குற்ற விசாரணைகள்

1/35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி?

”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது. 

35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி?

பொதுவாக நீங்கள் குற்றம் தொடர்பான புகாரை காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும் என நினைப்பீர்கள். உண்மை அதுவல்ல. காவல் நிலையத்தில் மட்டுமேதான் புகாரைக் கொடுக்க வேண்டும் என்று சட்டமும், விதியும் சொல்லவில்லை. இருப்பினும் காவல் துறையில் புகாரைப் பதிவு செய்வது எப்படி கொடுப்பது என்பதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது தானே?

காவல் நிலையத்திற்கு மட்டுமல்லாது நீங்கள் எந்த மனுவை யாருக்கு எழுதினாலும், சட்ட பிரிவு போட்டு எழுதினா நீங்க என்ன சொல்ல நினைக்கிறீங்க என்பதை சட்ட விளக்கத்தோட புரிஞ்சிகிட்டு மனுவை பெறுகிறவர்களும், அதற்கு தக்கவாறு செயல்பட வேண்டும். என்பதற்காகத் தான் சட்ட பிரிவை குறிப்பிட்டு எழுதுவது. இது சட்டபடி முறையானதும் கூட. காவல் நிலையத்துக்கு புகார் எழுதும் போது இது போன்ற சட்டப் பிரிவுகளை எழுதினிங்க அப்படீன்னா அவங்க உண்மையிலேயே சந்தோசம்தானே படணும்? ஆனா அவங்களோ அப்படி ஒரு கோபத்துக்கு உள்ளாகிடுவாங்க.

போலீஸ்கிட்ட மட்டும் யாரும் சட்டம் பேசக் கூடாது அப்படீன்னு எந்த சட்டம் சொல்லுது அப்படீன்னு நானும் இது வரைக்கும் தேடிகிட்டே தான் இருக்கேன். ஆனாலும் கிடைத்த பாடில்லை. இருந்தால்தானே கிடைப்பதற்கு? அவங்க கோபத்துக்கு என்ன காரணம் என்றால், நீங்க அவங்களுக்குச் சட்டம் சொல்லி கொடுக்க, அதை அவங்க படிக்க, அப்புறம் சட்டப்படி நடக்க ஆரம்பித்து நல்லவங்களா மாறி வித்தியாசமான ஆளா ஆயிட்டா என்ன பன்றது அப்படீங்கிற பயம் தான். என்னோட நண்பர் ஒருவருக்கு, ‘மகாத்மா காந்தியின் சுய சரிதையான சத்திய சோதனை கொடுத்து படிக்க சொன்னேன். அய்யோ வேண்டவே வேண்டாம்” இந்த வம்பு… இதை படிக்க போயி அப்புறம் அதுபடி நடக்கணும் அப்படீங்கிற எண்ணம் வந்திட்டா, அப்புறம் என்னோட குணத்தன்மையே மாறி போயிடும் அப்படீன்னு வாங்க மறுத்து விட்டார். நான் அவருக்கு புத்தகம் எதற்காக கொடுக்கிறேன் என்பது போலீஸ்காரங்களை போலவே அவருக்கும் தெரிஞ்சி பேச்சு அப்படீன்னு தானே?

AIARA

🔊 Listen to this ”நீதியைத்தேடி” -சட்டப் பல்கலைக் கழகம், புத்தகம்-குற்ற விசாரணைகள், ஆசிரியர்-வாரண்ட் பாலா, Pdf மறு பதிப்பு-MMY ஹமீது.  35. காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்வது எப்படி? பொதுவாக நீங்கள் குற்றம் தொடர்பான புகாரை காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும் என நினைப்பீர்கள். உண்மை அதுவல்ல. காவல் நிலையத்தில் மட்டுமேதான் புகாரைக் கொடுக்க வேண்டும் என்று சட்டமும், விதியும் சொல்லவில்லை. இருப்பினும் காவல் துறையில் புகாரைப்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *