
1/34. காவலர்களின் வகைகள் மற்றும் அதிகாரங்கள்.
-
by admin.service-public.in
- 73
”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.
34. காவலர்களின் வகைகள் மற்றும் அதிகாரங்கள்.
சட்டத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு எப்படி சட்டங்கள் தெரிவது இல்லையோ, அதே போல் காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் கூட காவல் துறை பற்றி தெளிவாக தெரிவதில்லை. எனக்கு நீதித்துறையில் போராடி தெரிந்து கொண்ட உரிமை விசயங்களை விட காவல்துறையில் போராடிய அனுபவம் மிக மிக குறைவே.இருப்பினும் உங்களுக்கு தெரியப்படுத்தணும் அப்படீங்கிற ஆர்வத்தில் பல விசயங்களை நேரடி அனுபவம் இல்லாமல் படித்தவைகளை வைத்து இங்கு தெரிவித்திருக்கிறேன். இருந்தாலும் இவைகள் எந்த விதத்திலும் மாறுதலுக்கு உட்பட்டதல்ல.
பல வருடங்களாக இந்திய அளவில் காவல் துறை என்றாலே அதில் அதிக ஆண்களும், விரல் விட்டு எண்ண கூடிய அளவில் மட்டுமேதான் பெண்களும் பணியாற்றி வந்தனர்.
இந்த காரணத்தால் பல வருடங்களாக பெண்களுக்கு காவல் துறையை சேர்ந்த ஆண் காவலர்கள் விசாரணை என்ற பெயரில் நடத்தப்படும் கொடுமைகளுக்கும் குற்றங்களுக்கும் முடிவு கட்டி பெண்களுக்குத் தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தமிழகத்தில் மகளிர் காவல் நிலையங்கள் கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் முதல் அனைத்து மகளிர் காவல் நிலையம் 1973- ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் உள்ள கோழிகோட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், காவல் துறையினருக்கு என இரண்டு காவல் சட்டங்கள் உள்ளன. அவைகள் முறையே,
- 1. சென்னை பெருநகரக காவல் சட்டம் 1888
- 2. தமிழ்நாடு மாவட்டக் காவல் சட்டம் 1859
என சென்னை மாநகருக்கு என தனி காவல் சட்டமும், மற்ற மாவட்டங்களுக்கு என தனி சட்டமும் உள்ளது. இது தவிர தமிழ்நாடு காவல் நிலை ஆணையும் உள்ளன. இந்த.காவல் நிலை ஆணை சுமார் 800 பிரிவுகளை கொண்டதாக இருக்கிறது. இந்த ஆணையை தனியார் பதிப்பகங்கள் தமிழில் வெளியிடவில்லை.
இந்த காவல் நிலை ஆணையை காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளே கண்ணால் பார்த்திருப்பார்களா? என்பது சந்தேகமே! ஏனெனில், இந்த காவல் நிலை ஆணையை தமிழ்நாடு அரசு தமிழில் 1972-ஆம் ஆண்டில் “அலுவலக உபயோகத்திற்காக” என வெளியிட்ட பின் இதுவரை வெளியிடவில்லை. எப்படி ஒரு தனிநபர் சட்ட நூலுக்கு உரிமை கொண்டாட முடியாதோ அதே போல்தான் அரசும் என்பதால் “அலுவலக உபயோகத்திற்காக” என வெளியிட்டது சட்டப்படி சரியல்ல. இதன் நகல் பிரதி
தேவைப்படுவோர் எங்களை தொடர்பு கொள்ளலாம். காவற்படைச் சட்டம் 1861 என்ற மத்திய அரசின் சட்டத்தின்படி மாநில அரசுகள் தமது அதிகாரத்தின் கீழ் உள்ள பல்வேறு காவல் பொறுப்பை சேர்ந்தவர்களை ஒருங்கிணைத்து, இதில் பணியாற்றுபவர்களுக்கான சிறப்பான பெயர்ப்பட்டியல் மூலம் செயல்பட்டு வருகிறது.
காவல் துறையின் செயல்பாடுகளை பற்றி முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள் கு.வி.மு.வி உடன் மேற்கண்ட காவல் தொடர்பான சட்டங்களையும், நிலையாணைகளையும் சேர்த்து படிக்க வேண்டியிருக்கும்.
காவல் துறைப் பணியாளர்கள் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகிறார்கள்.
- 1. கீழ் நிலை காவலர்கள்
- 2. காவல் நிலையப் பொறுப்பு அலுவலர்கள்,
- 3. மேல் நிலை காவலர்கள்.
இதில் காவல் நிலையத்தில் பணியாற்ற கூடியவர்களை எடுத்து கொண்டால் முதல் நிலைக் காவலர், இரண்டாம் நிலைக் காவலர் மற்றும் தலைமைக் காவலர் என்ற தகுதியில் உள்ளவர்கள் கீழ் நிலை காவலர் ஆவார்கள். தலைமைக் காவலர் அந்தஸ்தில் உள்ள ஒருவர் எழுத்தராக அதாவது ரைட்டர் ஆக இருப்பார்.
இவர்கள் தவிர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர், ஆய்வாளர் என்ற வகையில் காவல் நிலையப் பொறுப்பு அதிகாரத்தில் ஒருவர் இருப்பார். அதாவது அந்த காவல் நிலையத்தைப் பொறுத்த வரை இவர்கள் தான் பொறுப்பாளிகளாக இருப்பார்கள்.
மற்றவர்கள் எல்லாம் மேல்நிலைக் காவலர்கள் என்ற தகுதியில் உள்ளவர்கள். அதாவது ஆய்வாளருக்கு மேல் துணைக் கண்காணிப்பாளர், உதவிக் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர், இணைக் கண்காணிப்பாளர், காவல் துறைக் கண்காணிப்பாளர், காவல் துறை துணைத் தலைவர், காவல் துறைத் தலைவர், காவல் துறைத் தலைமை இயக்குநர் என்ற வகையில் மேல் நிலை காவலர்கள் செயல்படுகிறார்கள்.

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 34. காவலர்களின் வகைகள் மற்றும் அதிகாரங்கள். சட்டத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு எப்படி சட்டங்கள் தெரிவது இல்லையோ, அதே போல் காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் கூட காவல் துறை பற்றி தெளிவாக தெரிவதில்லை. எனக்கு நீதித்துறையில் போராடி தெரிந்து கொண்ட உரிமை விசயங்களை விட காவல்துறையில் போராடிய அனுபவம் மிக மிக குறைவே.இருப்பினும் உங்களுக்கு தெரியப்படுத்தணும் அப்படீங்கிற…
🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 34. காவலர்களின் வகைகள் மற்றும் அதிகாரங்கள். சட்டத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு எப்படி சட்டங்கள் தெரிவது இல்லையோ, அதே போல் காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கும் கூட காவல் துறை பற்றி தெளிவாக தெரிவதில்லை. எனக்கு நீதித்துறையில் போராடி தெரிந்து கொண்ட உரிமை விசயங்களை விட காவல்துறையில் போராடிய அனுபவம் மிக மிக குறைவே.இருப்பினும் உங்களுக்கு தெரியப்படுத்தணும் அப்படீங்கிற…