ஆள் பலம் இருந்தா பணத்தை வாங்கிடலாம். இல்லைன்னா பணம் , நிம்மதியை தொலைத்து விட்டு காவல் நிலையத்துக்கு அலைய வேண்டியது தான்.

பின் குறிப்பு

அப்புறம் அந்த வடபழனி வீட்டை காலி செய்ததே Chennai Asset recovery எங்க கம்பெனிதான்.
என்ன செய்வது வராக்கடனை வசூலிக்கா விட்டால் வங்கிகள் திவாலாகிவிடும் என்ற சமூக அக்கறையும் ஒரு காரணம்.

நன்றி
இரா.கார்த்திக்
பொதுச் செயலாளர்
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் மக்கள் உரிமை கழகம்.

குறிப்பு: இந்த தளத்தில் வழங்கப்படும், செய்திகள், ஆணைகள், தீர்ப்புகள், சட்டங்கள், வழக்கறிஞர்களின் விபரங்கள் யாவும், தங்களின் சுய பரிசோதனைக்கு உட்பட்டவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Post

ஆக்கிரமிப்பு நிலத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்குவது எப்படிஆக்கிரமிப்பு நிலத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா வாங்குவது எப்படி

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 இலவச வீட்டு மனை பட்டா வாங்குவது எப்படி? ஆக்கிரமிப்பு நிலத்திற்கு இலவச பட்டா வாங்குவது எப்படி? தமிழ்நாட்டில் எந்த அடிப்படையில், ஒரு

RTI documents | No need to pay more then Rs: 50 Supreme Court Order | ஆர்.டி.ஐ.யில் ஆவணங்கள் பெற ரூ: 50 மேல் செலுத்த தேவையில்லை. உச்ச நீதி மன்றம்.RTI documents | No need to pay more then Rs: 50 Supreme Court Order | ஆர்.டி.ஐ.யில் ஆவணங்கள் பெற ரூ: 50 மேல் செலுத்த தேவையில்லை. உச்ச நீதி மன்றம்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 7 RTI யில் ஆவணங்கள் பெற அதிகபட்சமாக ரூ.50/- க்கு மேல் செலுத்தத் தேவையில்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு. RTI விண்ணப்பங்களை தாக்கல் செய்ய

பாகபிரிவினை ! இந்து சட்டப்படி இஸ்லாம் சட்டப்படி கிறிஸ்தவ சட்டப்படி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.பாகபிரிவினை ! இந்து சட்டப்படி இஸ்லாம் சட்டப்படி கிறிஸ்தவ சட்டப்படி தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

ஒலி வடிவில் கேட்க >>🔊 Listen to this (ஆங்கிலம் தெரியாதவர்கள் மொழிமாற்று பொத்தானை பயன்படுத்தவும்) Views: 10 பாகபிரிவினை ! இந்து சட்டப்படி, இஸ்லாம் சட்டப்படி, கிறிஸ்தவ சட்டப்படி, தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள். பாகப் பிரிவினையின் போது, தெரிந்து

வாரண்ட் பாலா எழுதிய, சட்ட அறிவுக்களஞ்சியம், என்னும் நூல் Pdf வடிவில் வேண்டுவோர் 7667 303030 வாட்சப் எண்ணிற்கு தொடர்புக்கொள்ளவும்.